பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த 2021 டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒட்டு மொத்தமாக 3,62,470 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் பஜாஜ் நிறுவனத்தின் பயணிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களும் அடங்குகின்றன. இது 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.7% குறைவாகும்.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

ஏனெனில் அந்த மாதத்தில் 3,72,532 யூனிட் வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், கடந்த மாதத்தில் மொத்தம் 1,45,979 யூனிட் பஜாஜ் வாகனங்கள் நம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

ஒட்டுமொத்த விற்பனை குறைந்திருந்தாலும், பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 4.56% அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த மாதத்தில் 1,39,606 யூனிட் வாகனங்களை உள்நாட்டு சந்தையில் இந்த புனேவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் விற்பனையில் பெரும்பகுதி பயணிகள் இருசக்கர வாகனங்களாகவே இருக்கின்றன.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

எந்த அளவிற்கு என்றால், கடந்த மாதத்தில் விற்கப்பட்ட மொத்த 3,62,470 வாகனங்களில் கிட்டத்தட்ட 1,27,593 யூனிட்கள் பஜாஜ் 2-வீலர்ஸ் ஆகும். மீதி 18,386 யூனிட்கள் மட்டுமே கமர்ஷியல் வாகனங்களாகும். இந்தியாவில் விற்பனை செய்வதை காட்டிலும், இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து வெளிநாட்டு சந்தைகளுக்கே அதிகளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி செய்த வாகனங்களின் எண்ணிக்கை 2,16,491 ஆகும். இதில் 25,315 கமர்ஷியல் வாகனங்களும், 1,91,176 பயணிகள் இருசக்கர வாகனங்களும் அடங்குகின்றன. இருப்பினும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த மாத ஏற்றுமதி எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 9.82% குறைவாகும்.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

ஏனென்றால் 2020 டிசம்பரில் மொத்தம் 2,32,926 வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு பஜாஜ் ஆட்டோ ஏற்றுமதி செய்திருந்தது. மொத்தமாக கடந்த 2021ஆம் ஆண்டில் (ஜனவரி- டிசம்பர்) 17,58,192 பயணிகள் 2-வீலர்ஸை பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டில் இதனை காட்டிலும் 0.7% குறைவாக 17,45,750 யூனிட் 2-வீலர்ஸை விற்பனை செய்திருந்தது.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

பஜாஜ் ஆட்டோவின் மோட்டார்சைக்கிள்கள் வரிசையில் தற்சமயம் டோமினார், பல்சர், அவென்சர், பிளாட்டினா மற்றும் சிடி உள்ளிட்ட மாடல்கள் அடங்குகின்றன. வெவ்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்ற இவை ஒவ்வொன்றும், என்ஜின் தேர்வுகளையும் தனி அடையாளத்துடன் பெறுகின்றன. இதனுடன் சேத்தக் ஸ்கூட்டர் மாடலையும் சேர்த்து கொள்ளலாம்.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

ஆனால் சேத்தக் ஆனது பழமையான கிளாசிக் தோற்றத்தை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இவை தவிர்த்து, சில 2-வீலர்ஸை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு என்றே தனது தொழிற்சாலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. உதாரணத்திற்கு பஜாஜ் பாக்ஸர். இந்தியாவில் விற்பனையில் இல்லை என்றாலும், வெளிநாட்டு சந்தைகளில், அதிலிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பாக்ஸர் பிரபலமான மற்றும் மலிவான பைக்காக விளங்குகிறது.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

கமர்ஷியல் வாகனங்களில் மூன்று-சக்கர வாகனங்களும், குட் என பெயர் கொண்ட குவாட்ரி சைக்கிளும் அடங்குகின்றன. இதில் குட் குவாட்ரிசைக்கிள் பல்வேறு நாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலிவான மற்றும் எளிமையான ரைடிங் நிலைப்பாட்டை கொண்ட இதற்கும் உலகளவில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால், அமெரிக்க ஹாலிவுட் படம் ஒன்றில் பெரும்பகுதியாக பஜாஜ் குட் குவாட்ரிசைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பஜாஜ் ஆட்டோவின் கடந்த டிசம்பர் மாத விற்பனை 2.7% குறைவு!! ஏற்றுமதியும் கணிசமாக சரிந்தது!

இதற்கிடையில் எலக்ட்ரிக் வாகன சந்தையிலும் தீவிரமாக இறங்குவதற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக புனேவில் மேலும் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டு வருவதாக சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. வருடத்திற்கு 5 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திறன் உடன் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் மூலம் சேத்தக்கிற்கான தேவைகளை சமாளிக்க முடியும் மற்றும் கூட்டணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களையும் எந்தவொரு பிரச்சனையுமின்றி உருவாக்க முடியும் என பஜாஜ் நம்புகிறது.

Most Read Articles

English summary
Bajaj auto YoY sales decline of 2.7 percent compared to Dec 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X