பைக் டயர்கள் காலாவதி ஆகுமா?.. இந்த சந்தேகத்திற்கான பதில் இதோ!
இருசக்கர வாகனத்தின் ஸ்மூத்தான இயக்கத்திற்கு உதவக் கூடிய டயர்களுக்கு காலாவதி தேதி இருக்குமா என்கிறத சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கக் கூடும். இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இருசக்கர வாகனம் இல்லாத வீடுகளை காண்பது மிக மிக அரிது. அதிலும், பதின் பருவம் கொண்ட இளைஞர்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டில் குறைந்தபட்சம் ஒரு இருசக்கர வாகனமாவது இருந்துவிடும். அந்தளவிற்கு பதின் பருவ இளைஞர்களின் அத்தியாவசிய தேவையாக டூ-வீலர்கள் இருக்கின்றன. இவர்களை போலவே இன்னும் பலருக்கு பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் தேவையாக உள்ளன.

இத்தகைய இருசக்கர வாகனங்கள் சிறப்பாக இயங்க டயர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இந்த டயர்களை எந்தளவு சிறப்பாக பராமரிக்கின்றோமே அந்தளவு மிக சிறப்பான இயக்க அனுபவத்தை நம்மால் இருசக்கர வாகனத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இதில், ஆச்சரியம் என்னவென்றால் சில டயர்களை என்னதான் பாதுகாப்பாக பொத்தி பொத்தி பத்திரப்படுத்தி வைத்தாலும் அவை விரைவில் பழுதாகிவிடுகின்றன.

உதாரணமாக டயரின் சுற்று சுவரில் விரிசல் ஏற்படுதல், தானாகவே டயர் உதிர்தல் மற்றும் கிழிதல் போன்றவற்றிற்கு ஆளாகும். பொதுவாகவே ஓர் டயர் 5-6 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் வரை மட்டுமே அவற்றை பயன்படுத்த உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். சில டயர்கள் இந்த குறிப்பிட்ட காலத்தைத் தாண்டியும் பயன்படுகின்றன.

அதேவேலையில், ஒரு சில டயர்கள் இந்த குறிப்பிட்ட காலத்திற்கும் குறைவான ஆயுட்காலத்தைக் கொண்டதாக இருக்கின்றன. பெரியளவில் பயன்பாடு இல்லை என்றாலும் சில டயர்கள் காலப்போக்கில் தேய்மானத்தைச் சந்திக்கின்றன. இவ்வாறு டயர்கள் திடீரென பழுதாவதற்கு முன்னரே மாற்றிக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா?, அதாவது, உணவு பொருட்கள் மற்றும் பிற பயன்பாட்டு பொருட்களில் வழங்கப்படுவதைப் போல காலாவதி நாள் டயருக்கு உண்டா?, அதை எப்படி கண்டறிவது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ஒவ்வொரு டயர் உற்பத்தியாளரும் தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு டயரிலும் அவற்றிற்கென தனி தயாரிப்பு எண் மற்றும் தயாரிக்கப்பட்ட தேதி உள்ளிட்ட விபரங்களை வழங்குவர். இந்த தகவல்கள் டயரின் பக்கவாட்டு சுவரில் வழங்கப்பட்டிருக்கும். பொதுவாகவே மூன்று இலக்க எண்ணால் அது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த மூன்று இலக்க எண்களே டயர் உற்பத்தி செய்யப்பட்ட வாரம் மற்றும் வருடத்தைக் குறிக்கும்.

உதாரணமாக உங்கள் மோட்டார்சைக்கிளில் இருக்கும் டயரில் 529 என்ற எண் இடம் பெற்றிருக்கின்றது என வைத்துக்கொள்ளுங்கள். இந்த டயர் டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டது ஆகும். இதையே முதல் இரண்டு எண்களான 52 கூறுகின்றது. அதாவது, டயர் குறிப்பிட்ட ஓர் ஆண்டின் 52 வாரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதையே அந்த எண் காட்டுகின்றது.

