2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

புதிய தலைமுறை எம்டி-15 பைக்கின் முன்பதிவுகள் சில குறிப்பிட்ட யமஹா டீலர்ஷிப் மையங்களில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

யமஹாவின் சமீபத்திய வெற்றிக்கரமான மாடலாக எம்டி-15 ஹைப்பர்-நாக்டு மோட்டார்சைக்கிளை சொல்லலாம். இதன் விற்பனை கடந்த சில வருடங்களில் நல்லப்படியாகவே முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் இதனை அப்கிரேட் செய்ய வேண்டிய நேரத்தில் யமஹா உள்ளது.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

பிரபலமான ஆர்15 மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுறை ஆர்15 வி4 என்கிற பெயரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய தலைமுறை ஆர்15 வி3 உடன் ஒப்பிடுகையில் புதிய ஆர்15 வி4-இன் தோற்றம் மெருக்கேற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஆர்15 பைக்கின் எடை முன்பை காட்டிலும் மாற்றம் கண்டுள்ளது.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

இதேபோன்றதான அப்டேட்டையே எம்டி15 பைக்கிலும் வாடிக்கையாளர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கேற்ப யமஹா சில வாரங்களுக்கு முன்பு எம்டி15 பைக்கின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. இது புதிய தலைமுறையின் வருகையை சுட்டிக்காட்டுவதாக இருந்தது. இந்த நிலையில் எதிர்பார்த்தப்படி, எம்டி-15 வெர்சன் 2.0-வின் முன்பதிவுகள் சில டீலர்ஷிப் மையங்களில் துவங்கப்பட்டுள்ளன.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

இதனை வெளிக்காட்டு வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் இச்சல்கரஞ்சி நகரத்தில் உள்ள நிகம் யமஹா என்ற யமஹா டீலர்ஷிப் மையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தினையே மேலே காண்கிறீர்கள். முன்தொகைகள் ரூ.2,000இல் இருந்து ரூ.10,000 வரையில் டீலர்ஷிப் மையத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

இவ்வாறு ஒவ்வொரு டீலர்ஷிப் மையமாக புக்கிங் ஸ்டார்ட் செய்யப்பட்டு வருவதால் புதிய எம்டி-15 வெர்சன் 2.0 பைக்கின் அறிமுகத்தை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம். டெலிவிரிகள் இந்த ஏப்ரல் மாத 2ஆம் வாரத்தில் துவங்கப்படலாம். புதிய தலைமுறை எம்டி-15 பைக்கிற்கு க்ரே, வெள்ளை, பளபளப்பான கருப்பு மற்றும் ரேசிங் நீலம் என்கிற நான்கு புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

ஆர்15 பைக்கின் நாக்டு வெர்சன்தான் எம்டி-15 பைக் என்பதால், ஆர்15 வி4 பைக்கில் கொண்டுவரப்பட்ட அப்டேட்களை எம்டி-15 வெர்சன் 2.0 பைக்கிலும் எதிர்பார்க்கலாம். இந்த வகையில் புதிய எம்டி15 பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு புதியதாக அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளுக்கு பதிலாக தலைக்கீழான ஃபோர்க்குகள் கொடுக்கப்படலாம்.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

ஏனெனில் தற்கால மாடர்ன் நாக்டு ரோட்ஸ்டர் பைக்குகளுக்கு தலைக்கீழான ஃபோர்க்குகளே முன்பக்கத்தில் ஏற்றதாக இருக்கும். ஆனால் பின்பக்கத்தில் ப்ரீலோடு-அட்ஜெஸ்ட் வசதி உடன் உள்ள மோனோ-ஷாக்கில் எந்த மாற்றமும் இருக்காது. அதேபோல் எம்டி15 பைக்கின் முன் சக்கரத்தில் 282மிமீ டிஸ்க் மற்றும் பின் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் என பிரேக் அமைப்புகளிலும் அப்டேட் வழங்கப்பட வாய்ப்பில்லை.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

ஆனால் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-க்கு பதிலாக, இரட்டை-சேனல் ஏபிஎஸ் எதிர்பார்க்கப்படுகிறது. எம்டி15 நாக்டு பைக்கில் முன் & பின் சக்கரங்கள் 17-இன்ச்சில் வழங்ப்படுகின்றன. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்படுகின்ற விவிஏ தொழிற்நுட்பத்துடனான அதே 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் புதிய எம்டி-15 பைக்கிலும் வழங்கப்படும்.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.1 பிஎச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ப்ளூடூத் இணைப்பு வசதி புதிய எம்டி15 பெற்றுவர உள்ளது. யமஹா ஒய்-கனெக்ட் செயலி மூலமாக செயல்படக்கூடியதாக உள்ள இந்த வசதி ஆர்15 வி4 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பு மற்றும் விரைவு-கியர் மாற்றி உள்ளிட்ட புதிய அம்சங்களையும் புதிய தலைமுறை எம்டி15 பைக்கில் எதிர்பார்க்கிறோம். உடற்பேனல்களில் கிராஃபிக்ஸ் திருத்தியமைக்கப்பட்டாலும், யமஹா எம்டி15 பைக்கின் வழக்கமான இரட்டை-கண் தோற்றத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் பெட்ரோல் டேங்க் சற்று பருமனான தோற்றத்திற்கு கொண்டுவரப்படலாம்.

2022 யமஹா எம்டி15 பைக்கிற்கு புக்கிங் ஸ்டார்ட்!! காத்திருந்தது போதும்... அறிமுகம் விரைவில்!

புதிய முன்பக்க சஸ்பென்ஷன் யூனிட் பைக்கில் இருந்து தனித்து தெரியும் வகையில் தங்க நிறத்தில் வழங்கப்பட உள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டு வருவதால் மிக விரைவில் ஷோரூம்களில் புதிய யமஹா எம்டி-15 வெர்சன் 2.0 பைக்குகளை காணலாம். அப்டேட்களுக்கு ஏற்ப இதன் விலை முன்பை காட்டிலும் நிச்சயமாக சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 2, 2022, 14:18 [IST]
English summary
2022 yamaha mt15 bookings open ahead of india launch
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+