சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

இந்தியாவின் குறிப்பிட்ட ஓர் மாநிலத்தில் ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்ககு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் விரும்பும் டூ-வீலர்களாக ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. சில நேரங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தையே மிஞ்சும் அளவிற்கு ஹோண்டா இருசக்கர வாகனங்கள் நம் இந்தியாவில் விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

இந்த மாதிரியான சூப்பரான விற்பனை வளர்ச்சியின் காரணமாக தற்போது இந்தியாவில் ஹோண்டா டூ-வீலர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக, ஓர் மாநிலத்தில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அபரீதமான டிமாண்ட் நிலவி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஒற்றை மாநிலத்தில் மட்டும் நிறுவனம் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான டூ-வீலர்களை விற்பனைச் செய்திருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரேதசம் மாநிலத்திலேயே நிறுவனம் நம்ப முடியாத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி உபி மாநிலத்தில் மட்டும் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹோண்டா இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

உபி மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 20 கோடிக்கும் அதிகம். இதில் 40 லட்சத்திற்கும் அதிமானோர் ஹோண்டாவின் இருசக்கர வாகன தயாரிப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும், கடந்த ஆறு வருடங்களாகவே இந்நிறுவனத்தின் தயாரிப்பிற்கு மிக அமோகமான வரவேற்பு உபி மக்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

நிறுவனமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த நாற்பது லட்சத்தில் 20 லட்சம் பேர் கடந்த ஆறு வருடங்களில் கிடைத்த புதிய வாடிக்கையாளர்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைவைத்து பார்க்கையில் கடந்த 2016ம் ஆண்டிற்கு பின்னரில் இருந்து நிறுவனம் மும்மடங்கு அதிக விற்பனையைப் பெற்றிருப்பது தெளிவாக தெரிகின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

நிறுவனத்தின் மிக சிறப்பாக விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலாக ஆக்டிவா இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ஷைன் மோட்டார்சைக்கிளே மிக அதிகளவில் விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்த இருசக்கர வாகனங்கள் விற்பனையில் இருக்கின்றன. இருப்பினும், இப்போதும் சற்றும் டிமாண்ட் குறையாமல் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உபியில் மட்டுமின்றி நாடு முழுவதுமே இந்த மாதிரியான வரவேற்பே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின்மீது இருக்கும் நம்பகத் தன்மையும், அது தயாரிக்கும் இருசக்கர வாகனங்கள் நல்ல தரத்திலும் இருப்பதுமே இத்தகைய சூப்பரான வரவேற்பு முக்கிய காரணமாக இருக்கின்றது. நாடு முழுவதும் நிறுவனம் 670க்கும் அதிகமான டச்பாயிண்டுகளை நிறுவியுள்ளது. இவற்றில் டீலர்ஷிப்புகள், சர்வீஸ் மையங்களும் அடங்கும்.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

இத்தகைய மிகப் பெரிய நெட்வொர்க்கைக் கொண்டு ஹோண்டா நிறுவனம் இயங்குவதும் மக்கள் நம்பியைப் பெற காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவும் மக்கள் இந்த இருசக்கர வாகனங்களை அதிகளவில் வாங்கிக் குவிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

ஹோண்டா நிறுவனம் தற்போது ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125, கிரேஸியா 125 ஆகிய ஸ்கூட்டர்களையும், சிடி110 ட்ரீம், லிவோ, எஸ்பி 125, ஷைன் 125, எக்ஸ்-பிளேட், யுனிகார்ன், ஹார்னடர் 2.0 மற்றும் சிபி 200எக்ஸ் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களையும் ஹோண்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

சொல்றத பாத்தா பாதிபேரு வீட்டுல ஹோண்டா டூ-வீலர்தான் இருக்கும் போலிருக்கே... இவ்ளோ டூ-வீலர்களை வித்துட்டாங்களா!!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையை மட்டுமின்றி சில சமூக முன்னேற்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், தனது கார்ப்பரேட் நிறுவனத்தின்கீழ் சாலை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சிறப்பு பயிற்சி முகாம்கள் மற்றும் பொது விழிப்புணர்வு பேரணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றது. இதுதவிர, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவுதல், பெண் கல்வியை ஊக்குவித்தல், தனி நபரின் திறமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பன்முக செயல்பாடுகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுமாதிரியான செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் ஹோண்டா நிறுவனத்தின்மீது நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க காரணமாக இருக்கின்றது.

Article Published On: Wednesday, November 9, 2022, 8:41 [IST]
English summary
Almost 40 lakh indian family using honda two wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+