மழையில போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பைக்கை கழுவி விடலாமா? இதனால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்?..
மழையில் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் நம்முடைய பைக்கை சுத்தம் செய்யலாமா என்பதற்கான பதிலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த சுவாரஷ்யமான தகவலுக்குள் போகலாம், வாங்க.

மழைக் காலம் தொடங்கி விட்டாலே வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்படும் மிகப் பெரிய கவலையாக, வாகனங்கள் விரைவில் அசுத்தமாதல் இருக்கின்றது. குறிப்பாக, திடீரென பொழியும் மழை நம்மை எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடுகின்றது. இந்த நிலையால் வாகனங்கள் மீண்டும் அசுத்தமாதல் மற்றும் மழையால் ஏற்படும் சில பாதிப்பிற்கும் உள்ளாகிவிடுகின்றது.

எனவேதான் மழைக் காலத்திற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்கின்றனர் வாகன ஆர்வலர்கள். ஆனால், இதை பெரும்பாலானோர் கண்டுக் கொள்வதே இல்லை. அதாவது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அவர்கள் தவறிவிடுகின்றனர்.

மேலும், மழைக்கு முன்னாடி மட்டும்தான் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டுமா, அதுக்கு பின்னாடி எடுக்கக் கூடாதா என சிலர் கேட்பதுண்டு. இத்தகையோருக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மழைக்கு பின்னர் பைக்கை சுத்தம் செய்யலாமா என்பதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தாராளமாக வாகனத்தை கழுவலாம். ஆனால், நம்முடைய வாகனம் குளிரும் வரை காத்திருக்க வேண்டும். வாகனத்தில் ஏற்பட்டிருக்கும் உஷ்னம் குறையும் முன் தண்ணீரை ஊற்றி கழுவுவதனால் குறிப்பிட்ட சில பாகங்கள் பாதிக்கப்படலாம். எனவே வாகனத்தில் இருக்கும் வெப்பம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். இதேபோல், மழை நீரை சுத்தப்படுத்திய உடன் சுத்தமான மற்றும் மிகவும் சாஃப்டான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தல் வேண்டும். இந்த உலர வைத்தால் நீரால் ஏற்படும் துரு பாதிப்பைக் குறைக்க உதவும்.

செயின் மற்றும் ஸ்பிராக்கெட்:
மழையின்போது பயணிப்பதால் இருசக்கர வாகனத்தின் செயின் மற்றும் ஸ்பிராக்கெட் பகுதிகளில் தானாக மண் மற்றும் பிற சகதிகள் வந்து சேர நேரிடும். இதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டால் சங்கிலியும், ஸ்பிராக்கெட்டும் விரைவில் பாதிப்படையும். எனவே, இந்த கருவிகள் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கின்றது.
வாகன உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட க்ளீனர் அல்லது க்ரீசை ஆகியவற்றை பயன்படுத்துவது மிக மிக அவசியமானது ஆகும். முன்னதாக துணி அல்லது காற்றைக் கொண்டு செயினை உலர வைப்பது மிக மிக சிறந்தது.

இன்ஸ்ட்ரூமென்ட் கேஜ் க்ளஸ்டர் மற்றும் எல்இடி திரை:
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கும், எல்இடி திரைக்கும் மிகப் பெரிய வில்லன் தண்ணீர் என்பது நாம் யாரும் மறுக்க முடியாத ஒன்று. ஆகையால், இந்த பகுதியில் மழை நீர் நுழைந்துள்ளதா என்பதை முதலில் சோதித்துக் கொள்வது நல்லது. இதைத்தொடர்ந்து, வாகனத்தைக் கழுவும்போது அதிக கவனத்துடன் இந்த பகுதிகளை கையாளுதல் வேண்டும்.

சஸ்பென்ஷன் சிஸ்டம்:
மழை நீரால் பதிக்கப்படும் மோட்டார்சைக்கிளின் முக்கியமான பாகங்களில் சஸ்பென்ஷன் அமைப்பும் ஒன்று. பள்ளம், மேடுகள் நிறைந்த (கரடு முரடான) சாலைகள் மட்டுமல்ல அழுக்கு மற்றும் சகதிகளும் சஸ்பென்ஷன் செட்-அப்பிற்கு ஆபத்தானவையாக காட்சியளிக்கின்றது. எனவே மழையில் ரைடு சென்று வந்த பின்னர் நாம் சுத்தம் செய்ய வேண்டிய முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

சஸ்பென்ஷனை சுத்தம் செய்த பின்னர் சிலிகான் லூப்ரிகேஷனை அங்கு தெளிக்க வேண்டும். இது தேவையற்ற உராய்வுகளைத் தவிர்க்கும். இவை அனைத்தையும் முடிந்த அளவு மழையில் ரைடு செய்து பின்னர் வீடு திரும்பிய பின்னர் உடனடியாக செய்வது மிக சிறப்பானது.

மேலே பார்த்த வழிக்காட்டுதல்களை மேற்கொள்வதனால் வாகனம் பல ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும் தன்மையைப் பெறும். குறிப்பாக, மழை நீர் மற்றும் சகதியால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாக தவிர்க்க முடியும். மிக முக்கியமாக டூ-வீலரை வாஷ் செய்யும்போது ஹைட்லைட் இருக்கும் பகுதியை சற்று கவனமாக கையாள வேண்டும்.

இந்த பகுதி மிகவும் சென்சிடிவானது. பல முக்கிய ஒயர் கனெக்சன்கள் இந்த பகுதியிலேயே இடம் பெற்றிருக்கும். இதனை நாம் தொந்தரவு செய்துவிட்டால் வாகனம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். இதுமட்டுமில்லைங்க, மின்சாதன பொருட்களை செயலற்றதாகக் கூட நாம் செய்யும் செயல் மாற்றிவிடலாம். ஆகையால், அதிக கவனத்துடன் வாகனத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








