வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

ஆட்டம் வடேர் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆட்டமொபைல் ஆகும். தெலுங்கானாவில் படன்செரு என்கிற பகுதியில் நெட் ஜீரோ என்கிற பெயரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் அதன் முதல் அதி-வேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக ஆட்டம் வடேரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

பழமையான கேஃப்-ரேஸர் மோட்டார்சைக்கிளின் தோற்றத்தில் காட்சியளிக்கும் ஆட்டம் வடேரின் விலை ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஆட்டம் வடேரை முன்பதிவு செய்யும் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என ஆட்டமொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முன்பதிவிற்கான முன்தொகையாக ரூ.999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

ஆட்டம் வடேரின் அதிகப்பட்ச வேகமாக மணிக்கு 65கிமீ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 2.4kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். வலிமையான குழாய் சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆட்டம் வடேர் இ-பைக்கில் எல்இடி இண்டிகேட்டர்கள் மற்றும் டெயில்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளன.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

சுமார் 14 லிட்டர் கொள்ளளவில் உள்ள இதன் போலி பெட்ரோல் டேங்கை பயனர்கள் பொருட்களை வைக்கும் பகுதியாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்தியாவில் அதிவேக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்று பார்த்தால், தற்போதைக்கு குறைவுதான். அதிலிலும் பெரும்பான்மையான இடங்களை செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே ஆக்கிரமித்துள்ளன.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

அவற்றின் விலைகள் ஆட்டம் வடேரை காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆட்டமொபைல் நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பிடம் (ARAI) இருந்து ஆட்டம் வடேர் அனுமதி சான்றிதழினை பெற்றுள்ளதாக அறிவித்திருந்தது. இதன் மூலமாக ஏஆர்ஏஐ-யிடம் அனுமதி பெற்ற மிகவும் சில எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக ஆட்டம் வடேர் திகழ்கிறது.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

ஆட்டம் வடேர் என்ற அதிவேக எலக்ட்ரிக் பைக் மட்டுமின்றி, ஆட்டம் 1.0 என்ற மற்றொரு இ-பைக்கையும் ஆட்டமொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. குறை-வேக கேஃப் ரேஸரான இது கடந்த 2020 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியின் சுற்றுவட்டாரங்களில் ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக் பிரபலமானதாக உள்ளது.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

ஆட்டம் வடேரின் அறிமுகத்தின்போது பேசிய ஆட்டமொபைல் நிறுவனர் வம்சி ஜி கிருஷ்ணா, "ஆட்டமொபைலில் உள்ள நம் அனைவருக்கும் இது ஒரு பெருமையான நாள். ஆட்டம் வடேர் சிறிது காலமாக உருவாக்கத்தில் இருக்கிறது. ஒரு கனவு நனவாகும்போது அது ஒரு சிறந்த உணர்வு. இது பசுமையான இந்தியாவுக்கான காலத்தின் தேவை மட்டுமல்ல, வாடிக்கையாளர்களை கொண்டுவருவதில் எந்த முயற்சியையும் விட்டு வைக்காத எங்கள் முழு குழுவிற்குமான தேவை ஆகும்.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

65kmph அதிவேகம் மட்டுமின்றி, 100கிமீ/சார்ஜ் வரம்பிலும் இது வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடியது. ஆட்டம் வடேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு ஸ்விட்ச்கள் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக உயர்தர டயர்களை கொண்டுள்ளது. இந்திய சாலைகள் மற்றும் ரைடர்களை மனதில் கொண்டு, இந்த எலக்ட்ரிக் பைக்கை எங்களின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு நிபுணர்கள் மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் உள்நாட்டு பூஜ்ஜிய மாசு-உமிழ்வு தொழிற்சாலையின் மூலம் வடிவமைக்க முடிந்தது.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

இவற்றின் மூலமாக ஆட்டம் வடேர் உண்மையிலேயே பசுமையான & நிலையான எலக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்டுள்ளது. முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு எங்களது இந்த பைக்கை ரூ.99,999 என்கிற ஆரம்ப விலையில் வழங்குகிறோம். அவர்கள் ரூ.999 என்ற குறைந்த முன்தொகையில் பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம்.நமது தேசத்தின் மாசு நெருக்கடி மற்றும் உலகம் எதிர்கொள்ளும் காலநிலை நெருக்கடிக்கு ஆட்டம் வடேர் ஒரு ஊக்கமளிக்கும் தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்

தெலுங்கானா & ஆந்திராவில் வேகமாக விரிவடைந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஆட்டமொபைல் விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், சமீபத்தில்தான் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையின் மொத்த வருடாந்திர உற்பத்தி திறன் 25,000 யூனிட்களில் இருந்து சுமார் 3 லட்ச யூனிட்களாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, July 1, 2022, 11:31 [IST]
English summary
Atum vader electric motorcycle launched in india price range feature details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+