பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தளவு விற்பனை வளர்ச்சியை இந்திய சந்தையில் பெற்றிருப்பது அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் உற்பத்தியை ஒட்டுமொத்தமாக கைவிட்டிருந்த நிலையில் நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பின்னர் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணியை கடந்த 2019ம் ஆண்டில் கையில் எடுத்தது. நிச்சயம் மக்கள் மத்தியில் இந்த தயாரிப்பிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பஜாஜ், சேத்தக் உற்பத்தியில் களமிறங்கியது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

இதற்கேற்ப அத்தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில் இந்தியர்கள் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டாட தொடங்கியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் விற்பனையில் மிகப் பெரிய வளர்ச்சியை மின்சார ஸ்கூட்டர் எட்டியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

விற்பனைக்கு வந்த முதல் நாளில் இருந்து இப்போது வரை 14 ஆயிரம் யூனிட்டுகள் வரை பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. மேலும், 16 ஆயிரம் புக்கிங்குகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குவிந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆகையால், விரைவில் இன்னும் பல ஆயிரம் யூனிட் விற்பனையை பஜாஜ் சேத்தக் எட்டும் என யூகிக்க முடிகின்றது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

தொடர்ச்சியாக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, நிறுவனம் உற்பத்தி செய்யும் எண்ணிக்கையைத் தாண்டி டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகையச் சூழலை கையாளும் விதமாக, அதாவது, சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை பன் மடங்கு அதிகரிக்கச் செய்யும் வகையில் புதிய உற்பத்தி ஆலையை புனேவில் தொடங்கியிருக்கின்றது, பஜாஜ்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

ஆகையால், எதிர்காலத்தில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நிலவும் தேவையை உடனடியாக பஜாஜால் பூர்த்தி செய்ய முடியும் என யூகிக்க முடிகின்றது. இந்த புதிய உற்பத்தி ஆலையில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி நிறுவனத்தின் எதிர்கால மின்சார வாகனங்களும் அங்கு வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

இதை உறுதிப்படுத்தும் வகையில், ஏற்கனவே நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணியில் களமிறங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை உண்மையாக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஜாஜ் சேத்தக்குடன் வேறு புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமும் சாலை சோதனையோட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், புதுமுக ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, அது அதிக ரேஞ்ஜ் தரும் மின்சார வாகனமாக விற்பனைக்கு வரலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அது விற்பனைக்குக் கிடைக்கும் லிஸ்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையும் அடங்கும். சென்னையை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்த பட்டியலில் பஜாஜ் இணைத்திருந்தது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

ஆனால், கோவை மற்றும் மதுரை இந்த பட்டியலில் சற்று கால தாமதமாகவே இணைக்கப்பட்டன. நடப்பாண்டு பிப்ரவரி மாத்திலேயே இந்த நகரங்கள் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.8kW எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இத்தனை யூனிட் விற்பனையாகியிருச்சா!.. புதிய ஆலையை திறந்தது தப்பே இல்ல!

இந்த மின் மோட்டார் 5.4 பிஎச்பி மற்றும் 16.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 3 kWh ஐபி67 லித்தியம் அயன் பேட்டரி பேக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் முழுமையான சார்ஜில் 95 கிமீ ரேஞ்ஜை வழங்கும். ஈகோ மோடிலேயே இந்த அதிகபட்ச ரேஞ்ஜை அது வழங்கும். பஜாஜ் சேத்தக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும்.

Most Read Articles
English summary
Bajaj chetak e scooter sales crosses 14 thousand unit since launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X