மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்! ரூ.86,900க்கு விற்பனைக்கு கிடைக்கும்

பேட்:ஆர்இ (Batt:RE) நிறுவனத்தின் புதுமுக மின்சார ஸ்கூட்டர் ஸ்டோர்:ஐஇ (Stor:ie) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரபல மின்வாகன உற்பத்தி நிறுவனமான பேட்:ஆர்இ (Batt:RE) புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியா மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஸ்டோர்:ஐஇ (Stor:ie) எனும் பெயர் கொண்ட மின்சார ஸ்கூட்டரையே அது நாட்டில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிவித்திருக்கின்றது.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

இதற்கு அறிமுக விலையாக ரூ. 86,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மெட்டல் பேனல்கள் மற்றும் கன்னெக்டட் டிரைவ் உள்ளிட்ட சிறப்பு வசதிகளைக் கொண்டு பேட்:ஆர்இ நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இன்னும் பல முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களும் ஸ்டோர்:ஐஇ வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

பேட்:ஆர்இ நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாடு முழுவதும் உள்ள தன்னுடைய 400 விற்பனையாளர்களிடத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவித்துள்ளது. குறிப்பாக, அரசின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு அது தயாரிக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் ஃபேம்2 மானியம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இது தவிர மாநில அரசின் மானியம் மற்றும் பிற சலுகைகளும் இதற்கு கிடைக்கும் கூறியுள்ளது.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் சில அம்சங்கள் வாகன பிரியர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன. குறிப்பாக ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் திருப்பத்திற்கு திருப்பம் வழி பற்றிய தகவல் வழங்கும் வசதியுடன் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் ஸ்பீடோமீட்டர் பலரின் கவனத்தை கவரும் வகையில் உள்ளது.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

இந்த திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் பிற தகவல்களையும் அறிந்துக் கொள்ள முடியும். இத்துடன், ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் 'கன்னெக்டட் டிரைவ்' அம்சம், அருகாமையில் உள்ள சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களின் இருப்பைக் கண்டறிய உதவும்.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரைடு செய்யும்போது மிக சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய இருக்கை மற்றும் பெரிய ஸ்பேஸ் கொண்ட ஃபூட்போர்ட் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த வாகனம் சூப்பரானதாகக் காட்சியளிக்கின்றது. இதன் அடிப்படையில் வழங்கப்பட்டதே நீடித்து உழைக்கும் மெட்டல் பாடி பேனல்கள் மற்றும் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

ஸ்டோர்:ஐஇ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லூகாஸ் டிவிஎஸ் மோட்டார் மற்றஉம் கன்ட்ரோல்லர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏஐஎஸ் 156 சான்று பெற்றவை ஆகும். இத்துடன், 3.1kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 132 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

இந்த வாகனத்தை தயாரிப்பு நிறுவனம் பல கட்ட ஆய்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, தீ விபத்தில் எளிதில் சிக்கிவிட கூடாது என்பதில் அதிக அக்கறைக் கொண்டு இவ்வாகனத்தை ஸ்டோர்:ஐஇ நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் 1 லட்சம் கிமீ வரை வாகன இயக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடன் பேட்:ஆர்இ ஸ்டோர்:ஐஇ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருப்பதால் அதற்கு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் 20 மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட விற்பனையகங்களைக் கொண்டுள்ளது பேட்:ஆர்இ.

மெட்டல் பேனல், கன்னெக்ட் டிரைவ் அம்சங்களுடன் ஸ்டோரி இ-ஸ்கூட்டர் அறிமுகம்... ரூ. 86,900 விற்பனைக்கு வந்திருக்கு!

இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை அது விற்பனைச் செய்துள்ளது. இந்த நிலையிலேயே புதிய தயாரிப்பை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் தன்னுடைய விற்பனையாளர்கள் வட்டாரத்தை மேலும் மேம்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஆகையால், இன்னும் சில நூறு டீலர்ஷிப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: முதல் மூன்று படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்ட பேட்:ஆர்இ நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 6, 2022, 19:00 [IST]
English summary
Battre launches storie electric scooter on world environment day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+