அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக் டெலிவரியில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) பைக், கடந்த ஜூலை 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 2.85 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ( TVS Apache RR 310) பைக்கிற்கும், புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக்கிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் காஸ்மெட்டிக் விஷயத்தில் மட்டுமே இரண்டு பைக்குகளும் வேறுபடுகின்றன. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கலர் ஆப்ஷன்கள் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கானது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் ரீ-பேட்ஜ் வெர்ஷன் ஆகும். அத்துடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்கனவே கூட்டணி இருந்து வருகிறது என்பதும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயங்களில் ஒன்று.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கில், 313 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,700 ஆர்பிஎம்மில் 34 பிஹெச்பி பவரையும், 7,700 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. சக்தி வாய்ந்த இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

பிரேக்கிங்கை பொறுத்தவரை இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கின் டெலிவரியில் தற்போது புதிய மைல்கல் ஒன்றை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் கடந்துள்ளது.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

இந்திய சந்தையில் வெறும் 100 நாட்களுக்கு உள்ளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்குகளை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் டெலிவரி செய்து அசத்தியிருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் பெரிய விஷயம் என்பதில் நமக்கு எள் அளவும் சந்தேகமில்லை.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

100 நாட்களில் 1,000 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்குகள் டெலிவரி என்பது, சராசரியாக ஒரு நாளைக்கு 10 பைக்குகள் டெலிவரி என்பதை குறிக்கிறது. அத்துடன் வரும் மாதங்களில் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே இருக்கின்றன.

அதுக்குள்ள இவ்ளோ பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா... எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த புதிய பைக்!

ஏனெனில் பண்டிகை காலத்தின்போது இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கிற்கு 2,200க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. எனவே பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 29, 2022, 18:29 [IST]
English summary
Bmw g 310 rr reaches 1000 deliveries milestone in india in 100 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+