லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

நம்பவே முடியாத மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பலர் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற விரும்புகின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்குவதற்கு விருப்பம் இருந்தாலும், பலரால் அதனை செய்ய முடிவதில்லை.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

இதில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் பைக் ஒன்றை தேடி கொண்டிருப்பவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த கூடிய வகையிலான புத்தம் புதிய தயாரிப்பு ஒன்று இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கின் விலை எவ்வளவு? என்பது தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக இதனை வாங்க ஆசைப்படுவீர்கள். மோட்டோவோல்ட் மொபிலிட்டி (Motovolt Mobility) என்ற நிறுவனம் தற்போது அர்பன் எலெக்ட்ரிக் பைக் (Urbn Electric Bike) என்ற புதிய தயாரிப்பை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

மோட்டோவோல்ட் மொபிலிட்டி நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் உள்ளன. இந்த டீலர்ஷிப்களின் மூலம் அர்பன் எலெக்ட்ரிக் பைக்கை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது மோட்டோவோல்ட் மொபிலிட்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் அர்பன் எலெக்ட்ரிக் பைக்கை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

அர்பன் எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்வதற்கான தொகை வெறும் 999 ரூபாய் மட்டுமே. புதிய அர்பன் எலெக்ட்ரிக் பைக்கின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதனை ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. மேலும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

மோட்டோவோல்ட் அர்பன் எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் கூட மற்றொரு முக்கியமான சிறப்பம்சம்தான். ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ அதைதான் ரேஞ்ச் என குறிப்பிடுகின்றனர். இதன்படி அர்பன் எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் 120 கிலோ மீட்டர்கள் என மோட்டோவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது கழற்றி மாட்ட கூடிய வகையிலான பேட்டரி ஆகும். இது பிஐஎஸ் (BIS) தரச்சான்று பெற்ற பேட்டரி ஆகும். புதிய மோட்டோவோல்ட் அர்பன் எலெக்ட்ரிக் பைக் விலை குறைவானது என்றாலும் கூட, ஏராளமான வசதிகளை பெற்றுள்ளது. இதில், பல்வேறு ரைடிங் மோடுகள் உடன் பெடல் அஸிஸ்ட் சென்சார் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

அத்துடன் ஹேண்டில் லாக் போன்ற பல்வேறு வசதிகளும் மோட்டோவோல்ட் அர்பன் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஓட்டுபவர்களின் வசதிக்காக ஒருங்கிணைந்த ஸ்மார்ட்போன் செயலியையும் (Smartphone App) இந்த எலெக்ட்ரிக் பைக் பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய அர்பன் எலெக்ட்ரிக் பைக்கின் விலை வெறும் 49,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர பகுதிகளில் தினசரி ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலும், மிகவும் குறைவான விலையிலும் ஒரு எலெக்ட்ரிக் பைக்கை நிறைய பேர் சல்லடை போட்டு தேடி கொண்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் மோட்டோவோல்ட் மொபிலிட்டி நிறுவனத்தின் அர்பன் எலெக்ட்ரிக் பைக் மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம்.

லோன்லாம் போட வேண்டியதில்ல... மாச சம்பளத்துலயே ஈஸியா வாங்கீரலாம்... இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா!

இதுகுறித்து மோட்டோவோல்ட் மொபிலிட்டி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான துஷார் சௌத்ரி கூறுகையில், ''அர்பன் எலெக்ட்ரிக் பைக் அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு தீர்வை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் விலை 49,999 ரூபாய் மட்டுமே. சுலபமான மாத தவணை திட்டத்தின் மூலமும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை வாங்கி கொள்ளலாம்'' என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 29, 2022, 13:49 [IST]
English summary
Affordable electric bike launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+