யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வந்த யமஹா எம்டி15 பைக்குகள் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் வெறும் 17 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

பிரபலமான ஆர்15 பைக்கை அடிப்படையாக கொண்டதே எம்டி15 என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஆர்15-இன் நாக்டு வெர்சன் தான் எம்டி15 எனலாம். ஏனெனில் இவை இரண்டிலும் ஒரே மாதியான சேசிஸ் மற்றும் என்ஜின் அமைப்பு தான் வழங்கப்படுகின்றன.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

ஆர்15 மோட்டார்சைக்கிள் புதிய நான்காம் வெர்சன் ஆர்15 வி4 என்கிற பெயரில் கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரையில் எம்டி15 பைக்கிற்கு எந்தவொரு அப்கிரேடும் வழங்கப்படவில்லை. இதனால் மிக விரைவில் 2022 எம்டி15 பைக்கின் அறிமுகத்தினை எதிர்பார்க்கலாம்.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

அதுமட்டுமின்றி புதிய எம்டி15 பைக்கை கொண்டுவருவதற்கான நேரமும் வந்துவிட்டது. ஏனெனில் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் வெறும் 17 எம்டி15 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே இதற்கு முந்தைய 2021 டிசம்பரில் 1,756 எம்டி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2021 டிசம்பர் மாதத்திலாவது பரவாயில்லை, 2021 ஜனவரியில் கிட்டத்தட்ட 6,168 எம்டி பைக்குகள் விற்கப்பட்டன.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

கடந்த மாத 17 யூனிட்களின் விற்பனை உடன் 2021 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தோமேயானால், கடந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 99.72 சதவீதம அதிக எண்ணிக்கையில் எம்டி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 ஜனவரியில் இந்த நாக்டு யமஹா பைக்கின் விற்பனை எண்ணிக்கை 6 ஆயிரம் ஆக இருக்க, அதனை தொடந்த மாதங்களில் எம்டி15 பைக்கின் விற்பனை ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்தது.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

அதிகப்பட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் எம்டி15 பைக்கின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5 ஆயிரம் மற்றும் 6 ஆயிரத்தை கடந்தன. ஆனால் இதற்கிடையிலான மாதங்களில் ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் என்ற அளவிலேயே இந்த யமஹா பைக்கின் விற்பனை இருந்து வந்தது. அதுவே 2022ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் ஒரேடியாக வெறும் 17 யூனிட்களாக குறைந்துள்ளது.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

முந்தைய மாதத்தில் (2021 டிசம்பர்) கிட்டத்தட்ட 1,756 யூனிட்கள் விற்பனையான ஒரு பைக் அதற்கடுத்த மாதத்தில் வெறும் 17 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருப்பது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அப்டேட் செய்யப்பட்ட எம்டி15 பைக்குகளை உருவாக்கும் பணியில் ஏற்கனவே யமஹா இறங்கி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

இதன் காரணமாக தற்போதைய எம்டி15 பைக்கின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதினாலேயே கடந்த மாதத்தில் வெறும் 17 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன என நினைக்கிறோம். ஆதலால் இந்த விற்பனை குறைவு தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைவலியாக அமையாது. புதிய எம்டி15 பைக்கின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என்பது உண்மையெனில், இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

இந்த வகையில் அப்டேட் செய்யப்படும் எம்டி15 பைக்கின் ஸ்டைலில் சில அப்கிரேட்கள் கொண்டுவரப்படும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் அதேநேரம் ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்பட்டதுபோல் புதிய எம்டி15 பைக்கின் இயந்திர பாகங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

ஆனால் இவை என்னென்ன என்பது பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பிறகே தெரியவரும். தற்போதைய அவதாரத்தில், இரட்டை-கண் வடிவிலான எல்இடி டிஆர்எல்-களுடன் பிரோஜெக்டர் ஹெட்லேப்கள், நீட்டிப்புகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், அகலமான ஹேண்டில்பார் மற்றும் நறுக்கப்பட்டது போன்றதான வடிவில் பின்பக்க முனை பகுதினை எம்டி15 பைக் பெறுகிறது.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

புதியதாக கொண்டுவரப்படும் 2022 எம்டி15 பைக்கில் மேற்கூறப்பட்ட இந்த பாகங்களின் ஸ்டைலில் சில திருத்தங்கள் வழங்கப்படலாம். அதேபோல் புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்படவும் அதிக வாய்ப்புள்ளது. இவற்றுடன் விரைவு கியர்மாற்றி, டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் யமஹாவின் ஒய்-கனெக்ட் இணைப்பு வசதி உடன் முழு-டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவற்றையும் யமஹா வழங்கலாம்.

யமஹா எம்டி15 பைக்கை வாங்கும் ப்ளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! அப்டேட் வெர்சன் தயாராகி வருகிறது!

இத்துடன் காஸ்மெட்டிக் அப்டேட்களாக புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பெயிண்ட் தேர்வுகள் எம்டி15 பைக்கிற்கு கொடுக்கப்படலாம். தற்சமயம் எம்டி15 பைக் மெட்டாலிக் கருப்பு, அடர் மேட் நீலம் மற்றும் ஐஸ் ஃப்ளூ-வெர்மிலன் என்கிற நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசனிலும் இந்த நாக்டு பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 17, 2022, 15:03 [IST]
English summary
2022 yamaha mt15 launch nears sales down to 17 units
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+