வெளியானது அதிரடி அறிவிப்பு... தீபாவளிக்கு சரவெடியாய் வெடிக்க போகும் டிவிஎஸ்... போட்டி நிறுவனங்களுக்கு உதறல்!
தீபாவளி பண்டிகைக்கு டிவிஎஸ் நிறுவனம் சரவெடியாய் வெடிக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்று ரைடர் 125 (TVS Raider 125). இதன் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது முழுமையாக தயாராகி விட்டது. இந்த புதிய மாடலுக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக் வரும் அக்டோபர் 19ம் தேதி (October 19) அறிமுகம் செய்யப்படும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் இந்திய சந்தையில் நாளை மறுநாள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

டிவிஎஸ் மோட்டோவெர்ஸ் (TVS Motoverse) என்று அழைக்கப்படும் டிவிஎஸ் நிறுவனத்தின் மெட்டாவெர்ஸ் பிளாட்பார்மில் (Metaverse Platform), 2022 ரைடர் 125 பைக்கின் அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். 2022 ரைடர் 125 பைக்கின் டீசரை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த டீசரில், 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் அறிமுக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 2022 ரைடர் 125 பைக் குறித்த விரிவான தகவல்கள் எதையும் டிவிஎஸ் வெளியிடவில்லை. ஆனால் ப்ளூடூத் அடிப்படையிலான ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் (SmartXonnect) கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் புதிய 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் இன்ஜினில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது என கூறப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 124.8 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின்தான் 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிலும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11.2 பிஹெச்பி பவரையும், 11.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். எனினும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் டிசைனில் மாற்றங்களை செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் புதிய கிராஃபிக்ஸ் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர ஈக்கோ மற்றும் பவர் என 2 ரைடிங் மோடுகள், ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், முழு எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் ஆகிய அம்சங்களும் 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில்தான் ரைடர் 125 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. குறிப்பாக இதன் டிசைன் அட்டகாசமாக உள்ளது. 125 சிசி பைக்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ரைடர் பைக்கை வடிவமைத்துள்ளது.

அப்படிப்பட்ட பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மேம்படுத்துவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. எனவே புதிய மாடலின் வருகைக்கு பின்னர், இந்தியாவில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் புதிய அப்டேட்கள் செய்யப்படுவதன் காரணமாக, தற்போது இருப்பதை விட, 2022 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் விலை எவ்வளவு? என்பதை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடும். புதிய மாடலின் விலையை தெரிந்து கொள்வதற்கு அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்ட 2022 ரைடர் 125 பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய பைக் வாங்குபவர்களை கவர்வதற்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








