கொழு கொழு பையன் வந்துட்டான்... ஆஹா இந்த வண்டி இந்திய சாலையில ஓட போகுதா!!
பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் அதன் புகழ்பெற்ற சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனம் இன்றைய தினம் இந்திய சந்தையில் 2023 எஸ் 1000 ஆர்ஆர் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக நிகழ்விலேயே நிறுவனம் சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்துள்ளது. இந்த இருசக்கர வாகனம் ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவில் ரூ. 9 லட்சத்திற்கும் அதிகமான விலையில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இப்போது இந்த மின்சார ஸ்கூட்டர் வெளியீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விலைகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே தனது பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது.

வெளியீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவல் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் 4 மணி நேரம் 20 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜ் போட இந்தளவு குறைந்த நேரமோ போதும் என பிஎம்டபிள்யூ மோட்டாராட் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஒரு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் சுமார் 130 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இது நல்ல ரேஞ்ஜ் திறன் ஆகும்.
இந்த சூப்பர் ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், அதிகபட்சமாக 42 எச்பி பவர் வரை வெளியேற்றக் கூடிய 15 கிலோவாட் மோட்டார் இந்த மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.6 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் திறன் கொண்டதாக இந்த மோட்டார் இருக்கின்றது.

இதேபோல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக வேகத்திலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். 6.9 kW ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்யும்போது ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் அதை ஃபுல்லாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக நம்முடைய நேரத்தை பெருமளவில் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சூப்பரான தயாரிப்பாக இருக்கின்றது.
அந்தவகையில், 10.25 அங்குல பெரிய திரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த திரை வாயிலாக ரைடு மோடை நம்மால் அக்சஸ் செய்து கொள்ள முடியும். ஈகோ, ரோடு மற்றும் மழை ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. உயர் ரக டிஎஃப்டி திரையே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுமட்டுமில்லைங்க, நேவிகேஷன் மற்றும் பிற மக்கிய தகவல்களையும் இந்த திரையில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இருசக்கர வாகனத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் ட்யூப்ளர் ஸ்டீல் ஃபிரேமில் உருவாக்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க முற்றிலும் தனித்துவமான தோற்றத்தில் இதனை வடிவமைத்துள்ளது. ஸ்கேட் போர்டு ஸ்டைலில் இதனை நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும், பிரத்யேகமாக பெஞ்ச் போன்ற இருக்கை, கட்டுமஸ்தான பாடி பேனல்கள் உள்ளிட்டவை அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவற்றுடன், மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக 35 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கும் சிஇ 04 எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 15 அங்குல வீலே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் கொழு கொழு தோற்றத்திற்கு ஏற்ப 120 செக்சன் டயர் முன் பக்கத்திலும், 160 செக்சன் டயர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றுடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரட்டை 265 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், சிங்கிள் டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஏபிஎஸ் ப்ரோ பிரேக்கிங் சிஸ்டமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய மிக சூப்பரான பிரீமியம் அம்சஙக்ள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே பிஎம்டவிள்யூ மோட்டாராட் தற்போது இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதன் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் ஈர்க்கக் கூடியதாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








