விற்பனை தூள் கெளப்புது... நாட்டுல இருக்க நிறைய பேரு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைதான் வாங்குறாங்க போல!
பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் 2022 நவம்பர் மாதத்தில் மிக பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்களின் அடிப்படையில் கூற வேண்டுமானால் நிறுவனம் 2021 நவம்பரைக் காட்டிலும் 2022 நவம்பரில் 260 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி-யும் ஒன்று. இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாக இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்திற்கே கடந்த நவம்பரில் மிக அமோகமான கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்த 7 ஆயிரத்து 234 யூனிட் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகப் பெரிய விற்பனை எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் இது 260 சதவீத விற்பனை வளர்ச்சி என நிறுவனம் செய்துள்ளது. ஆகையால், மிக சூப்பரான வளர்ச்சி பாதையில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் தற்போது பயணித்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஏத்தர் 450 பிளஸ் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் எனும் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரு மாடல்களே இந்தியாவின் பிற முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற நவம்பர் மாத விற்பனை பற்றிய விபரம் அமைந்துள்ளது. மிகவும் அட்டகாசமான தயாரிப்பாக 450 பிளஸ் மற்றும் 450 எக்ஸ் ஆகியவை இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் இந்த வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரியனதாக இருக்கின்றன.
இருப்பினும் அவை திறன் வெளிப்பாட்டில் மாறுபட்டவையாக காட்சியளிக்கின்றன. 450 பிளஸ் வெறும் 4.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதில் ஓர் முழு சார்தில் 85 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும் திறன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 5.4 கிலோவாட் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
வெறும் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 10 கிமீ தூரம் பயணிக்கலாம். அந்தளவே வேகமாக சார்ஜாகும் திறனை 450 பிளஸ் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த தேர்வில் ஏத்தர் நிறுவனம் ப்ளூடூத் இணைப்பு வசதியை வழங்கவில்லை. ஆகையால், செல்போனுக்கு வரும் அழைப்பை காணுதல் மற்றும் இசையை அனுபவித்தல் போன்றவை இயலாது. அதேநேரத்தில் 450 எக்ஸ்-இல் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே 450 பிளஸ் தேர்வைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக 450 எக்ஸ் இருக்கின்றது.
இந்த அம்சத்தில் மட்டுமில்லைங்க ரேஞ்ஜ் மற்றும் திறன் வெளிப்பாட்டிலும் இந்த வாகனம் கொஞ்சம் பெஸ்டான தயாரிப்பாகவே காட்சியளிக்கின்றது. இந்த வாகனம் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதேபோல், இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 105 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. பத்தே நிமிட சார்ஜில் 15 கிமீ பயணிக்கும் அளவிற்கு அதிக வேகத்தில் சார்ஜாகும் வசதி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.
தற்போது விற்பனையில் 450 எக்ஸ் ஜென் 3 வெர்ஷன் ஆகும். இதன் விலை ரூ. 1.57 லட்சம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450 பிளஸ் மாடலுக்கு ரூ. 1.35 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஏத்தர் டாட்/ போர்டபிள் சார்ஜர் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் அப்கிரேட் ஆகிய இரண்டும் இந்த கட்டணத்தின் கீழே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு (450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ்) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது நாட்டில் விற்பனையில் இருக்கும் பிற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது. அந்தவகையில், ஓலா எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு என பலவற்றிற்கு 450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications








