பட்ஜெட் விலையில் ஓர் ஸ்போர்ட்ஸ் டைப் பைக்... ரைடு செஞ்சா எப்படி இருக்கும்? பல்சர் பி150 ரைடு ரிவியூ!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன நிறுவனமான பஜாஜ், அண்மையில் அதன் புகழ்பெற்ற பல்சர் 150 பைக்கை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியது. அதாவது விற்பனையில் இருந்து முழமையாக அகற்றியது. இதன் விளைவாக இந்த பிரபலமான பல்சர் 150 பைக்கை வாங்க முடியாத சூழல் தற்போது நாட்டில் உருவாகி உள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனையில் இருந்த டூ-வீலரே பல்சர் 150. இதன் வெளியேற்றும் உண்மையில் பல்சர் லவ்வர்ஸ்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றே கூறலாம். இந்த பைக்கை வெளியேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே பஜாஜ் நிறுவனம் பல்சர் பி150 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் வருகையின்போது கூட எந்த அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. அதாவது, விரைவில் பல்சர் 150-ஐ சந்தையில் இருந்து அகற்றவே புதிய பி150 மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என தெரிவிக்கவில்லை.

பல்சர் பி150

இந்த தகவலை சில நாட்களுக்கு பின்னரே பஜாஜ் வெளியிட்டது. அதாவது, பல்சர் 150 பைக்கின் வெளியேற்றத்தை அறிவித்துவிட்டு, இதை ரீ-பிளேஸ் செய்யும் விதமாகவே பல்சர் பி150 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த தகவல் பல்சர் 150 பிரியர்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்த பல்சர் பைக்கை வெளியேற்றும் அளவிற்கு இந்த பைக் என்ன அவ்வளவு சூப்பரானதா? என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது. இந்த கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அண்மையில் நாங்கள் புதிய பல்சர் பி150 பைக்கை ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அப்போது கிடைத்த தகவலையே பிரத்யேகமாக இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிய பல்சரின் தோற்றம்:

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை நவீன காலத்திற்கு ஏற்ற ஸ்டைலில் உருவாக்கியிருக்கின்றது. இளைஞர்கள் மத்தியில் ரேஸ் ஸ்டைல் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த பைக்கை சற்றே முரட்டுத் தனமான ஸ்போர்ட்ஸ் ரக வகனமாக உருவாக்கி உள்ளது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக பைக்கின் முகப்பு பகுதி இருக்கின்றது. பெரிய நேக்கட் ஸ்டைல் ஹெட்லேம்ப் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே இருசக்கர வாகனத்தின் முன் பக்கத்திற்கு ஆக்ரோஷமான தோற்றத்தை வழங்குகின்றது.

பல்சர் பி150

இந்த ஹெட்லைட் புரஜெக்டர் ரக எல்இடி லைட்டாகும். இதற்கு மேல் பகுதியிலேயே மெல்லிய எல்இடி பைலட் லைட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் முகப்பு பகுதிக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த மாதிரியான லைட்டை பல்சர் என் 160 மற்றும் பல்சர் என் 250-யிலும் காண முடியும். ஆனால், அவற்றில் இடம் பெற்றிருப்பதைப் போல் இல்லாமல் ஒற்றை துண்டு அலகாக இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் இன்டிகேட்டர்கள் ஹேண்டில் பாருக்கு நேராக நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

அடர் கருப்பு நிறத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் விண்ட் ஸ்கிரீனிலேயே இந்த லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், நம்பர் பிளேட்டும் இங்கே இருக்கும் வகையில் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இது ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டருக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பைக்கிற்கு மிக சிறப்பான கவர்ச்சியை தோற்றத்தை வழங்கும் விதமாக பைக்கின் உடல் நிறத்திலான ஃபெண்டர் மற்றும் எஞ்ஜின் குவார்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. எஞ்ஜின் குவார்ட் மோட்டாருக்கு அடி பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது சற்று கூறான தோற்றத்தில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

பல்சர் பி150

நீர் மற்றும் சகதியால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக இந்த அம்சம் அதில் வழங்கப்பட்டுள்ளது. பல்சர் பி150-இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 14 லிட்டர் வரை எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். கட்டுமஸ்தான அமைப்பைக் கொண்ட எரிபொருள் தொட்டியையே இந்த பைக்கில் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த தொட்டிக்கு சற்று மேல் பகுதியில் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் விதமாக யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், பஜாஜின் இன்ஃபினிட்டி டிஸ்பிளேவும் இங்கேயே பொருத்தப்பட்டுள்ளது. இது நடு தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகும். இந்த பைக்கில் அன்டர் பெல்லி டைப் எக்சாஸ்ட் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இருசக்கர வாகனங்களில் புகையை வெளியேற்றும் குழாய், பைக்கின் பக்கவாட்டு பகுதியில் மேல் நோக்கியவாறு நீண்டு காணப்படும். இந்த அமைப்பில் இல்லாமல் இருசக்கர வாகனத்தின் அடிப்பகுதியில் அது இருக்கும் வகையில் எக்சாஸ்ட் செட்-அப் இருக்கின்றது. இது முற்றிலும் தனித்துவமான லுக்கை பைக்கிற்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சிங்கிள் டிஸ்க் மற்றும் இரட்டை டிஸ்க் ஆகிய தேர்வுகளே அதில் வழங்கப்படுகின்றது. இதில், ஒற்றை டிஸ்க் பிரேக் தேர்வில் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கையும், டூயல் டிஸ்க் பிரேக் தேர்வில் இரு துண்டு அமைப்புடைய இருக்கையும் வழங்கப்பட்டுள்ளது. இதில், இரட்டை துண்டு இருக்கை அமைப்புடைய டூயல் டிஸ்க் பிரேக் தேர்வே மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டதாக இருக்கின்றது.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கின் பின் பக்கத்தையும் மிகவும் அழகானதாக வடிவமைத்துள்ளது. இதன் பின் அழகிற்காக ஸ்பிளிட் டைப் எல்இடி லைட்டுகள் பல்சர் எனும் சிக்னேச்சருடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பைக்கின் பின் பக்கத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் 110/80 அளவிலான அகலமான டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்களை பெற்றிருக்கின்ற போதிலும் இதன் ஒட்டுமொத்த எடை 140 கிலோ மட்டுமே உள்ளது.

