தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் எஃப் 850 பிஎஸ் (F 850 GS) மற்றும் எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் (F 850 GS Adventure) ஆகிய பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள் குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இன்றைய தினத்தை (தமிழ் புத்தாண்டை) சிறப்பிக்கும் விதமாக எஃப் 850 ஜிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் ஆகிய இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இரண்டும் பிஎஸ்6 தர டூ-வீலர்களாகும். அறிமுகத்தைத் தொடர்ந்து இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் தற்போது புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது விற்பனையாளர்கள் வாயிலாக புக் செய்து கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

இரு மோட்டார்சைக்கிள் மாடல்களையும் பிஎம்டபிள்யூ சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. ஆகையால் அவை சற்று அதிக விலைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. எஃப் 850 ஜிஎஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 12.5 லட்சமும், எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் ப்ரோவிற்கு ரூ. 13.5 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை வரும் ஜூன் மாதம் டெலிவரிக் கொடுக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இரு பைக்குகளின் பக்கமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மூன்று ஆண்டுகள், கெடு இல்லாத கிமீ வாரண்டியை பிஎம்டபிள்யூ மோட்டாராட் அறிவித்திருக்கின்றது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் வாரண்டியை நான்கு மற்றும் ஐந்தாண்டுகள் என நீட்டித்துக் கொள்ளும் வசதியையும் நிறுவனம் வழங்குகின்றது.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

இத்துடன், 24X7 ரோட் சைடு அசிஸ்டண்ட் வழங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதனை பேக்கேஜ் திட்டத்தின் அடிப்படையில் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரே மாதிரியான பெயர்களை இரு பைக்குகள் கொண்டிருந்தாலும், அவை தோற்றத்தில் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. இருப்பினும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரு பைக் மாடல்களும் ஒரே மாதிரியான காட்சியளிக்கின்றன. அதேநேரத்தில், தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் இவை கணிசமான கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

இருப்பினும், எஃப் 850 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை இன்னும் பல மடங்கு சிறப்பான டூ-வீலராக காட்டும் விதமாக சில பேக்கேஜை பிஎம்டபிள்யூ மோட்டாராட் வழங்க இருக்கின்றது. அதன் வாயிலாக, அப்பைக்கை மிகுந்த அட்டகாசமான பைக்காக மாற்றிக் கொள்ள முடியும்.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

பேக்கேஜில், ஹேண்ட் புரெடக்டர் பார்கள், பிளாக் ஃபிக்ஸட் ஃபோர்க் ட்யூப்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். இதுமட்டுமின்றி கோல்டு நிற ரிம், கல்வனைஸ்ட் ரேடியேட்டர் கவுல் உள்ள லக்சூரி அம்சங்களும் இந்த பைக் மாடலில் கொடுக்கப்படும். இதுமட்டுமின்றி ரேல்லி வாகனமாக காட்சிப்படுத்தக் கூடிய இன்னும் சில அலங்காரப் பொருட்களும் வழங்கப்படும்.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

இதுபோலவே அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மாடலாக எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் ப்ரோ காட்சியளிக்கின்றது. இது நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற டூ-வீலர் ஆகும். இதற்கேற்ப பன்முக வசதிகளை இப்பைக்கில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வழங்கியிருக்கின்றது. டிஎஃப்டி திரை, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ஏபிஎஸ் ப்ரோ மற்றும் டிடிசி ஆகிய அம்சங்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

இதுமட்டுமின்றி இன்னும் கூடுதல் சிறப்பானதாக இப்பைக் மாடலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக சில பேக்கேஜ் திட்டங்களை பிஎம்டபிள்யூ மோட்டாராட் அறிவித்துள்ளது. ஸ்டைல் ரேல்லி அல்லது ஸ்டைல் ட்ரிபிள் பிளாக் எனும் பேக்கேஜ்களே அறிவிக்கப்பட்டுள்ளன. இவை பைக்கை ஓர் ப்ரோ ரக வாகனம் போல் காட்சியளிக்க உதவும்.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இரு பைக் மாடல்களிலும் லிக்யூடு கூல்டு 4 வால்வு, 2 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 853 சிசி திறன் கொண்ட மோட்டாராகும். இந்த மோட்டாரில் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக ஃப்யூவர் இன்ஜெக்சன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க ஒரே நாளில் இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... 2ம் தரமான பைக்குங்க!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 95 எச்பி பவரையும், 92 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இப்பைக்கில் மழை மற்றும் சாலை பயணம் ஆகிய ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பாதுகாப்பாக பயணத்திற்கு உதவும் வகையில் ஏபிஎஸ் மற்றும் ஏஎஸ்சி தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 14, 2022, 21:27 [IST]
English summary
Bmw f 850 gs and bmw f 850 gs adventure launched in india here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+