இந்த கொழுகொழு பாய் நம்ம வீட்டுக்கு வருவானு எதிர்பாக்கவே இல்ல! நாளை அறிமுகமாகுது பிஎம்டபிள்யூ சிஇ04 இ-ஸ்கூட்டர்

எதிர்பார்த்திராத ஓர் இருசக்கர வாகனத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் நாளை நம் வீட்டுக்கு அழைத்து வர (இந்தியாவில் வெளியீடு செய்ய) இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழு கொழு பையனைப் போல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான அம்சங்கள் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டாராட் எனும் பெயரில் இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் அனைத்து டூ-வீலர்களும் பிரீமியம் தர வாகனங்களாகும். நிறுவனத்தின் கணிசமான பிரீமியம் தர இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே விரைவில் புதிதாக ஓர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் இணைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிஇ04

சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த மின்சார இருசக்கர வாகன பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. நாளைய (டிசம்பர் 10) தினமே இருசக்கர வாகனத்தின் அறிமுகம் நம் நாட்டில் அரங்கேற இருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளன. இந்த இருசக்கர வாகனம் இந்தியாவிற்குதான் புதிது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆமாங்க, ஏற்கனவே உலக சந்தையில் பிஎம்டபிள்யூ சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கின்றது. அமெரிக்காவில் இது 11,795 டாலர்களுக்கு விற்கப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 9 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். இந்தியாவிலும் இதேபோல் மிக உயரிய விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்தியர்கள் மத்தியில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சிஇ04

இந்த நிலையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓர் கொழு கொழு பையனைப் போல் உருவாக்கியிருக்கின்றது. இந்த தோற்றமே அனைவரையும் கவரும் வகையில் இருக்கின்றது. இதுவரை எந்தவொரு இருசக்கர வாகன உற்பத்தியாளரும் தயாரித்திராத தனித்துவமான தோற்றம் இதுவாகும். ஸ்கேட் போர்டு ஸ்டைலிலேயே இதன் தோற்றம் உள்ளது.

இதற்காக கட்டுமஸ்தான உடல் பேனல்கள் சிஇ 04-இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க பிரீமியம் வசதிகள் விசயத்திலும் இந்த ஸ்கூட்டர் மிக சிறப்பான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் ஃபுல் சார்ஜ் செய்தால் 129 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், மணிக்கு 121 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டாரும் இதில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது.

சிஇ04

இது வெறும் 2.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டாரின் எச்பி திறன் 42 ஆகும். இதனை 4,900 ஆர்பிஎம்மிலேயே வெளியேற்றும். இதேபோல், 1,500 ஆர்பிஎம்மி-லேயே 62 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த சூப்பரை திறனை வெளியேற்ற லிக்யூடு கூல்டு வசதிக் கொண்ட பெர்மனென்ட் மேக்னட்டே மோட்டாரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் மற்றும் 20 நிமிடங்கள் போதுமானது. எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர மின்விளக்கு, முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இணைப்பு தொழில்நுட்ப வசதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அளவு 10.25 அங்குலம் என கூறப்படுகின்றது. இத்தகைய பெரிய திரையே ரைடரின் பன்முக தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் இணைக்கும் பட்சத்தில் பன்முக முக்கிய தகவல்களை செல்போன் திரை வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் பற்றிய தகவலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் திரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். இதுபோன்று, இன்னும் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாக பிஎம்டபிள்யூ சிஇ-04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. தானியிங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி உள்ளிட்டவையும் இந்த இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 9, 2022, 20:29 [IST]
English summary
Bmw ce04 electric scooter india launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+