உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சமீப காலமாக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்கள்தான் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிக அளவில் கவர்ந்து கொண்டுள்ளன.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் எஸ்1 (Ola S1) என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

இதில், ஓலா எஸ்1 ப்ரோ மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை தற்போதைய நிலையில் 1.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாயாக உள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

இதில், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே மிகவும் விலை உயர்ந்த தயாரிப்புகளாக கருதப்படுகின்றன. எனவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக வெகு சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடப்பு அக்டோபர் மாதத்தின் இறுதியில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த சூழலில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இது மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக காத்திருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

பாவிஷ் அகர்வால் தற்போது தனது அதிகாரப்பூர்வமான சமூக வலை தள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ''எங்களது தீபாவளி நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இது ஓலா நிறுவனத்தின் மிகப்பெரிய அறிவிப்புகளில் ஒன்று. உங்களை விரைவில் சந்திக்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

இதன் மூலம் ஓலா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 80 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மிகவும் விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை இந்த புதிய மாடல் பெறவுள்ளது.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ள காரணத்தால், வாடிக்கையாளர்கள் பலரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் பிரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனினும் இந்த குறையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

ஏனெனில் இது இந்தியாவின் மிகவும் விலை குறைவான பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும். விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மிகப்பெரிய அளவில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.

உறுதி பண்ணீட்டாங்க... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வரும் 22ம் தேதி லான்ச்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைந்த வேரியண்ட்டாக இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வரும் அக்டோபர் 22ம் தேதிதான் இது தொடர்பான தகவல்கள் நமக்கு உறுதியாக தெரியவரும். இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அக்டோபர் 22ம் தேதிக்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 9, 2022, 23:57 [IST]
English summary
Affordable ola electric scooter launch date
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+