ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

இந்தியாவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் எனர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய ரீடெயில் அவுட்லெட்டை (Retail Outlet) திறந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள பான்ச் பக்டி என்ற பகுதியில் இந்த புதிய ஏத்தர் ஸ்பேஸ் (Ather Space) ரீடெயில் அவுட்லெட் திறக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

ஜாகெட் குழுமத்துடன் (Jakhete Group) இணைந்து, இந்த புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் (Experience Centre) திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து வாடிக்கையாளர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய ஏத்தர் ஸ்பேஸ் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான 'ஓனர்ஷிப்' அனுபவத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஏத்தர் ஸ்பேஸ் மூலமாக முழுமையான சர்வீஸ் வசதிகளையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த ஏத்தர் ஸ்பேஸ் மூலமாக தானேவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) மற்றும் ஏத்தர் 450 ப்ளஸ் (Ather 450 Plus) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ள முடியும்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்யவும் முடியும். ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டெஸ்ட் ரைடு செய்வதை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தானேவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ரன்வீட் எஸ் போகேலா கூறுகையில், ''ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு மஹாராஷ்டிரா முக்கியமான சந்தையாக உள்ளது. இங்கு ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு காணப்படும் அதிகப்படியான டிமாண்ட்தான் தற்போதைய விரிவாக்கத்திற்கு காரணம்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

மஹாராஷ்டிரா மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எங்களது விரிவாக்க பணிகள் தொடரும்'' என்றார். இது தொடர்பாக ஜாகெட் குழுமத்தின் இயக்குனரான அக்ஸய் ஜாகெட் கூறுகையில், ''ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துடனும், உலகத்தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய இலக்குடனும் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

சரியான விலையில் கிடைக்க கூடிய ஹை-பெர்ஃபார்மென்ஸ் எலெக்ட்ரிக் டூவீலருக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். அவற்றை ஏத்தர் எனர்ஜி டெலிவரி செய்கிறது. இந்த வெற்றிக்கதையின் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

உலகத்தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் பிரீமியம் நிறுவனம் என்கின்ற பெயரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் படிப்படியாக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் காலடி பதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் புதிய ரீடெயில் அவுட்லெட்டை திறந்துள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

வரும் காலங்களில் இன்னும் பல்வேறு நகரங்களிலும் விற்பனையை விரிவாக்கம் செய்வதற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் தற்போது பல்வேறு போட்டி மாடல்கள் இருக்கின்றன. இதில், ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் முக்கியமானவை.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!

இந்திய சந்தையில் தற்போது மிக குறைவான விலையில் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் ரேஞ்ச் மிகவும் குறைவான இருப்பதுடன், அவற்றின் வேகமும் குறைவாக இருக்கிறது. ஆனால் ஏத்தர் எனர்ஜி, ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் தயாரிப்புகள் சற்று அதிகமான விலை உடையவை என்றாலும் கூட, அவை பிரீமியமான தயாரிப்புகளாக திகழ்கின்றன.

Most Read Articles

English summary
Ather opens new retail outlet in maharashtra check details here
Story first published: Saturday, June 18, 2022, 22:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X