ஹஸ்க்வர்னா வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்ய தயாராகும் பஜாஜ்... இத யாருமே எதிர்பார்க்கல!
ஹஸ்க்வர்னா (Husqvarna) நிறுவனத்தின் வெக்டர் (Vektorr) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் (Bajaj) நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) மற்றும் பைரர் மொபிலிட்டி (Pierer Mobility) இந்தியாவில் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கூட்டணியின் அடிப்படையில் பைரர் நிறுவனத்திற்கு சொந்தமான கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களைத் தனது உற்பத்தி ஆலையில் வைத்து தயாரித்து வருகின்றது, பஜாஜ் நிறுவனம்.

இந்த நிலையில், ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஓர் புதுமுக மாடல் ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியையே நிறுவனம் தற்போது கையில் எடுத்திருக்கின்றது. தயாரிப்பை மிக விரைவில் தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும், இந்த பணிகள் மிக மிக விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹஸ்க்வர்னா நிறுவனம் வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலைக் கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் வெளியீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் உற்பத்தி பணிகளையே இந்தியாவில் மிக விரைவில் பஜாஜ் தொடங்க இருக்கின்றது. பஜாஜ் தயாரிக்க இருக்கும் ஹஸ்க்வர்னா பிராண்டின் இரண்டாவது தயாரிப்பு இதுவாகும்.

இது பிரீமியம் அம்சங்கள் லோட் செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டராகும். ஆம், விரைவில் பஜாஜ் தயாரிக்க இருக்கும் ஹஸ்க்வர்னா வெக்டர் ஓர் பேட்டரியால் இயங்கக் கூடிய டூ-வீலர் ஆகும். இதில், சிறப்பம்சங்கள் மிக ஏராளமாக இடம் பெற இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆன்டி தெஃப்ட் அலாரம், ரிவர்ஸ் மோட், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வெக்டர் இ-ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன.

ஏற்கனவே பஜாஜ் நிறுவனம், கேடிஎம் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் பலவற்றை தனது தயாரிப்பு ஆலையில் வைத்து உற்பத்தி செய்து வரும்நிலையில், தற்போது ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் தயாரிப்புகளையும் உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கின்றது. ஹஸ்க்வர்னா பிராண்டின் அனைத்து தயாரிப்புகளும் பிரீமியம் தர வாகனமாக காட்சியளிக்கின்றன. இதுபோலவே பிரீமியம் தர அம்சங்களுக்கு சற்றும் குறைவில்லாத வாகனமாக ஹஸ்க்வர்னா இருசக்கர வாகனங்கள் இருக்க போகின்றன.

ஹஸ்க்வர்னா வெக்டர் இ-ஸ்கூட்டரில் மின் மோட்டாரை பொருத்த வரை பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே மோட்டோரே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது ஓர் 5.4 kWh பிரஷ்லெஸ் டிசி மோட்டார் ஆகும். இத்துடன், 3 kWh லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இந்தப் பேட்டரி அதிகபட்சமாக 95 கிமீ ரேஞ்ஜை ஓர் முழுமையான சார்ஜில் வழங்கும். இதன் உச்சபட்ச வேகம் 70 கிமீ ஆகும். ஹஸ்க்வர்னா வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் இடம் பெற இருக்கின்றது. சஸ்பென்ஷனுக்காகப் பின் பக்கத்தில் மோனோஷாக்கும், முன் பக்கத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் ஃபோர்க்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








