இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

கடந்த 2022 ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை நல்லப்படியாகவே இருந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 20.6% அதிக 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் பெரும்பான்மையான 2-வீலர் பிராண்ட்கள் கடந்த மாதத்தில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா 2-வீலர்ஸ், டிவிஎஸ் நிறுவனங்களை தொடர்ந்து இந்தியாவின் 4வது முன்னணி 2-வீலர் பிராண்டாக விளங்கும் பஜாஜ் ஆட்டோவை பொறுத்தவரையில், இது பல்சர் பைக்குகளை நம்பியே கடந்த பல வருடங்களாக சந்தையில் இயங்கி கொண்டிருக்கிறது. தற்சமயம் பஜாஜ் பிராண்டில் இருந்து 125சிசி-250சிசி வரையில் பல்சர் பைக்குகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

கடைசியாக, கடந்த 2022 ஜூன் மாதத்தில் புதிய பல்சர் பைக்காக பல்சர் என்160-ஐ பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது. ரூ.1,22,840 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட என்160 மட்டுமின்றி, பல்சர் என்எஸ்160 மோட்டார்சைக்கிளும் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

கடந்த 2022 ஜூன் மாத விற்பனையை பொறுத்தவரையில், மொத்தம் 83,723 பல்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆனது 2021 ஜூன் மற்றும் 2022 மே மாதங்களை காட்டிலும் முறையே 5.78% மற்றும் 20.92% அதிகமாகும். ஏனெனில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 79,150 பல்சர் பைக்குகளும், கடந்த மே மாதத்தில் 69,241 பல்சர் பைக்குகளுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

வழக்கம்போல் கடந்த 2022 ஜூன் மாதத்திலும் 125சிசி பல்சர் பைக்குகளே வாடிக்கையாளர்களால் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 51,554 பல்சர் 125 பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது, பல்சர் 125 பைக்குகளின் விற்பனை 2021 ஜூனை காட்டிலும் கடந்த மாதத்தில் 9.07% அதிகரித்துள்ளது என்றாலும், 2022 மே மாதத்தை காட்டிலும் 8.59% குறைந்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

ஏனெனில் கடந்த மே மாதத்தில் 56,396 பல்சர் 125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து பெரிய இடைவெளிக்கு பின்னர், பல்சர் 150 பைக்குகள் 16,976 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜூன் மாதத்தில் 23,901 பல்சர் 150 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பல்சர் 150 பைக்குகளின் விற்பனை ஆனது 28.97% வருடம்-வருடம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

ஆனால் 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 155.97% பல்சர் 150 பைக்குகள் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால் கடந்த மே மாதத்தில் வெறும் 6,632 பல்சர் 150 பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. இதேபோன்று கடந்த 2022 மே மாதத்தில் மொத்தமாகவே 6,177 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த பல்சர் 160, 180 & 200 பைக்குகள் கடந்த ஜூனில் 14,802 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

இந்த வகையில் பார்க்கும்போது இந்த பல்சர் பைக்குகளின் கூட்டு விற்பனை ஆனது 139.63% அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்திலாவது பரவாயில்லை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 4,443 பல்சர் 160, 180 & 200 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் இருந்து கடந்த 1 ஆண்டில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்எஸ்160 மற்றும் என்160 பைக்குகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறியலாம்.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

மற்றப்படி பல்சர் 220எஃப் மற்றும் 250 பைக்குகளின் விற்பனை ஆனது கடந்த ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்து வருகிறது. 250சிசி பல்சர் பைக்குகளாக என்250 & எஃப்250 என இரு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆக மொத்தத்தில், 220எஃப், என்250 மற்றும் எஃப்250 என மூன்றையும் சேர்த்து கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 391 யூனிட்களையே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக் எது? 2022 ஜூன் மாத விற்பனை

ஆனால் 2021 ஜூன் மாதத்தில் இவை 3,540 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தன. பல்சர் 250 பைக்குகள் அறிமுகமான நேரம் அது என்பதால், இவ்வாறு அதிகப்படியான விற்பனை எண்ணிக்கைகள் பதிவாகி இருக்கும். கடந்த 2022 மே மாதத்தில் பல்சர் 220எஃப் & 250 பைக்குகள் வெறும் 36 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 11:43 [IST]
English summary
Bajaj pulsar sales breakup june 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+