120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

கடந்த 2022 மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

குறைக்கடத்திகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக சுமாராக இருந்தாலும், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நல்லப்படியாகவே உள்ளது. அதிலிலும் குறிப்பாக, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான தேவை நன்றாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

இந்த வகையில் கணிசமான விற்பனையை பெற்றுவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஏத்தர் எனர்ஜியும் ஒன்று. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் பிராண்டில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் 2,591 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் சுமார் 120.14% அதிகமாகும்.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 1,177 யூனிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மேலும், 2,042 ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த கடந்த 2022 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும், ஏத்தர் ஸ்கூட்டர்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 26.89% அதிகமாகும். இதில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை அறியலாம்.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

மொத்தமாக நடப்பு 2022ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 7,458 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏத்தர் எனர்ஜி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களிலும் மாதத்திற்கு குறைந்தப்பட்சம் 2 ஆயிரம் ஏத்தர் இ-ஸ்கூட்டர்களாவது விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அதிகப்பட்சமாகவே 1,177 யூனிட் ஏத்தர் ஸ்கூட்டர்களே (2021 மார்ச்சில்) விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

இதனால் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தமாகவே 2,633 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்திருந்தது. இதனை காட்டிலும் கடந்த 2022 ஜனவரியிலேயே சில நூறு யூனிட்கள் அதிக விற்பனை எண்ணிக்கையை ஏத்தர் எனர்ஜி பதிவு செய்திருந்தது. 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2022இன் முதல் 3 மாதங்களில் ஏத்தர் எனர்ஜியின் விற்பனை கிட்டத்தட்ட 183.25% அதிகரித்துள்ளது.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

இதில் மிக பெரிய வித்தியாசம் எதில் என்றால், ஜனவரி மாதங்களுக்கு இடையிலான ஒப்பீடுகையில்தான். ஏனெனில் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 2,825 ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2021 ஜனவரியில் வெறும் 606 ஏத்தர் ஸ்கூட்டர்களே விற்பனையாகி இருந்தன. விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்றால், சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

இதனை நன்கு அறிந்துவைத்துள்ள இந்த பெங்களூர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் நாடு முழுவதும் தனது கூட்டணி டீலர்ஷிப் மையங்களை விரிவு செய்வதிலும், தயாரிப்பு பணிகளை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் பெங்களூரில் 3வது டீலர்ஷிப் மையத்தை துவங்கிய ஏத்தர் எனர்ஜி புதியதாக கௌகாத்தி, விஜயவாடா மற்றும் திருப்பதி உள்ளிட்ட நகரங்களிலும் சில்லறை விற்பனையை ஆரம்பித்துள்ளது.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு தற்சமயம் இந்தியாவில் 28 நகரங்களில் மொத்தம் 34 வாடிக்கையாளர் தொடு மையங்கள் உள்ளன. இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு பெங்களூரு மட்டுமின்றி டெல்லியிலும் 3 வாடிக்கையாளர் தொடு மையங்கள் உள்ளன. ஏத்தரின் இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரித்து வருவதை வெளிக்காட்டும் வகையில், தொழிற்சாலையில் 450எக்ஸ் அதிசெயல்திறன்மிக்க இ-ஸ்கூட்டரின் தயாரிப்பில் வெற்றிக்கரமாக 25,000 என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக ஏத்தர் எனர்ஜி கடந்த மார்ச் மாதத்தில் தெரிவித்திருந்தது.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

450எக்ஸ்-இன் உற்பத்தியில் 25,000 என்கிற மைல்கல்லை கடந்தது குறித்து ஏத்தர் எனர்ஜியின் முதன்மை வணிக அதிகாரி ரவ்னீட் எஸ்.போகேலா கருத்து தெரிவிக்கையில், "ஏத்தர் எனர்ஜியில், எங்களின் 450 வரிசை ஸ்கூட்டர்களுக்கு வலுவான நுகர்வோர் தேவை இருப்பதை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். நாங்கள் மார்ச் மாதத்தில் 2591 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவிரி செய்துள்ளோம்.

120% அதிகரித்துள்ள ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!! 3 மாதங்களில் 7,458 ஸ்கூட்டர்கள் விற்பனையாயிருக்கு!

மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு மாதாந்திர முன்பதிவுகளை பெற்றுள்ளோம். உதிரிபாகங்கள் பற்றாக்குறையின் காரணமாக முன்கூட்டிய ஆர்டர்களில் ஒரு பகுதியை மட்டுமே எங்களால் வழங்க முடிந்தாலும், எங்கள் விநியோக சங்கிலியை வலுப்படுத்தவும் காத்திருப்பு காலத்தை குறைக்கவும் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

Most Read Articles
English summary
Ather electric scooter sales march 2022
Story first published: Sunday, April 3, 2022, 1:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X