விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

பஜாஜ் நிறுவனம் பல்சர் 250 பைக்கில் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. அது என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் தனது பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகளின் கலர் பேலட்டை பஜாஜ் நிறுவனம் சத்தமே இல்லாமல் அப்டேட் செய்துள்ளது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வண்ண தேர்வு 'கரீபியன் ப்ளூ' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பஜாஜ் பல்சர் என்250 (Bajaj Pulsar N250) மற்றும் பஜாஜ் பல்சர் எஃப்250 (Bajaj Pulsar F250) ஆகிய இரண்டு பைக்குகளுக்குமே இந்த வண்ண தேர்வு புதியது ஆகும்.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

புதிய வண்ண தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பஜாஜ் பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகளின் விலை உயர்த்தப்படவில்லை. தற்போதைய மாடல்கள் விற்பனை செய்யப்படும் அதே விலையில்தான் புதிய வண்ண தேர்வுடன் கிடைக்கும் பஜாஜ் பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகளும் விற்பனை செய்யப்படும். இதன்படி பார்த்தால் பஜாஜ் பல்சர் என்250 கரீபியன் ப்ளூ, 1,43,680 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

அதே நேரத்தில் பஜாஜ் பல்சர் எஃப்250 கரீபியன் ப்ளூ, 1,44,979 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். இந்த பைக்குகளில் ஹெட்லைட் கவுல் (பல்சர் என்250 பைக்கில்), ஃபேரிங் (பல்சர் எஃப்250 பைக்கில்), முன் பக்க ஃபெண்டர், இன்ஜின் கவுல், எரிபொருள் டேங்க் மற்றும் ரியர் பேனல் போன்ற பாடி பேனல்கள் ப்ளூ கலரில் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

அத்துடன் இந்த பைக்குகளில், பாடியின் கலரிலேயே அலாய் வீல்களில் பட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ண வேலைப்பாடுகளை தவிர, பஜாஜ் பல்சர் என்250 மற்றும் பஜாஜ் பல்சர் எஃப்250 ஆகிய பைக்குகளில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே பஜாஜ் பல்சர் என்250 மற்றும் பஜாஜ் பல்சர் எஃப்250 ஆகிய இரண்டு பைக்குகளிலும் ஏற்கனவே உள்ள இன்ஜின்தான் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

அது 249 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.1 பிஹெச்பி பவரையும், 21.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. பஜாஜ் பல்சர் என்250 மற்றும் பஜாஜ் பல்சர் எஃப்250 ஆகிய 2 பைக்குகளிலும் ஏராளமான வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

இதில், முழு எல்இடி லைட்டிங், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இந்த வசதிகள் அனைத்தும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகளை பற்றிய மற்றொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகள் சமீபத்தில் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளன. 10 ஆயிரம் பைக்குகள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், பஜாஜ் பல்சர் 250 இந்த மைல்கல்லை கடந்துள்ளது. பஜாஜ் பல்சர் 250 பைக் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

பல்சர் 250 பைக் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்திருப்பது தொடர்பான தகவலை, பஜாஜ் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த சூழலில் தற்போது பஜாஜ் பல்சர் என்250 மற்றும் பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்குகளில் புதிய வண்ண தேர்வு அதிரடியாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்ற பெயர் மிகவும் பிரபலமாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பல்சர் லைன்-அப்பில் பஜாஜ் நிறுவனம் பல்வேறு பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், பஜாஜ் நிறுவனம் தனது மிகவும் பிரபலமான பல்சர் லைன்-அப்பை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த அதிரடி... பல்சர் 250 பைக்கில் பஜாஜ் செய்த சிறப்பான சம்பவம்!

எனவே பல்சர் லைன்-அப்பில் மேலும் புதிய மாடல்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். இந்த புதிய மாடல்களை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் பஜாஜ் பல்சர் பைக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலைகள், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2022, 16:21 [IST]
English summary
Bajaj pulsar n250 f250 launched with new colour details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+