புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் அறிமுகம்!! விலை எங்கயோ இருக்கு... வாங்க நினைப்பவர்கள் புக் செய்யலாம்!

உலகளவில் அதிகளவில் 1000சிசி என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உள்ளது. இதன் பிரபலமான 1000சிசி பைக்குகளுள் ஒன்று எஸ்1000ஆர்ஆர். ஜெர்மன் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் புதிய எஸ்1000ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் ஏற்கனவே தொழிற்நுட்ப அம்சங்கள் அதிகமாகவே வழங்கப்படும். அவை இந்த புதிய மாடலில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் நிச்சயமாக வழக்கத்தை காட்டிலும் மகிழ்ச்சியான ரைடிங் அனுபவத்தை புதிய எஸ்1000ஆர்ஆர் பைக்கில் எதிர்பார்க்கலாம். 2023ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களுடன் புதிய எஸ்1000ஆர்ஆர் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.25 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேஸ், ப்ரோ, ப்ரோ எம் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த பிஎம்டபிள்யூ பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.20.25 லட்சத்தில் புதிய BMW எஸ்1000ஆர்ஆர் பைக் அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் விலை தான் ரூ.20.25 இலட்சமாகும். ப்ரோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.22.45 இலட்சமாகவும், ப்ரோ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.45 இலட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய எஸ்1000ஆர்ஆர் பைக்கில் முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால், அது அதன் என்ஜின் தான். எஸ்1000ஆர்ஆர் பைக்கின் வழக்கமான 999சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்டதினால் இந்த என்ஜின் 14,000 ஆர்பிஎம் வரையிலான வேகத்தில் இயங்கும். அதிகப்பட்சமாக 13,750 ஆர்பிஎம்-இல் 206.5 பிஎச்பி மற்றும் 11,000 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த டிராக்‌ஷனிற்காகவும், விரைவான கியர் மாற்றத்திற்காகவும் இந்த கியர்பாக்ஸ் ஆனது குறுகிய செகாண்ட்ரீ கியர் விகிதத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 300kmph ஆகும்.

0-வில் இருந்து 100kmph வேகத்தை புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக் டிராக்‌ஷன் கண்ட்ரோலை புதிய ஸ்லைட் கண்ட்ரோல் செயல்பாட்டுடன் கொண்டுள்ளது. இதன் மூலமாக வளைவுகளில் திரும்புகையில் ஆக்ஸலரேட்டரை கொடுக்கும்போது இரு விதமான டிரிஃப்ட் ஆங்கிள்களை பைக்கில் பெற முடியும். அத்துடன் ஏபிஎஸ் செட்-அப்பையும் புதிய பிரேக் ஸ்லைட் கண்ட்ரோல் செயல்பாட்டுடன் இந்த பைக் பெற்று வந்துள்ளது.

இந்த பிரேக் செட்-அப் ஆனது பிரேக் கொடுத்து கொண்டே வளைவுகளில் பைக்கை சாய்க்க ரைடருக்கு உதவியாக இருக்கும். இவற்றுடன் புதிய ஸ்லிக் செட்-அப்பையும் புதிய எஸ்1000ஆர்ஆர் பைக் பெற்றுள்ளது. இந்த செட்-அப் ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டும்போதே பயன்படும். இவ்வாறு இயந்திர பாகங்கள் மட்டுமின்றி, பைக்கின் தோற்றமும் கவனித்தக்க அளவில் மெருக்கேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, 2023 எஸ்1000ஆர்ஆர் பைக்கிற்கு புதிய ஏரோ விங்லெட்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் கொடுத்துள்ளது.

இது பைக்கின் முன்பக்கம் கீழ்நோக்கி அழுத்தப்படும் விசையை மேலும் 10 கிலோ அதிகரித்துள்ளது. கடைசியாக இந்த பிஎம்டபிள்யூ பைக் 2019இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடலுடன் ஒப்பிடுகையில் 2023 எஸ்1000ஆர்ஆர் பைக்கின் ஹெட்லைட்கள் கூடுதல் கூர்மையான வடிவிலும், எதிர்காற்றை தடுக்கும் விண்ட் ஸ்க்ரீன் அளவில் பெரியதாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய எஸ்1000ஆர்ஆர் பைக்கில் அலுமினியத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் முன் சக்கரத்தில் 120/70 ஆர்17 என்ற முகவரி கொண்ட டயர் பொருத்தப்பட்டுள்ளது.

பின் சக்கரத்திற்கு 190/55 ஆர்17 என்ற முகவரி கொண்ட டயர் வழங்கப்பட்டுள்ளது. அலுமினியத்திலான சக்கரங்கள் 2023 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் பேஸ் மற்றும் ப்ரோ வேரியண்ட்களுக்கு மட்டுமே. சற்று அதிகம் விலை கொண்ட டாப் வேரியண்ட்டான ப்ரோ எம் ஸ்போர்ட் வேரியண்ட் கார்பன்-ஃபைபர் சக்கரங்களுடன் கிடைக்கும். சக்கரங்கள் மட்டுமின்றி இந்த உயர்நிலை வேரியண்ட் மற்ற வேரியண்ட்களில் இருந்து வித்தியாசப்படும் வகையிலும், எடை குறைவிற்கு காரணமாகவும் சில பிரத்யேக அம்சங்களை பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 10, 2022, 19:33 [IST]
English summary
All new bmw s1000 rr launched in india at rs 20 25 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+