8 ஆண்டுகளில் 1 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க பிரபல நிறுவனம் முடிவு! டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஜாக்பாட்
அமேசான் டெலிவரிக்கு செல்லும் டெலிவரி பாய்களுக்கு அந்நிறுவனம் இவி ஸ்கூட்டர்களை வழங்க டிவிஎஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துச் செயல்படவுள்ளது. இது குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.
உலகம் முழுவதும் கார்பன் எமிஷன்களை தடுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக முடிந்த இடங்களில் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியும் நடந்து வருகிறது.

இதையடுத்து அமேசான் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி கொடுக்க டெலிவரி பாய்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு டெலிவரி பணிக்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் லைஸ்ட் மைல் டெலிவரிக்காக டிவிஎஸ் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது மட்டுமல்ல அமேசான் நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்தெந்த இடங்களில் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த முடியும்? அவர்களுக்கான தேவை என்ன? அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு வாகனங்கள் இருக்கிறதா அல்லது தயாரிக்க முடியுமா என ஆய்வுகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இருநிறுவனங்களும் வரும் 2040ம் ஆண்டிற்குள் நெட்-ஜீரோ கார்பன் இலக்கை எட்டி முயன்று வருகிறது.
இதை அமேசான் நிறுவனம் ஒரு முயற்சி திட்டமாக முதற்கட்டமாக ஒரு சில நகரங்களில் மட்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது வெற்றிபெறும் பட்சத்தில் இதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவிதக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமேசான் நிறுவனத்தின் சப்ளை செயின் பிரிவின் இயக்குநர் அபிநவ் சிங் குறிப்பிடும் போது: "விரைவில் அமேசான் பிஸ்னஸில் போக்குவரத்து கட்டமைப்பை முழுவதுமாக எலெக்டரிக் வாகனங்களாக மாற்றவுள்ளோம் " எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காக அமேசான் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் குறைந்தது 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களையாவது பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. அதே போல 2030ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்தவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் டிவிஎஸ் நிறுவனத்திற்கும் எல்லா செக்மெண்டிலும் அதாவது பயணிகள் வாகனம், பிரிமியம் வாகனம், மற்றும் டெலிவரி வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் டிவிஎஸ் நிறுவனம் அடுத்த 8 காலாண்டுகளுக்குள் அதாவது 2 ஆண்டுகளுக்கும் ஏகப்பட்ட 2 மற்றும் 3 சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களில் சர்வதேச அளவில் ஃபோர்ட்ஃபோலியோக்களை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் அமேசான் இந்தியா நிறுவனம் தனது ஐதராபாத் பகுதியில் நடக்கும் பிஸ்னஸ்களுக்கு மட்டும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் மெகன்டா இவி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. அதன்படி 2,3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








