ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ்.. எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா?

ஏப்ரல் மாதம் இருசக்கர வாகன விற்பனையின் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ரிப்போர்ட்டின் முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

இந்தியா கொரோனா தாக்கத்திலிருந்து படிப்படியாக மெல்ல மீண்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறையும் மெல்ல மெல்ல கொரோனாவிற்கு முந்தைய நிலைமையை எட்டி வருகிறது. இந்த விஷயம் சமீபத்தில் வெளியான ஏப்ரல் மாதத்திற்கான இருசக்கர வாகன விற்பனைக்கான ரிப்போர்ட்டில் தெளிவாகிறது. அந்த ரிப்போர்ட்டை விபரமாகக் காணலாம் வாருங்கள்

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

கொரோனாவிற்கு பிறகு இருசக்கர வாகன விற்பனை தற்போது மெல்லமெல்ல மீண்டு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 11 லட்சத்து 94 ஆயிரத்து 520 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 8 லட்சத்து 65 ஆயிரத்து 628 ஆக இருந்தது இந்தாண்டு அது 37 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதுவே கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் அதாவது கொரோனா காலத்தில் வெறும் 3 லட்சத்து 18 ஆயிரத்து, 596 ஆகவே இருந்தது. 2019 அதாவது கொரோனவிற்கு முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 382 ஆக இருந்தது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

வழக்கம் போலக் கடந்த ஏப்ரல் மாதமும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் இருசக்கர வாகன விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 722 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் ஹீரோ ஸ்பெலண்டர், எச்எஃப் டீலக்ஸ், கிளாமர், பிளஸர், மீஸ்ட்ரோ, பேஷன், டெஸ்டினி, எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்ட்ரீம் 160 ஆர் ஆகிய பைக்களின் விற்பனையாகும். இதில் மக்கள் ஸ்பெலண்ட்ர் பைக் தான் நம்பர் 1 விற்பனையில் இருக்கிறது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஹோண்டா நிறுவனம் இந்நிறுவனம் மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 720 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையை விட 24.67 சதவீதம் அதிகம். இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்தடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் மற்றும் ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ்.. எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா?
Rank Brand Apr-22 Apr-21 Growth (%) YoY
1 Hero 4,10,722 2,99,597 37.09
2 Honda 2,94,720 2,17,924 35.24
3 TVS 1,80,159 1,28,426 40.28
4 Bajaj 1,20,389 98,085 22.74
5 Royal Enfield 47,052 42,295 11.25
6 Suzuki 44,807 33,733 32.83
7 Yamaha 41,323 34,836 18.62
8 Ola Electric 12,691 0 -
9 Okinawa 11,012 1,193 823.05
10 Hero Electric 6,572 643 922.08
ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

3வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 159 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும் போது 15 சதவீத வளர்ச்சியாகும். இதற்கு அடுத்த இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது அந்நிறுவனம் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 389 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

இந்த பட்டியலில் 4வது இடத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் 47 ஆயிரத்து 52 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுஸூகி மற்றும் யமஹா நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்கள் முறையே 44 ஆயிரத்து 807 வாகனங்களையும் 41,323 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

முதல் 7 இடங்களை பெட்ரோல் இன்ஜின் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பிடித்த நிலையில் 8வது இடத்தை ஓலா நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 12 ஆயிரத்து 691 வாகனங்களை விற்பனை செய்து முதல் முறையாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை பின்னிற்குத் தள்ளியுள்ளது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

9வது இடத்தில் ஒகினாவா நிறுவனம் மொத்தம் 11 ஆயிரத்து 12 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 10வது இடத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 6 ஆயிரத்து 572 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த சரிவிற்கு முக்கியமான காரணம் செம கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு எனச் சொல்லப்படுகிறது ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் ஒரு ஸ்கூட்டரை கூட தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் எகிறிய டூவீலர் சேல்ஸ் . . . எந்த நிறுவனத்தின் பைக் அதிகம் விற்பனையானது தெரியுமா ?

மேலும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் மற்ற நிறுவனங்களான அம்பயர் 6539 வாகனங்கள், ஏத்தர் 2445 வாகனங்கள், பியூர் எனர்ஜி 1756 வாகனங்கள், ரிவோல்ட் 1239 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கிடையில் ஜாவா யெஸ்டி நிறுவனம் மொத்தம் 3600 வாகனங்களையும், பியாஜியோ நிறுவனம் 4 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்து முறையே 13 மற்றும் 12ம் இடத்தை பிடித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 7, 2022, 18:58 [IST]
English summary
April 2022 two wheeler retails sales report full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+