ரைடிங் அனுபவம் எப்படி இருந்தது?

தினந்தோறும் ரேஸ் பைக்கை ஓட்டும் அனுபவம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பைக் பெஸ்டான தேர்வாக இருக்கும். இதற்கேற்ப அதிக பவர்ஃபுல் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 149.68 சிசி மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 8,000 ஆர்பிஎம்மில் 14.3 பிஎச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்மில் 14.65 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திறனே நமக்கு தினந்தோறும் ரேஸ் பைக்கை ஓட்டும் அனுபவத்தை வழங்கும்.

இந்த மோட்டார் மட்டுமே உங்களுக்கு ரேஸ் பைக் ஓட்டும் அனுபவத்தை வழங்கப் போவதில்லை. பைக்கின் தோற்றமும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு கருவிகளும் உங்களுக்கு ரேஸ் பைக்கை ஃபீலை வழங்கும். இந்த 149.68 சிசி மோட்டாருடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, செயின் ஊடாக வீல்களுக்கு இயக்கத்தைக் கடுத்துகின்றது. இதன் ஆக்சலரேஷன் உடனடி ரெஸ்பான்ஸ் வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இதேபோல், இதில் அதிர்வுகளும் மிகக் குறைவாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆகையால், சிட்டி பயன்பாட்டிற்கு மிக உகந்ததாக இது இருக்கும்.

குறிப்பாக, இதில் வழங்கப்பட்டுள்ள 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பைக்கின் இயக்கத்தை மிக சுலபமானதாக மாற்றுகின்றது. மேலும், இயக்கத்தின்போது மிக சிறப்பான ஒலியை இதன் எக்சாஸ்ட் வெளியேற்றுகின்றது. ஆகையால், எப்போது இயக்கினாலும் இந்த பைக் நமக்கு போர் அடிக்கும் வகையில் இருக்காது. இத்துடன், இயக்கத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்காக பல்சர் பி150-இன் பின் பக்கத்தில் மோனோஷாக்கும், முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தது டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்டாகும். இதில் இடம் பெற்றிருந்த இருக்கை அதிக மிருதுவானதாக உள்ளதை எங்களால் உணர முடிந்தது. ஆகையால், சற்று லாங்கான டிராவலைகூட இதில் அசௌகரியம் இன்றி மேற்கொள்ள முடியும். ரைடருக்கான இருக்கை சற்று குறுகிய அகலத்தைக் கொண்டிருந்தாலும், பின் பயணிக்கான இருக்கை தாராளமான அகலத்துடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வாகனம் சற்று அதிக உயரமானதாக இருப்பதால் உயரம் குறைவானவர்கள் இதை இயக்கும்போது சிரமத்திற்கு ஆளாகலாம்.

795 மிமீ உயரம் கொண்டதாக இதன் இருக்கை உயரம் உள்ளது. அதேவேலையில், இதை இலகு ரக வாகனமாக நிறுவனம் உருவாக்கியிருப்பதால் இதை ஹேண்டில் செய்வது அந்தளவு கடினமானதாக இருக்காது என்பது கவனித்தகுந்தது. மேலும், ரைடை கூடுதல் சௌகரியமாக அனுபவிக்க கிளிப்-ஆன் ஹேண்டில் பார் அம்சம் டாப்-ஸ்பெக் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்போர்டி பொசிஷனில் அமர்ந்து பயணிக்க இது மிகுந்த உதவியாக இருக்கும். எங்களுக்கு பர்சனலாக மிகுந்த சுவாரஷ்யமான அனுபவத்தை இந்த அம்சம் வழங்கியது.

குறிப்பாக, பிரேக்கிங் சிஸ்டத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் எங்களை அசத்தலாக உணர வைக்கும் வகையில் இருந்தது. இதன் டூயல் டிஸ்க் பிரேக் வெர்ஷனில் 260 மிமீ டிஸ்க் முன் வீலிலும், 230 மிமீ டிஸ்க் பின் வீலிலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் செட்-அப்பும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. அதேவேலையில், இத்தனை அம்சங்கள் இருந்தும் பைக்கின் லேசான எடை காரணமாக சற்றே அசௌகரியமான உணர்வு ரைடருக்கு ஏற்படலாம். பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை வாங்க தேடுபவர்களுக்கு இந்த பைக் மிக சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 16, 2022, 10:00 [IST]
English summary
Bajaj pulsar p150 ride review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+