பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம் மற்றும் சிறிய திரை என பல்வேறு சிறப்பு கருவிகளை பொருத்தி அசத்தியிருக்கின்றார். இதனால், அந்த வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றே சேத்தக் (Chetak). கடந்த காலங்களில் இது பெட்ரோல் எஞ்ஜினில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்தது. ஆனால், தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

இந்த நிலையிலேயே, பெட்ரோல் வெர்ஷன் சேத்தக்கை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் நபர் மிகக் கடுமையான அலங்கரிப்பிற்கு உட்படுத்தியிருக்கின்றார். இது ஸ்கூட்டர்தானா?, முனுமுனுக்க செய்யுமளவிற்கு அந்த வாகனத்தை அவர் மாற்றியமைத்திருக்கின்றார்.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

மிக தெளிவாக கூற வேண்டுமானால், வட மாநில பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள பயன்படுத்தும் அணிகலன்களைக் கொண்டு அவர் சேத்தக்கை மாற்றியமைத்திருக்கின்றார். இதுதவிர, இருசக்கர வாகனம் முழுவதும் மின் விளக்குகளைப் பொருத்தியும் அந்த வாகனத்தை அலங்கரித்துள்ளார்.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

அலங்கரிப்பு மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் சிறிய டிவி, மியூசிக் சிஸ்டம் உள்ளிடவற்றையும் அந்த நபர் சேர்த்திருக்கின்றார். இதனால், பார்ப்போரை வெகுவாக கவரும் வாகனமாக சேத்தக் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. அவ்வாறு இருசக்கர வாகனத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு நபரால் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வேக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப வந்தபோது அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அப்போது, சற்று பழைய இந்தி பாடல் ஒன்று ஒலிக்க இருசக்கர வாகனம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. இந்த காட்சிகளே தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பரவிக் கொண்டிருக்கின்றது.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

இந்த வீடியோவால் கவரப்பட்டவர்களில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர் ஆவார். இவரும், அலங்கரிப்பு செய்யப்பட்டிருக்கும் சேத்தக் ஸ்கூட்டர் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், இதுகுறித்த ஓர் பதிவையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நீங்கள் விரும்பும் அளவுக்கு வாழ்க்கை வண்ணமயமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும்... #இந்தியாவில் மட்டுமே" என அவர் கூறியுள்ளார்.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

அதாவது, இருசக்கர வாகனத்தில் அதிக மின் விளக்குகள் மற்றும் ஒலிப் பெருக்கிகள் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி இந்த பதிவை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டிருக்கின்றார். பயணத்தை வண்ண மயமானதாகவும், அதேநேரத்தில், பிடித்த பாடல்களாலும் இந்த வாகனத்தில் மேற்கொள்ள முடியும் என்பதை மேற்கோள்காட்டியே இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியிருக்கின்றார்.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

பஜாஜ் சேத்தக்கை இவ்வாறாக மாற்றுவதற்கு அந்த நபர் எவ்வளவு ரூபாய் வரை செலவு செய்திருப்பார் என்பது தெரியவில்லை. பலர் தங்களது வாகனத்தை புதிய நிறம், விநோத ஸ்டைல் கொண்டதாக மாற்றி வரும் நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் தன்னுடைய வாகனத்தை பெண்கள் அணியும் நகைகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றார்.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

இவ்வாறு வாகனங்களை அலங்கரிப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய மோட்டார் வாகன சட்டம் இந்த மாதிரியான செயலுக்கு அனுமதி வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த காலங்களில் உண்மையான தோற்றத்தை இழக்கும் வகையில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்த சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன.

இருப்பினும், பலர் தங்களது வாகனங்களை மாடிஃபை செய்த வண்ணம் இருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அர்பன் மற்றும் பிரீமியம் என இருவிதமான தேர்வுகளில் அது நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

புது ஐடியாவே இருக்கே... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் மியூசிக் சிஸ்டம், சிறிய திரையை பொருத்திய நபர்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே அசந்துட்டாரு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் மற்றும் 3.8 kW திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதனை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனம் சென்னையில் ரூ. 1,52,409 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand mahindra shared video of a musical chetak scooter
Story first published: Friday, June 24, 2022, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X