டிவிஎஸ் வாகனங்களுக்கு இவ்வளவு மவுசா? மாசம் ஒரு லட்சம் ஸ்கூட்டர் ஏற்றுமதியாகிறது...
டிவிஎஸ் நிறுவனத்தின் ஏப்ரல் மாத விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்தியாவில் எவ்வளவு பைக் விற்பனையானது, எவ்வளவு வாகனம் ஏற்றுமதியானது என்பது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவின் பாரம்பரியமான வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான விற்பனை ரிப்போட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த ஏப் மாதம் மட்டும் 2,78,376 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில் 1,80,533 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்தும், 97,843 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் உள்ளது.

கடந்தாண்டு இதே ஏப்ரல் விற்பனை நிலவரத்தை ஒப்பிடும் போது 37.83 சதவீத வளர்ச்சியை இந்த பைக் பெற்றுள்ளது. அப்பொழுது இந்தியாவில் அந்நிறுவனம் 1,30,981 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் எல்லா மாடல்களும் கடந்தாண்டை ஒப்பிடும் போது வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் அப்பாச்சி மற்றும் பெப் + மாடல் மட்டும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த மார்ச் மாத விற்பனையை ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் விற்பனை 8.34 சதவீதம் குறைவு தான். கடந்த மார்ச் மாதம் மொத்தம் 1,96,956 வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியிருந்தன. அதை விட ஏப்ரல் மாதம் 16,423 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. மார்ச் மாத விற்பனையில் அந்நிறுவனத்தின் 5 மாடல் பைக்குக்கள் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளன. ஒவ்வொரு மாடலின் விற்பனை நிலவரம் குறித்து கீழே காணலாம்

டிவிஎஸ் நிறுவனத்திலேயே அதிகமாக விற்பனையாகும் இருசக்கரவாகனம் டிவிஎஸ் ஜூபிட்டர் தான். இது கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 60,957 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாத விற்பனையை விட 138.39 சதவீதம் அதிகம். ஒரே ஆண்டில் விற்பனை 35,387 உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 55,813 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதை ஒப்பிடும் போது ஏப்ரல் மாத விற்பனை 9.22 சதவீதம். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் 37 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது.

அடுத்த இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 36,780 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் மொத்தம் 25,977 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. ஒரே ஆண்டில் 12,803 வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 37,649 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 21.48 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் என்டார்க் ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 25,267 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த 2021 ஏப்ரல் விற்பனையான 19,959 வாகனங்களை ஒப்பிடும் போது 26.59 சதவீதம் அதிகம். மார்ச் மாத விற்பனையான 23,824 வாகனங்களை ஒப்பிடும் போது ஏப்ரல் மாதம் 6.06 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் இந்த ஸ்கூட்டர் என்டார்க் 125 எக்ஸ்டி வேரியன்டை நியான் பச்சை கலரில் வெளியிட்டது. இதன் விலை ரூ1.02 லட்சம்

நான்காவது இடத்தில் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் இருக்கிறது. இது கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 12,995 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனை வெறும் 6,870 ஆக இருந்தது ஒரே ஆண்டில் 89.16 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அடுத்ததாக ரேடியான் பைக் மொத்தம் 11,630 கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் வெறும் 5600 வானகங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது ஒரே ஆண்டில் 107.68 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

அடுத்ததாக டிவிஎஸ் அப்பாச்சி பைக் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தமே வெறும் 7,342 பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளன. அதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் 29,438 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 75.08 சதவீத விற்பனை சரிவை சந்தித்துள்ளது. மாரச் மாதமும் 27,439 பைக்குகள் விற்பனையாயிருந்தது. ஒரே மாதத்தில் 73.24 சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஒர மாதத்தில் இவ்வளவு பெரிய சந்திப்பு பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அடுத்த ஸ்டார்சிட்டி இந்த மாதம் 6,895 வாகனங்களையும், பெப் + 6,329 வாகனங்களையும், செஸ்ட் 5,123 வாகனங்களையும், ரைடர் 3,392 வாகனங்களையும், ஐக்யூப் 1,420 வாகனங்களையும், ஆர் ஆர் 310 மொத்தம் 403 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. இதில் ரைடர், ஐக்யூப் ஆர்ஆர் 310 ஆகிய வாகனங்கள் மார்ச் மாத விற்பனை விட ஏப்ரல் மாத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த 2021 ஏப்ரல் விற்பனையை ஒப்பிடும் போது பெப்+ தவிர மற்ற வாகனங்கள் விற்பனை உயர்வைச் சந்தித்துள்ளன.

இதே போல டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்றுமதியிலும் கடந்த ஏப்ரல் மாதம் வளர்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 97,843 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தன. இதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் 94,807 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது 3.02 சதவீத வளர்ச்சியாகும். கடந்த மார்ச் மாதம் 93,854 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. ஒரு மாத விற்பனையை ஒப்பிடும் போது. 4.05 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்

சர்வதேசச் சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் ஸ்டார்சிட்டி 125 பைக்கை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஒரே மாத்தில் 37,919 வாகனங்கள் ஏற்றுமதியாகின. அடுத்ததாக ஸ்டார்சிட்டி மொத்தம் 28,860 பைக்குகளும், அப்பாச்சியில் 11,771 பைக்குகளும், ரைடரில் 9141 பைக்குகளும், ஸ்போ்ரட்டில் 6,003 பைக்குகளும், என்டார்க்கில் 2,627 ஸ்கூட்டர்களும், விக்டர் 800 பைக்கும், 423 வீகோ ஸ்கூட்டர்களையும், ரேடியானில் 200 பைக்குகளும், 63 ஜூபிட்டர் ஸ்கூட்டர் 30 ஆர்ஆர் 310 மற்றும் 6 எக்ஸ்எல் மொபட்களளையும் ஏற்றுமதி செய்துள்ளது. தில் ஸ்டார்சிட்டி 125, ஸ்டார்சிட்டி, வீகோ ஸ்கூட்டர் ஆகிய பைக்கள் மட்டுமே ஒராண்டு விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஒரு மாத விற்பனையில் ஸ்டார்சிட்டி, ரேடியான், ஆர்ஆர்310 ஆகிய பைக்குகள் விற்பனை வீழ்ச்சியைக் கண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








