ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி இந்தியாவில் அதன் புதிய சூப்பர் பைக்காக 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் (2023 Ninja ZX-10R) மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கின் விலை உள்பட முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

ஒரு காலத்தில் 1000சிசி பைக்குகள் என்றால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் 1000சிசி பைக்குகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

இதில் முக்கியமாக, கவாஸாகி நிறுவனத்தின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய கவாஸாகி நிறுவனத்தில் இருந்து தற்போது மற்றொரு புதிய 1000சிசி பைக்காக 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.15.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டாலும், 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கை லைம் பச்சை மற்றும் பேர்ல் ரோபோட்டிக் வெள்ளை என இரு விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம். 2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக புத்தம் புதிய கிராஃபிக்ஸில் இந்த பைக்கை கவாஸாகி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த புதிய கிராஃபிக்ஸ் தான் முந்தைய வெர்சனில் இருந்து 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கை வேறுப்படுத்தி காட்டுகிறது. ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டாலும், 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கை லைம் பச்சை மற்றும் பேர்ல் ரோபோட்டிக் வெள்ளை என இரு விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம். 2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக புத்தம் புதிய கிராஃபிக்ஸில் இந்த பைக்கை கவாஸாகி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த புதிய கிராஃபிக்ஸ் தான் முந்தைய வெர்சனில் இருந்து 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கை வேறுப்படுத்தி காட்டுகிறது.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

அதாவது, கிராஃபிக்ஸ் டிசைனை தவிர்த்து இந்த புதிய 1000சிசி நிஞ்சா பைக்கில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வழக்கமான இரட்டை-ஸ்பார் வகையை சேர்ந்த காஸ்ட் அலுமினிய ஃப்ரேமின் அடிப்படையிலேயே 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் மோட்டார்சைக்கிளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 17 லிட்டர்கள் கொள்ளவிலான பெட்ரோல் டேங்கின் அளவிலும் எந்த மாற்றமும் இல்லை.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

பைக்கின் முன்பக்க விங்லெட்கள் இம்முறை ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது அதிவேகத்தின்போதும், வலுவாக ஆக்ஸலரேஷனை கொடுக்கும்போதும் பைக்கிற்கு டவுன் ஃபோர்ஸை அதிகமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ‘ராம் இண்டேக்' (Ram Intake) என்ற பெயரில் புதிய ஏர் இண்டேக்கையும் கவாஸாகி நிறுவனம் இந்த சூப்பர்பைக்கிற்கு வழங்கியுள்ளது.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

மற்றப்படி, இரட்டை-பேட் எல்இடி ஹெட்லைட்கள், நேர்த்தியான டெயில்லேம்ப், பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவை வழக்கம்போல் அப்படியே பொருத்தப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் 4.3-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக் பெற்று வந்துள்ளது.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

இதனுடன் டபுள்-சேனல் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் த்ரோட்டல் மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள் போன்ற தொழிற்நுட்ப அம்சங்களும் தொடரப்பட்டுள்ளன. அதேபோல் வழக்கமான 998சிசி, 4-சிலிண்டர், DOHC என்ஜினையே 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் மோட்டார்சைக்கிளும் பெற்றுள்ளது.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

13,200 ஆர்பிஎம்-இல் 200.2 பிஎச்பி (ராம் இண்டேக் உடன் 210.3 பிஎச்பி) மற்றும் 11,400 ஆர்பிஎம்-இல் 114.9 என்எம் டார்க் திறன் வரையில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சிறந்த ஆக்ஸலேரேஷனுக்காக பெரிய ஸ்ப்ராக்கெட் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளதால், முதல் 3 கியர்கள் விரைவாகவே கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

தரையில் இருந்து புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கில் ஓட்டுனர் இருக்கை ஆனது 835மிமீ உயரத்தில் உள்ளது. அதுவே தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி (க்ரவுண்ட் க்ளியரென்ஸ்) 135மிமீ உயரத்தில் வடிவமைக்கப்படுகிறது. இந்த கவாஸாகி சூப்பர்பைக் சற்று எடைமிக்கது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதன் எடை 207 கிலோ ஆகும்.

ரூ.15.99 லட்சத்தில் புதிய 1000சிசி கவாஸாகி பைக் - 2023 நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர்!! இந்தியாவில் அறிமுகம்...

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ தலைக்கீழான பேலன்ஸ் ஃப்ரீ ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு-சார்ஜ்டு மோனோ-ஷாக் யூனிட்டும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 330மிமீ-இல் பிரெம்போ டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் 220மிமீ-இல் டிஸ்க் பிரேக்கும் கவனித்து கொள்ள பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2023 kawasaki ninja zx 10r launched in india at rs 15 99 lakh
Story first published: Thursday, September 8, 2022, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X