பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 யூனிட்கள் மட்டுமே தயாரிக்க முடிவு!

அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிளின் புதிய லிமிடெட் எடிசன் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்ரில்லா பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

உலகளவில் பிரபலமான அப்ரில்லா மோட்டார்சைக்கிள்களுள் ஆர்எஸ்660 -யும் ஒன்றாகும். இதன் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக பிரத்யேகமான பெயிண்ட் தேர்வினை இந்த மோட்டார்சைக்கிளுக்கு அப்ரில்லா நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை என 3 விதமான நிறங்கள் கலந்ததாக உள்ள இந்த புதிய பெயிண்ட் தேர்வில் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக் உலகளவிலேயே வெறும் 1,500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அப்ரில்லா நிறுவனம் AMA தேசிய சாலை பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியினை பதிவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவே இந்த பிரத்யேக ஆர்எஸ்660 பைக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

இந்த வெற்றியினை குறிக்கும் விதமாக பைக்கின் அலங்கரிப்பு பேனல்களில் நட்சத்திரங்கள் கிராஃபிக்ஸ்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பெயிண்ட் தேர்வுடன் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கின் இந்த லிமிடெட் எடிசன் தலைக்கீழான ஷிஃப்ட் பேட்டர்ன்களுடன் கியர்பாக்ஸினை பெற்றுள்ளது. அதாவது இந்த ஸ்பெஷல் ஆர்எஸ்660 பைக்கில் மட்டும் கியரை அதிகரிக்க கீழ்நோக்கியும், கியரை குறைக்க மேல்நோக்கியும் கியர்மாற்றியை கொடுக்க வேண்டும்.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

இவ்வாறான கியர்பாக்ஸ் செட்அப்பினை கிட்டத்தட்ட அனைத்து பந்தய பைக்குகளிலும் பார்க்கலாம். அத்துடன் இந்த ஸ்பெஷல் எடிசன் ஆர்எஸ்660 பைக்கின் முன்பக்க ஹெட்லேம்ப் கௌல் பேனல்கள் நன்கு பெரியதாக பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பைக்கின் முன்பக்கம் அகலமாகியுள்ளது மட்டுமில்லாமல், பைக்கின் காற்றியக்கவியல் பண்பும் மேம்பட்டுள்ளதாக அப்ரில்லா தெரிவித்துள்ளது.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

இவற்றுடன் புதியதாக பின் இருக்கையின் முனையில் கூடுதல் கௌல் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பைக்கின் கவர்ச்சிகரமான தோற்றத்தினை மேலும் மெருக்கேற்றியுள்ளன. இவை தவிர்த்து மற்ற அம்சங்கள் அனைத்தும் வழக்கமான அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்குடையதே ஆகும். இதனால் வழக்கம்போல் 659சிசி, லிக்யுடு-கூல்டு இணையான-இரட்டை என்ஜினே இந்த புதிய லிமிடெட் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 100 பிஎச்பி மற்றும் 8500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. வழக்கமாக அப்ரில்லா பைக்குகளில் தொழிற்நுட்ப அம்சங்கள் அதிகளவில் வழங்கப்படும். இந்த புதிய ஆர்எஸ்660 லிமிடெட் எடிசனிலும் எந்த குறையும் இல்லை.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

இந்த வகையில் அப்ரில்லா செயல்திறன் ரைட் கண்ட்ரோல், 3-நிலை கார்னரிங் ஏபிஎஸ் உடன் 6-அச்சு ஐஎம்யு, டிராக்‌ஷன் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவற்றை புதிய அப்ரில்லா ஆர்எஸ்660 ஸ்பெஷல் எடிசனும் பெற்றுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் மாடல் தற்போதைக்கு உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளதே தவிர்த்து, இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

அதேபோல் இதன் மொத்த 1,500 யூனிட்களில் எத்தனை யூனிட்கள் இந்திய சந்தைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பதும் பின்னர்தான் தெரியவரும். இந்தியாவில் ஸ்டாண்டர்ட் அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிள் கடந்த 2021ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.13.39 லட்சங்களாக உள்ளது. புதிய லிமிடெட் எடிசனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கிற்கு விற்பனையில் ஹோண்டா சிபிஆர்650ஆர், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்7 போன்ற உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போட்டியாக உள்ளன. இந்த வரிசையில் விரைவில் கவாஸாகியின் புதிய நிஞ்சா 700ஆர் பைக்கும் இணையவுள்ளது. சர்வதேச சந்தைகளில் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கிற்கு லாவா சிவப்பு, ப்ளாக் அபெக்ஸ் மற்றும் ஆசிட் கோல்டு என்கிற நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பிரத்யேகமான நிறத்தில் அப்ரில்லா ஆர்எஸ்660 லிமிடெட் எடிசன்!! வெறும் 1,500 மாதிரிகள் மட்டுமே தயாரிக்க முடிவு!

உலகளவில் பிரபலமான இத்தாலியன் 2-வீலர் பிராண்டான அப்ரில்லாவில் இருந்து ஸ்கூட்டர்களும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 45% அப்ரில்லா இருசக்கர வாகனங்களின் விற்பனை நமது தமிழகம் உள்பட தென்னிந்தியாவில்தான் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே தென்னிந்தியாவில் மேலும் 100 மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்காக அப்ரில்லா கொண்டுவந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 7:30 [IST]
English summary
Aprilia RS660 limited edition colour option.
மேலும்... #அப்ரில்லா #aprilia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+