சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... பெங்களூரு நிறுவனம் உருவாக்கிய இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் (Arctic Fox Moon) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கு வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை தயாரித்து வரும் நிறுவனம் ஆர்க்டிக் ஃபாக்ஸ் (Arctic Fox), அனைத்து வயதினரும் பயன்படுத்தக் கூடிய இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மூன் (Arctic Fox Moon) என்று பெயரிடப்பட்டிருக்கும் இ-வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இற்கு அறிமுகமாக ரூ. 29,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

இரண்டு வீல்களில் இயங்கும் இந்த வாகனத்தில் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு பட்டனை அழுத்தினால் மடித்துக் கொள்ளும் வசதி இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருப்பது. இந்த அம்சமே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு வாகனத்தை மடித்து வைத்துக் கொள்ளும்பட்சத்தில் பெரியளவு இடம் அதை நிறுத்தி வைக்க தேவைப்படாது.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

நகர்ப்புற மக்கள் மற்றும் சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்டு இவ்வாகனத்தை பெங்களூரு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதுமாதிரியான வாகனங்களை வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற சுற்றுத் தளங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் பெறும்.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

தற்போது அங்கு வாடகை சைக்கிள் மற்றும் இ-ஆட்டோ சேவை மட்டுமே பயன்படுத்தப்பாட்டில் உள்ளது. இவற்றைக் காட்டிலும் இந்த வாகனம் பல மடங்கு அதிக வரவேற்பைப் பெற வாய்ப்பு உள்ளது. இந்த வாகனம் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறுவர்கள் பயன்படுத்தும் ஸ்கேட்டிங் ரக வாகனத்தின் ஸ்டைலிலேயே 'மூன்' உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

அதேவேலையில் அது மாடர்னாகவும் காட்சியளிக்கின்றது. ஆகையால், இளசுகளையும் நிச்சயம் இந்த வாகனம் கவர்ந்திழுக்க வாய்ப்பிருக்கின்றது. குறிப்பாக, ஐடி ஊழியர்களிடத்தில் இந்த வாகனம் நல்ல வரவேற்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையில் இப்போதே இதுமாதிரியான ஸ்டைல் கொண்ட வாகனங்கள் கால் தடம் பதிக்கத் ஆரம்பித்திருக்கின்றன.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

அதேவேலையில் வளர்ந்த நாடுகள் பலவற்றில் ஏற்கனவே இதுபோன்ற ஸ்கூட்டர்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சீனாவில் இந்த விநோத தோற்றம் கொண்ட இ-ஸ்கூட்டர்களுக்கு மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டுள்ளது. இதனால், சில முன்னணி நிறுவனங்கள் மூன் போன்ற இ-வாகனங்களை சீன சந்தையை குறி வைத்துக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

சீன மக்கள் அன்றாட பணிகளுக்கும், அருகாமையில் உள்ள இடங்களுக்கு பயணிக்கவும் இந்த வாகனங்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8Ah லித்தியம் அயன் பேட்டரியும், 350 வாட் எலெக்ட்ரிக் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 16 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், உச்சபட்சமாக மணிக்கு 15 கிமீ தொடங்கி 25 கிமீ வேகத்தில் அது பயணிக்கும். இதன் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக 1,2,3 என்கிற மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக சுமார் 20 கிமீ தூரம் வரை மூன் இ-ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களால் பயணிக்க முடியும். நார்மலாக அக்கம் -பக்கத்தில் உள்ள இடங்களுக்கு சென்று இந்த ரேஞ்ஜ் திறன் போதுமானதாக உள்ளது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு வசதி, சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவை சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு மூன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

சின்ன பசங்க மட்டுமல்ல பெரியவங்களும் ஓட்டலாம்... ஆர்க்டிக் ஃபாக்ஸ் மூன் இ-ஸ்கூட்டர் அறிமுகம்... விலை கொஞ்சம் கம்மியாதான் இருக்கு!

இருசக்கர வாகனத்திற்கான பேட்டரி இ-ஸ்கூட்டரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் நேரடியாக பின் வீலுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது. பார்ப்பதற்கு மிகவும் குட்டியாக இந்த வாகனம் தெரிந்தாலும், கண்ணைக் கவரும் ஸ்டைலை அது கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 21, 2022, 19:07 [IST]
English summary
Arctic fox moon e scooter launched in india at inr 29499
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+