டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... தானேவில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உரிமையாளர் ஒருவர் டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் வரை கட்டணம் செலுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)வும் ஒன்று. நம்மில் பலருக்கு இந்த ஸ்கூட்டரை இயக்கி பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என நம்புகின்றோம். அப்படியே இதை இயக்கி பார்க்கவில்லை என்றாலும், அதில் எத்தனை லிட்டர் பெட்ரோலை நிரப்ப முடியும் என்பது ஓரளவுக்கு தோராயமாக தெரிந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

இந்த ஸ்கூட்டரில் ஒரு டிராப்கூட இல்லை என்கிற நிலையில் அதை ஃபுல் டேங்க் நிரப்பினால்கூட முழுசா ஆறு லிட்டர் பெட்ரோலை ஸ்கூட்டர் பிடிப்பது சந்தேகமே. இத்தகைய குறைவான கொள்ளளவுக் கொண்ட எரிபொருளை பிடிக்கும் தொட்டியே ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை ஃபுல் செய்யப்பட்டதற்கே ரூ. 55 ஆயிரம் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

இந்த விசித்திரமான நிகழ்வு மஹாராஷ்டிரா மாநிலம் தானேவிலேயே அரங்கேறியிருக்கின்றது. மதோக் நேத்ரா ரித்தேஷ் என்பவர் கடந்த செப்டம்பர் 18ம் தேதி அன்று தானேவில் உள்ள விஷ்வநாத் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஷெல் பெட்ரோல் பங்கில், தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டிருக்கின்றார். டேங்கை முழுமையாக அவர் நிரப்பியதாகக் கூறப்படுகின்றது.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

இதற்கு ரூ. 550 கட்டணமாகியுள்ளது. இதை செலுத்தும்போதே தவறுதலாக ரூ. 55 ஆயிரம் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கின்றது. கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி க்யூஆர் கோட் மூலம் இதற்கான கட்டணத்தை ரித்தேஷ் செலுத்தியிருக்கின்றார். ரூ. 550 என டைப் செய்வதற்கு பதிலாக தவறுதலாக 55,053 ரூபாய் என ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உரிமையாளர்கள் டைப் செய்திருக்கின்றார்.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

இதன் விளைவாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்திற்கு ரூ. 55,053 பணபரிமாற்றம் ஆகியிருக்கின்றது. பெருந்தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது சில மணி நேரங்களிலே தெரிய வந்ததால், ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்கள் உரிய பெட்ரோல் நிர்வாகத்திடம் முறையிட்டு பின்னர் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

ஆனால், இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியும் தவறு செய்வாங்களா என்கிற கேள்வியே அவர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது. இதுபோன்று சிக்கல்கள் பல இதற்கு முன்னதாகவும் அரங்கேறியிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஒரு முறைக்கு இரு முறை பணம் வசூலிக்கப்பட்ட நிகழ்வுகளும்கூட இங்கு அரங்கேறியிருக்கின்றன.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

நெட்வொர்க் பிரச்னை காரணமாக ஒன்றிற்கு இரண்டு முறை பணம் வசூலிக்கப்பட்ட நிகழ்வுகள் இங்கு அதிகம் அரங்கேறியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே தவறான தொகை உள்ளீட்டால் இங்கு பெருந்தொகை கை மாறியிருக்கின்றது. ஆனால், இதில் கவனக் குறைவாக செயல்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

சில பெட்ரோல் பங்க்குகளில் ஊழியர்கள் வேண்டும் என்றே கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடுவது உண்டு. ஆனால், அந்த மாதிரியான தவறு இந்த சம்பவத்தில் அரங்கேறவில்லை என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. மனி தவறினாலேயே இந்த நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. அதேநேரத்தில் இதுமாதிரியான அதிக கட்டண வசூல் தவற்றை தவிர்க்க மனிதனின் தலையீடு இல்லாத கட்டணம் வசூல் முறை இருந்தால் மட்டுமே முடியும் என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள்.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

தற்போது மேற்கொள்ளப்படும் சுங்க கட்டண வசூல் முறையைப் போல் பெட்ரோலுக்கான கட்டண வசூலும் நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது. அதாவது, எரிபொருளை நிரப்பும் எந்திரத்துடன் கட்டணத்தை வசூலிக்கும் பிஓஎஸ் எந்திரம் ஒயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த எந்திரம், நிரப்பப்படும் எரிபொருளுக்கான தொகையை மட்டும் வசூலிக்கின்ற வகையில் செட்-அப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

டேங்க் ஃபுல் பண்ண ரூ. 55 ஆயிரம் செலுத்திய ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர்... மும்பையில் அரங்கேறிய விசித்திர சம்பவம்!

அவ்வாறு செய்யப்படுமானால் அதிக கட்டண வசூல் தவறு அரங்கேறுவதை முற்றிலுமாக தவிர்க்கப்படும். இருப்பினும், இங்குள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிலர் போடப்படாத பெட்ரோலுக்கு கணக்கைக் காண்பித்து கட்டணத்தை வசூலிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமாதிரியோனரிடத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதுதான் தற்போது முக்கிய கேள்விக்குறையாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே தானே விசித்திர பணபரிமாற்ற நிகழ்வு அரங்கேரியிருக்கின்றது.

Source: Rushlane

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Activa owner paid rs 55000 instead of inr 550 at shell petrol pump
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X