ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர்... விற்பனை படுஜோரு...

ஓலா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணலாம்.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

ஏத்தர் நிறுவனத்தின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் அந்நிறுவனம் ஒரே ஆண்டில் 3 மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

இன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. ஏராளமான மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஏத்தர்.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் ஸ்கூட்டர்களின் டிசைன், ஸ்டைல், அதில் உள்ள அம்சங்கள் எல்லாம் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டரின் விற்பனை படு ஜோராக வளர்ந்து கொண்டே இருக்கிறது.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் தனது 50,000வது ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க புனே, சென்னை, ராஞ்சி பகுதியில் தனது எக்ஸ்பிரியன்ஸ் சென்டரை நிறுவியுள்ளது.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 6410 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளது இது கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 297 சதவீதம் விற்பனை அதிகம். இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் தனது விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 34 சதவீத மார்கெட் பங்கை வைத்து முதலிடத்தில் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதன் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

இது குறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை பிஸ்னஸ் அதிகாரி ரவ்நீட் எஸ் போக்கேலா கூறும் போது : "நாங்கள் அதிகபட்சமாக 6410 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளோம். எங்கள் வாகனங்களுக்கான டிமாண்ட் மார்கெட்டில் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவரி செய்வதில் சப்ளை செயின் சிக்கல் இருக்கிறது.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

சப்ளை செயின் பிரச்சனைகளைச் சரி செய்யச் செய்ய எங்கள் விற்பனை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் தயாரிப்பையும் வேகப்படுத்தியுள்ளோம். இதனால் காத்திருப்பு காலமும் குறையும். இந்த பண்டிகை காலத்தில் எங்கள் விநியோக திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்" எனக் கூறினார்.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

ஏத்தர் நிறுவனம் ஏத்தர் 450 எக்ஸ், ஏத்தர் 450 ப்ளஸ் மற்றும் ஏத்தர் 450 ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது இரண்டு ஸ்கூட்டர்களும் மூன்றாம் தலைமுறை ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை பொறுத்தவரை 3.66 Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஓலாவை தூக்கிச் சாப்பிடப் போகும் ஏத்தர் . . . விற்பனை படுஜோரு . . .

பழைய தலைமுறையில் 2.9Kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.ஏத்தர் 450 ஸ்கூட்டர் ரூ1.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ1.17 லட்சத்தில் விற்பனையாகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, September 1, 2022, 16:34 [IST]
English summary
Ather energy august month sales report know full details
மேலும்... #ஏத்தர் #ather
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+