பல்சர் பைக்கில் இப்படி ஒரு புது மாடல் வந்திருக்கா! இந்திய இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பஜாஜ்!

பல்சர் 125 பைக்கில் புதிய மாடல் ஒன்றை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar). பல்சர் என்ற பெயரின் கீழ் பஜாஜ் நிறுவனம் நிறைய மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், பஜாஜ் பல்சர் 125 பைக்கும் ஒன்று (Bajaj Pulsar 125).

பல்சர் பைக்கில் இப்படி ஒரு புது மாடல் வந்திருக்கா! இந்திய இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பஜாஜ்!

இந்த சூழலில், பல்சர் 125 பைக்கின் புதிய கார்பன் ஃபைபர் எடிசன் மாடலை பஜாஜ் (Bajaj Pulsar 125 Carbon Fibre Edition) நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சிங்கிள் சீட் மற்றும் ஸ்பிளிட் சீட் என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த கார்பன் ஃபைபர் எடிசன் விற்பனைக்கு கிடைக்கும்.

அதேபோல் நீலம் மற்றும் சிகப்பு என 2 கலர் ஆப்ஷன்களில் இந்த புதிய மாடல் விற்பனை செய்யப்படும். பஜாஜ் பல்சர் 125 பைக்கின் சிங்கிள் சீட் வெர்ஷனின் விலை 89,254 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் ஸ்பிளிட் சீட் வெர்ஷனின் விலை 91,642 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

புதிய பஜாஜ் பல்சர் 124.4 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 11.64 பிஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 10.80 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தி, பின் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

பிரேக்கிங்கை பொறுத்தவரையில், இந்த பைக்கின் முன் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (Ground Clearance) 165 மிமீ ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த பைக்கின் எடை 142 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கார்பன் ஃபைபர் எடிசன் மூலம் பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் வழக்கமான பெட்ரோல் டூவீலர்கள் மட்டுமல்லாது, சேத்தக் (Bajaj Chetak) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இது இந்தியாவில் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே ஏத்தர் 450எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் என ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியில் உள்ள நிலையில், தற்போது ஹீரோ விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் போட்டியில் குதித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்காக விடா என்ற புதிய பிராண்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிராண்டின் கீழ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் வி1 என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 15, 2022, 23:57 [IST]
English summary
Bajaj pulsar 125 carbon fibre edition price important details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+