போற போக்க பாத்தா ரோட்டுல ஃபுல்லா பஜாஜ் பைக் தான் ஓடும் போலயே... ஒரு மாசத்துல இவ்வளவு வளர்ச்சியா?
கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் நிதியாண்டின் முதல் 5 மாதத்திற்கான பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை ரிப்போர்ட் வந்துள்ளது. இது குறித்த விரிவான தெளிவான விபரங்களைக் கீழே படியுங்கள்.

பஜாஜ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கமர்ஷியல் வாகன விற்பனையைச் சேர்த்து மொத்தம் 49 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே ஏற்றுமதியில் 28 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 2,56,755 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 1,72,595 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது விற்பனையில் 49 சதவீத வளர்ச்சியாகும். இதுவே ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 2,00,675 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இதுவே கடந்த மாதம் மொத்தம் 1,44,840 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. அதாவது ஏற்றுமதியில் 28 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலே உள்ள தகவல்கள் இருசக்கர வாகனம் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் சேர்ந்தது தான். இதுவே இருசக்கர வாகனத்தைப் பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 2,33,838 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த மாதம் தான் பஜாஜ் நிறுவனம் அதிகமாக பஜாஜ் பிளாட்டினா பைக்கை விற்பனை செய்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1,57,971 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. பிளாட்டினா மட்டுமல்ல இந்த விற்பனை உயர்வுக்கு பல்சர், டோமினார், அவெஞ்சர், சிடி100,சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஏற்றுமதியில் இருசக்கர வாகன விற்பனையும் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 1,80,339 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்த நிலையில் இந்தாண்டு வெறும் 1,21,787 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியைப் பொருத்தவரை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஓட்டு மொத்தமாக 3,55,625 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த விற்பனையான3,38,310 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. கமர்ஷியல் வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 57 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த மாதம் மொத்தம் 22,917 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 14,624 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது மட்டுமல்ல கமர்ஷியல் வாகனங்கள் ஏற்றுமதியில் சிறப்பான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 23,053 வானகங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இதுவே கடந்தாண்டு மொத்தம் 20,336 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இது ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியாகும். ஒட்டு மொத்தமாக கமர்ஷியல் வாகன விற்பனை 31 சதவீதம் அதிகமாகியுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்த கமர்ஷியல் வாகன விற்பனை 34,960 ஆக இருந்தது. தற்போது கடந்த மாதம் அது 45,970 ஆக உயர்ந்துள்ளது. கமர்ஷியல் வாகனத்தில் பஜாஜ் நிறுவனம் ஆர்இ இவி 283 மற்றும் ஆர்இ இவி கார்கோ ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை டெஸ்ட் செய்து வருகிறது என்பது கூடுதல் தகவல்

கடந்த ஆகஸ்ட் மாதம் நிதியாண்டின் 5வது மாத முடிவாகும் இந்த நிதியாண்டிற்கான விற்பனை நிலவரமும் வெளியாகியுள்ளது. இதில் பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகனம் மற்றும் கமர்ஷியல் வாகன விற்பனையில் ஒட்டு மொத்தமாக 3 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. 2021 இதே ஏப்-ஆகஸ்ட் வரையிலான ரிப்போர்ட்டில் மொத்தம் 17,48,400 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. ஆனால் இ்நதாண்டு வெறும்16,89,911 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இதில் உள்நாட்டு விற்பனையை மட்டும் பார்த்தால் 14 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. 2021ம் ஆண்டு நிதியாண்டு முதல் 5 மாதத்தில் 6,97,005 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இந்த நிதியாண்டில் இது 7,92,547 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஏற்றுமதியில் 15 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

மொத்தம் 10,51,395 வாகனங்கள் கடந்த 2021 ஏப்- ஆகஸ்ட் காலத்தில் ஏற்றுமதியாகியிருந்த நிலையில் இந்தாண்டு இது வெறும் 8,97,364 வாகனங்களாகக் குறைத்துள்ளது. உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனையில் பஜாஜ் நிறுவனம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

6,56,755 வாகனங்கள் மட்டுமே கடந்தாண்டு ஏப் - ஆகஸ்ட் காலத்தில் விற்பனையாகியிருந்த நிலையில் இந்தாண்டு இது 7,12,640 ஆக உயர்ந்துள்ளது. இதுவே ஏற்றுமதியில் 12 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு 9,11,429 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்த நிலையில் இந்தாண்டு அது 8,05,197 வாகனங்களாகக் குறைந்துள்ளது.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இருசக்கர வாகன விற்பனை 3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. நிதியாண்டின் முதல் 5 மாதத்தில் மொத்தம் 15,17,837 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் முதல் 5 மாதத்தில் 15,68,184 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

முதல் 5 மாத கமர்ஷில் வாகன விற்பனையைப் பொருத்தவரை மொத்தம் உள்நாட்டு விற்பனையில் வளர்ச்சி கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மொத்தம் 79,907 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மொத்தம் 40,250 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

ஆனால் ஏற்றுமதியில் 34 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மொத்தம் 1,39,966 வாகனங்கள் ஏற்றுமதியான நிலையில் இந்தாண்டு வெறும் 92,167 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கமர்ஷியல் வாகன விற்பனை 5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு 1,80,216 ஆக இருந்த விற்பனை இந்தாண்டு 1,72,074 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications