பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

பஜாஜ் (Bajaj) நிறுவனம் பல்சர் 250 (Pulsar 250) மாடலில் 'பிளாக் எடிசன்' (Black edition) எனும் சிறப்பு பதிப்பை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ் (Bajaj)-ம் ஒன்று. இந்நிறுவனம், அது விற்பனைக்கு வழங்கி வரும் பிரபலமான டூ-வீலர் மாடல்களில் ஒன்றான பல்சரில் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

'பிளாக் எடிசன்' (Black edition) எனும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதாவது, பல்சர் 250 (Pulsar 250) மாடலை தழுவிய பிளாக் எடிசன் வரவை உறுதிப்படுத்தும் வகையில் பஜாஜ் நிறுவனம் டீசர் படங்களை அதன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

ஆனால், இந்த வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்ற உறுதியான தகவலை அது வெளியிடவில்லை. இதேபோல், இந்த வாகனம் என்ன பெயரில் விற்பனைக்கு வரும் என்ற உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை. அதேவேலையில் பல்சர் என்250 பிளாக் எடிசன் எனும் பெயரில் அது விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

ஆனால், நிறுவனமோ இருசக்கர வாகனத்தின் டீசர் படத்தை மட்டுமே வெளியிட்டிருக்கின்றது. வேறு எந்த முக்கிய தகவலையும் அது வெளியிடவில்லை. நிறுவனத்தின் இந்த மாதிரியான நடத்தையால் என்ன மாதிரியான அம்சங்களுடன் பல்சர் பிளாக் எடிசன் விற்பனைக்கு வரும் என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

அதேநேரத்தில், தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் என்250 பைக்கை தழுவியே புதிய பிளாக் எடிசன் உருவாக்கப்பட்டிருப்பதனால், இரு பைக்குகளும் ஒரே மாதிரியான அம்சங்களுடன் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, எஞ்ஜின் மற்றும் சேஸிஸ் உள்ளிட்டவை ஒரே மாதிரியானதாக இருக்க எக்கசக்க வாய்ப்புகள் உள்ளன.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

அதேவேலையில் இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதால் கூடுதல் சிறப்பு அலங்காரப் அம்சங்களும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் என்250 பைக்கில் 249.07 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் வசதிக் கொண்டது.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், கியர் இன்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த மாதிரியான சிறப்பம்சங்களுடனேயே பல்சர் பிளாக் எடிசன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இந்த பைக் ஓர் சிறப்பு பதிப்பு வாகனம் என்பதால் கூடுதல் சிறப்பு அலங்கார அம்சங்களுடனும் பிளாக் எடிசன் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

இதுதவிர, அனைத்து பாகங்களும் கருப்பு வண்ணத்திலேயே இருக்கும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் இன்னும் சில இருசக்கர வாகன தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அது பல்சர் என்160 பைக்கை களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனம் 2022 ஜூலைக்குள் இந்தியாவை வந்தடைய இருப்பதாக கூறப்படுகின்றது.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

பஜாஜ் நிறுவனம் மிக சமீபத்தில்அதன் அதிகம் மைலேஜ் தரும் சிடி 100 மாடல் பைக்கை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியது. அதாவது விற்பனையில் இருந்து அகற்றியது. இந்த அதிரடி செயலுக்கான காரணத்தை அது வெளியிடப்படவில்லை. இது ஓர் மலிவு விலை தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட இருசக்கர வாகனம் வாகனமாகும். இந்த வாகனத்தின் வெளியேற்றம் பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிளாக் எடிசனில் வரும் பல்சர் என்250... டீசரை வெளியிட்டு இளைஞர்களை கிரங்கடித்த பஜாஜ்!

அதேவேலையில், இது தற்காலிக வெளியேற்றம்தான், விரைவில், இது அப்டேட்டட் வெர்ஷனாக விற்பனை வரும் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. இந்த தகவல் அதிர்ச்சியில் உறைந்த இந்திய பட்ஜெட் டூ-வீலர் பிரயர்களுக்கு லேசான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பஜாஜ் சிடி 100 ரூ. 53,696 என்ற மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 17, 2022, 13:45 [IST]
English summary
Bajaj pulsar 250 black edition teaser revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+