கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டின் 'கிங்' என்பதை ராயல் என்பீல்டு நிறுவனம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5, 350-சிசி பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல முழுக்க முழுக்க ராயல் என்பீல்டு நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன்படி இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டின் 'கிங்' என வர்ணிக்கப்படும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் இந்த பட்டியலில் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 25,425 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 17,377 ஆக மட்டுமே இருந்தது. இது 46.3 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே மிகப்பெரிய வளர்ச்சி சதவீத்தை பதிவு செய்திருப்பது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை கடந்த 2021ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது அதன் விற்பனை எண்ணிக்கை மூலமாக நமக்கு தெரிய வருகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இதற்கிடையே இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 8,645 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 8,770 ஆக இருந்தது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்குகளின் விற்பனை 1.4 சதவீதம் குறைந்துள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கும், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கிடையே இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் (Royal Enfield Bullet 350) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 5,893 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 5,317 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனையில் 10.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அனேகமாக 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இதற்கிடையே இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு எலெக்ட்ரா 350 (Royal Enfield Electra 350) பைக் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 4,363 எலெக்ட்ரா 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 3,137 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ராயல் என்பீல்டு எலெக்ட்ரா 350 பைக் விற்பனையில் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இந்த பட்டியலில் முதல் 4 இடங்களையும் ராயல் என்பீல்டு நிறுவனமே தன்வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 350 சிசி செக்மெண்ட்டின் 'கிங்' என்பதை ராயல் என்பீல்டு நிறுவனம் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக உறுதிபடுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு அல்லாமல் வேறு ஒரு நிறுவனம் இடம் பிடித்துள்ளது என்றால், அது ஹோண்டா மட்டுமே.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

ஹோண்டா நிறுவனத்திற்கு இந்த பெருமையை பெற்று தந்திருப்பது சிபி350 (Honda CB350) பைக் ஆகும். ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 2,120 சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,853 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 14.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஹோண்டா சிபி350 பைக் அசத்தியுள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியே இல்ல... நான்தான் 'கிங்' என்பதை மீண்டும் நிரூபித்த ராயல் என்பீல்டு!

இதற்கிடையே இந்த பட்டியலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்ள, ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) என்ற புதிய பைக்கை வெகு விரைவில் இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளதால், அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2022, 8:48 [IST]
English summary
350cc bikes sales june 2022 royal enfield classic 350 tops the list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+