ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

பெரியதாக ஸ்டைலிஷாக இல்லாத விலை குறைவான மோட்டார்சைக்கிள்களை வாங்க மனதும் இல்லாமல், அதேநேரம் விலைமிக்க மோட்டார்சைக்கிளை வாங்க பணமும் இல்லாமல் இருக்கிறீர்களா? அத்தகைய சமயத்தில் எந்த மாதிரியான பைக்கை தேர்வு செய்வது என்கிற குழப்பம் தலையை பிய்த்து கொள்ளும்.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

எங்களை கேட்டால் சற்று விலைமிக்க மோட்டார்சைக்கிளை போதுமான ஸ்டைலில் வாங்குவது சிறந்தது. அதாவது ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சத்திற்குள் விலை கொண்ட மோட்டார்சைக்கிளை வாங்கலாம். உங்களுக்காகவே அத்தகைய விலையில் கிடைக்கக்கூடிய 5 மோட்டார்சைக்கிள்களை இந்த செய்தியில் பதிவிட்டுள்ளோம்.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

1. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்

இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்டாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப்பின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானவை என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய தயாரிப்புகளுள் ஒன்றுதான் எக்ஸ்ட்ரீம் 160ஆர். தற்சமயம் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.18 லட்சமாக உள்ளது.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

இந்த ஹீரோ பைக்கில் 163சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 15.2 பிஎஸ் மற்றும் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 163சிசி என கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற செயல்படுதிறனை வழங்கும் அதேவேளையில் ஸ்டைலிலும் எக்ஸ்ட்ரீம் 160ஆர்-இல் எந்த குறையும் இல்லை.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

2. சுஸுகி ஜிக்ஸெர்

இந்தியாவில் 155சிசி ஏர்-கூல்டு என்ஜினை பெறும் மிகவும் சில விலை குறைவான பைக்குகளுள் சுஸுகி ஜிக்ஸெரும் ஒன்று. நாக்டு பைக்கான ஜிக்ஸெரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.31 லட்சம். பேனல் அதிகம் கொண்ட ஜிக்ஸெர் எஸ்.எஃப் பைக்கின் விலை ரூ.1.36 லட்சம் ஆகும்.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

இவற்றில் பொருத்தப்படும் 155சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 13.6 பிஎஸ் மற்றும் 13.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து வலிமையான செயல்படுதிறன் மற்றும் சிறப்பான மைலேஜை வழங்குகின்றன.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

3. யமஹா எஃப்.இசட்

யமஹாவின் எஃப்.இசட் பைக்குகளை பொறுத்தவரையில், இவை மற்ற போட்டி மாடல்களை காட்டிலும் அதிக இயக்க ஆற்றலை பெறுவதில்லை என்பது என்னவோ உண்மை தான். ஆனால் ரைடிங் அனுபவமும், பைக்கின் இயக்கமும் எவரொருவரையும் கவரக்கூடியவையே.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

எஃப்.இசட் பைக்குகளில் 149சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 12.4 பிஎஸ் மற்றும் 13.3 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் தற்சமயம் யமஹா எஃப்.இசட் பைக்குகளின் விலைகள் ரூ.1.13 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

4. பஜாஜ் பல்சர் 150

பல்சர் பைக்குகளுக்கு அறிமுகமே தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு பல்சர் பைக்குகள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைந்துள்ளன. பல்சர் பைக்குகள் தற்சமயம் 125சிசி-இல் இருந்து 250சிசி வரையில் உள்ளன. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்ப்பதற்கு ஏற்றது பல்சர் 150 ஆகும்.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

பல்சர் 150 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை தற்போதைக்கு ரூ.1.14 லட்சம் என்கிற அளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படும் 149.5சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 14 பிஎஸ் மற்றும் 13.25 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

5. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160

பல்சர் பைக்குகளை போன்று, இந்தியாவில் பிரபலமான பைக் மாடலாக டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல், பல்சர் 150-க்கு இணையாக ரூ.1.17 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து அப்பாச்சி பைக்குகள் விற்பனையாகுகின்றன.

ரூ.1.5 லட்சம் இருந்தால் போதும்... இந்த ஸ்போர்டியான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றை வாங்கிடலாம்!!

ஆனால் பல்சர் 150 பைக்கை காட்டிலும் அப்பாச்சி ஆர்டிஆர்160 சிறிது ஆற்றல் மிக்கவைகளாக உள்ளன. ஏனெனில் ஆர்டிஆர்160-இல் பொருத்தப்படும் 159.7சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 17.55 பிஎஸ் மற்றும் 14.73 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அத்துடன், அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கில் பல்வேறு ரைடிங் மோட்களையும் டிவிஎஸ் வழங்குகிறது.

Article Published On: Saturday, October 22, 2022, 19:47 [IST]
English summary
5 sporty vfm bikes under rs 1 5 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+