செம்ம போட்டி நிலவுதுங்க... ஏத்தர், சேத்தக், ஐ-க்யூப் மூன்றில் எது அதிகம் விற்பனையாகுது தெரியுமா?
ஏத்தர், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு இடையில் மிகக் கடுமையான போட்டி நிலவுவது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மின் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிகச் சூப்பரான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதற்குப் பெட்ரோல் விலை உயர்வு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேவேலையில், எலெக்ட்ரிக் டூ-வீலர்கள், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மனதை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்டிருப்பதனாலும் அதிகளவில் மக்களைக் கவர்ந்து வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2021ம் ஆண்டில் டிவிஎஸ் ஐக்யூப் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. 5,976 யூனிட் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சேத்தக் அதிகளவில் விற்பனையாகி இருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக 5,071 யூனிட் வரை விற்பனையாகியுள்ளது.

மிக சொற்பளவிலான எண்ணிக்கையே இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இடையில் வித்தியாசமாக உள்ளன. இந்த நிலை இரண்டு மின்சார ஸ்கூட்டர்களுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நிலவுவதைத் தெளிவாக காட்டுகின்றது. இந்த போட்டி கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் தொடருவது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

2022 ஜனவரி மாதத்தில் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக 1,529 யூனிட் விற்பனையாகி இருக்கின்றது. இது மிக மிக அதிக விற்பனை என எண்ணிக்கை டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தொடர்ச்சியாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருவதை இந்த தகவல் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இதேபோல் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் நல்ல விற்பனை வளர்ச்சியைக் கடந்த ஜனவரியில் பெற்றிருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் 1,268 யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது. இதுவும் கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவு அதிக விற்பனை என சேத்தக் தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாகவே இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இடையிலான போட்டி நடப்பாண்டிலும் தொடர்வது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

இந்த போட்டியானது சேத்தக், ஐ-க்யூப் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே நடைபெறவில்லை. மற்றுமொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இவற்றுடன் போட்டியிடும் வகையில் விற்பனையில் உள்ளது. ஆம், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஸ்கூட்டரே மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி இடத்தில் இருக்கின்றது.

இவை மூன்றுமே முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சென்ற 2021ம் ஆண்டிலும் சரி, மாதத்திலும் சரி மிக சிறப்பான வளர்ச்சியை தொடர்ச்சியாக பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ஆண்டுக்கு ஆண்டு என்ற வீதத்தில் ஏத்தர் நிறுவனம் 366 சதவீத விற்பனை வளர்ச்சியையும், சேத்தக் 4172 விற்பனை வளர்ச்சியையும், ஐ-க்யூப் 625 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

"அது இருக்கட்டும் எத்தனை எண்ணிக்கை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கு அத சொல்லுங்கனு தானே சொல்றீங்க" இதோ அதுகுறித்த தகவல்... ஒட்டுமொத்தமாக ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2,858 யூனிட்டுகளும், சேத்தக் 30 யூனிட்டும், ஐ-க்யூப் 211 யூனிட்டும் கடந்த 2022 ஜனவரியில் விற்பனையாகி இருக்கின்றன.

இந்த மூன்று மின்சார ஸ்கூட்டர்களும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட பிரீமியம் தர எலெக்ட்ரிக் வாகனங்களாகும். எனவேதான் மக்கள் மத்தியில் இவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. பஜாஜ் சேத்தக் அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜையும், ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒற்றை முழுமையான சார்ஜில் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனும் மக்களைக் கவரும் வகையில் இருக்கின்றது. இதுதவிர, இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கின்றன. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இவற்றிற்கு சற்றும் குறைந்தது அல்ல. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் எக்க சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

7இன்ச் அளவுள்ள எல்சிடி திரை, குயிக் சார்ஜிங் வசதி, அதிக வேக திறன் மற்றும் 116 கிமீ ரேஞ்ஜ் திறனை அது கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி 450 மற்றும் 450எக்ஸ் என்ற இரு செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் விற்பனை வழங்கி வருகின்றது. இவற்றின் ஆரம்ப விலை ரூ.1.40 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காஸ்ட்லியான விலையிலேயே ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இருப்பினும், மக்கள் மத்தியில் அவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இவற்றிற்கு மட்டுமில்லைங்க நாட்டில் ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினவா மற்றும் ஆம்பியர் ஆகிய நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, சுசுகி மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் களமிறக்க தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








