பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

பஜாஜ் நிறுவனம் கடும் விற்பனை சரிவை சென்ற 2022 பிப்ரவரி மாதத்தில் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, 2022 பிப்ரவரி மாதத்தில் கடும் விற்பனைச் சரிவைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் 16 சதவீதம் விற்பனைச் சரிவையே சென்ற மாதத்தில் சந்தித்திருக்கின்றது.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

அதாவது, 2021 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 2022 பிப்ரவரியில் பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்புகள் 16 சதவீதம் குறைவாக விற்பனையாகியிருக்கின்றது. இதனால் நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது என்றே கூறலாம். ஒட்டுமொத்தமாக 2022 பிப்ரவரியில் பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்புகள் 3,16,020 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

அதேவேலையில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பார்த்தோமேயானால் அதிகபட்சமாக 3,75,017 யூனிட்டுகள் வரையில் பஜாஜின் தயாரிப்புகள் விற்பனையாகின. இத்தகைய சிறப்பான விற்பனையில் இருந்தே 3,16,020 யூனிட்டுகளாக பஜாஜ் விற்பனை எண்ணிக்கைச் சரிவைச் சந்தித்திருக்கின்றது.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

உள்நாட்டில் விற்பனைக் குறைந்த காரணத்தினாலேயே இந்த மாபெரும் விற்பனை வீழ்ச்சியை பஜாஜ் சந்தித்துள்ளது. 35 சதவீதம் வரை உள்-நாட்டு விற்பனையில் நிறுவனம் சரிவைச் சந்தித்துள்ளது. 2021 பிப்ரவரியில் மிக சிறப்பான வரவேற்பாக 1,48,934 யூனிட்டுகள் வரை பஜாஜ் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

ஆனால், 2022 பிப்ரவரியில் 96,523 யூனிட்டுகளாக அது சரிந்திருக்கின்றது. இத்தகைய பெருத்த உள்நாட்டு விற்பனை வீழ்ச்சியிலேயே பஜாஜ் ஆட்டோ தற்போது சிக்கியிருக்கின்றது. இந்த நிறுவனம் மட்டுமின்றி நாட்டின் பிற முன்னணி நிறுவனங்களான ஹீரோ, ஹோண்டா உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

அதேவேலையில், பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதியிலும் கணிசமான சரிவைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,82,814 யூனிட் வாகனங்களை மட்டுமே நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது. 2021 பிப்ரவரியில் 1,83,563 யூனிட் வாகனங்களை அது ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

இதேபோல் நிறுவனத்தின் வர்த்தக பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் விற்பனையும் கணிசமான அளவில் சரிவைச் சந்தித்திருக்கின்றது. 2021 பிப்ரவரியில் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் 42,454 விற்பனையாகின. ஆனால், கடந்த 2022 பிப்ரவரியில் லேசான சரிவைப் பெற்று 36,683 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

இவ்வாறு அனைத்து பிரிவு விற்பனையிலும் இந்திய நிறுவனம் பஜாஜ் அடி வாங்கியிருக்கின்றது. இந்த நிலை பஜாஜ் நிறுவனத்திற்கு மட்டுமின்றி இந்திய இருசக்கர வாகன உலகிற்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பஜாஜ் நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனையா!.. கடும் விற்பனை சரிவு! எத்தன சதவீதம் வீழ்ச்சி அடைஞ்சிருக்கு தெரியுமா?

பஜாஜ் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை விபரம் பட்டியலாக:

2-Wheelers Feb-22 Feb-21 Growth (%)
Domestic 96,523 1,48,934 -35
Exports 1,82,814 1,83,629 -
Sub-Total 2,79,337 3,32,563 -16
Commercial Vehicles
Domestic 16,224 15,877 2
Exports 20,459 26,577 -23
Sub-Total 36,683 42,454 -14
Total (2Wh + CV)
Domestic 1,12,747 1,64,811 -32
Exports 2,03,273 2,10,206 -3
Sub-Total 3,16,020 3,75,017 -16

More from DriveSpark

Article Published On: Wednesday, March 2, 2022, 16:12 [IST]
English summary
Bajaj auto sales decline in feb 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+