கடைசி எண் ஆண்டைக் குறிக்கும். அது, 2019 அல்லது 1999 அல்லது 1989 அல்லது 1979 என எந்த ஆண்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். சில நேரங்களில் நான்கு இலக்க எண்களும் டயர்களில் பன்படுத்தப்படும். உதாரணமாக 2322 என டயரில் எழுதப்பட்டுள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு 2018ம் ஆண்டின் 23 வாரத்தில் தயாரிக்கப்பட்டது என்பது அர்த்தம் ஆகும்.

டயர்கள் ஸ்மூத்தான இயக்கத்திற்கு மட்டுமல்ல பாதுகாப்பான பயணத்திலும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. பழுதான அல்லது பழைய டயர்கள் மிகுந்த ஆபத்தானவை. அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் அல்லது காற்றில்லாமல் இயக்கமற்ற நிலைக்கு சென்று விடலாம். எனவேதான் டயர் விஷயத்தில் மிக அதிக கவனம் தேவை என கூறப்படுகின்றது. மேலும், எந்த விதமான ஆபத்தான சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே டயர் உற்பத்தியாளர்கள் காலாவதி தேதியை வழங்குகின்றனர்.

ஏற்கனவே கூறியதைப் போல் ஓர் டயர் ஆறு ஆண்டுகள் வரை மட்டுமே நல்ல நிலையில் இருக்கும். அதேவேலையில், அதிக ஈரப்பதம் இல்லாத மற்றும் அதிகம் வெப்பம் இல்லாத இருட்டான அறைகளில் வாகனங்களை நிறுத்துவதன் வாயிலாக டயரின் ஆயுலை அதிகரிக்கச் செய்ய முடியும். அதிக உஷ்னம் மற்றும் வெப்பம் இவையே டயருக்கு மிகப் பெரிய எதிரியாகும். வாகனம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் விரைவில் அது பழுதாக இந்த இரண்டே முக்கிய காரணமாக உள்ளன.

இவற்றில் இருந்து டயரை பாதுகாக்க அதாவது ஆக்ஸிஜனேற்றத்தில் இருந்து டயரை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். அல்லது, வேறு ஏதேனும் பைகளைக் கொண்டு டயரை மூடி வைக்கலாம். இவ்வாறு செய்வதன் வாயிலாக டயர்களின் ஆயுட்காலத்தை லேசாக அதிகப்படுத்த முடியும்.

காலாவதி நாள்:
உங்கள் வாகனத்தில் உள்ள டயர் அடிக்கடி காற்றை வெளியேற்றுவிடுகின்றது அல்லது பஞ்சர் ஆகின்றது என்றால் அது காலாவதி தேதியை நெருங்கிவிட்டது என்று அர்த்தம். டயர் பலவீனமடைகின்ற நிலையிலேயே இந்த அறிகுறிகளை எல்லாம் காண்பிக்கும். அதேவேலையில், போதுமான அளவில் பராமரிக்கவில்லை என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சந்திக்கும். சரியான அளவு காற்றை நிரப்பாமல் இருத்தல், கரடு-முரடான சாலையில் வாகனத்தை இயக்குதல், அதிக வெப்பமான பகுதிகளில் வாகனத்தை பார்க் செய்தல் மற்றும் கூடுதல் சுமையை ஏற்றிச் செல்லுதல் போன்றவற்றால் டயர்கள் விரைவில் தேய்மானம் அடைந்து இறக்க நேரிடுகின்றன.

அந்தவகையில், உங்கள் பைக்கில் உள்ள டயர் 37 சதவீதம் தேய்ந்துவிட்டது என்றாலும் அதை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அர்த்தமாகும். இதுமட்டுமின்றி டயர் மாற்றப்பட்ட ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதை சரிபார்ப்பது நல்லது. குறிப்பாக பின் பக்க டயர்கள் விரைவில் தேய்மானம் அடையக் கூடியதாக இருப்பதால் முன் பக்கத்தைக் காட்டிலும் பின் பக்க டயர்கள் அதிக கவனம் தேவை.


Click it and Unblock the Notifications








