தரமான மோட்டார்சைக்கிள்... விலை குறைவான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்!
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் அதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) எனும் பெயரில் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடனான கூட்டு முயற்சியின் அடிப்படையில் அதன் தயாரிப்புகளை நம் நாட்டிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே நிறுவனம் புதுமுக இருசக்கர வாகன மாடலான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த பைக் இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்டபிள்யூ ஜி 310 பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் மூன்றாவது தயாரிப்பு இதுவாகும். இதனை இந்தியாவில்தான் முதல் முறையாக நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்தே உலக நாடுகளுக்கு புதுமுக பைக் வர்த்தக பணிக்காக பயணிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

உலகளவில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு கிடைத்து வரும் வரவேற்பை முன்னிட்டே இந்த குடும்பத்தில் புதிதாக ஜி 310 ஆர்ஆர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

ஜி 310 ஆர்ஆர் பெயருக்கான காரணம்:
ரோட்ஸ்டர் ரக வாகனம் என்பதை குறிக்கும் வகையிலேயே நிறுவனம் 'ஆர்' எனும் எழுத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், புதுமுக பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆர்ஆர்-க்கு வேறு அர்த்தம் உள்ளது. ரோட் ரேசிங் ஸ்போர்ட்ஸ் பைக் என்பதை குறிக்கும் வகையிலேயே ஜி 310 ஆர்ஆர் என பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.

வேரியண்ட் விபரமும், விலை விபரமும்:
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் இருவிதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் ஸ்டைல் ஸ்போர்ட் (BMW G 310 RR Style Sport) ஆகும். முதல் ஒன்று ரூ. 2.85 லட்சத்திற்கும், இரண்டாவது தேர்வு ரூ. 2.99 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

குறைவான டவுண்பேமெண்டில் வாங்கலாம்:
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த குறைந்த விலை பைக்கின் பக்கம் இருசக்கர லவ்வர்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்டு குறைந்த டவுண்பேமெண்டில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இத்துடன், மாதத் தவணை ரூ. 3,999 செலுத்தும் நிதித் திட்டத்திலும் பைக்கை வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது. இத்துடன், அக்ஸசெரீஸ் மற்றும் இன்சூரன்ஸுக்கும் நிதி வழங்குவதற்கான ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ மோட்டாராட் தெரிவித்துள்ளது.

பைக்கின் ஸ்டைல்:
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கை அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடலான எஸ் 1000 ஆர்ஆர் பைக்கின் டிஎன்ஏ-வை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் ஸ்டைல் உள்ளது. மேலும், சாலையில் மிகவும் பவர்ஃபுல்லாகவும் அது இயங்கும். மேலும், பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஆர்ஆர் பிராண்டின் கிராஃபிக்குகள் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், மிகவும் பிரத்யேகமான ஏரோடைனமிக் தோற்றமும் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில், பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மெட்டல்கள் பல இலகு ரக எடைக் கொண்டதாக உள்ளன. பைக்கின் கூடுதல் கவர்ச்சிக்காக ஷார்ப்பான முகப்பு பகுதி, முழு எல்இடி தர ஹெட்லைட், பெரிய டிரான்ஸ்பெரன்ட் விசர் மற்றும் ப்யூர் பிளாக் ஹேண்டில் பார்கள் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன் பெட்ரோல் டேங்கை கட்டிபிடித்துக் கொண்டிருப்பைதப் போன்ற அமைப்புடைய இருக்கை, எஞ்ஜினின் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய கில் வெண்டுகள் உள்ளிட்டவையும் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, மிக சிறப்பான இயக்க அனுபவத்திற்காக அப்சைடு-டவுண் ஃபோர்க், அலுமினியம் ஸ்விங்கார்ம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஹேண்டில் பார் ஆகியவையும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 313 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் சிறப்பு வசதியாக எலெக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்சன் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 9,700 ஆர்பிஎம்மில் 25kW பவரையும், 7,700 ஆர்பிஎம்மில் 27.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த மோட்டார் வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்ட வைக்கும் திறன் கொண்டது என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. மேட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இயங்குகின்றது. இத்துடன், பன்முக ரைடிங் மோட்களும் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ட்ராக், அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கில் ஏபிஎஸ், ரைடு பை ஒயர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் த்ரோட்டில் கன்ட்ரோல்லர், மல்டி ஃபங்க்சனல் 5 அங்குல டிஎஃப்டி திரை (ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது), இன்ஃபோடெயின்மென்ட் கன்ட்ரோல் சுவிட்ச் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








