அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனம், 2022 ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் விலையுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையேக் கீழே உள்ள பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் 2022 ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) பைக்கை இந்தியா இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. உலக சந்தையில் இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கணிசமான அப்டேட்டுகளுடன் இந்த அட்வென்சர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 3.10 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2021 வெர்ஷனைக் காட்டிலும் ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த கூடுதல் விலைக்கு புதிய நிற தேர்வுகளும் ஓர் காரணமாக இருக்கின்றது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிதாக காஸ்மிக் பிளாக் 3, ஸ்டைல் ரேல்லி கலமடா மெட்டாலிக் மேட் மற்றும் ரேசிங் ப்ளூ மெட்டாலிக் ஆகிய நிற தேர்வுகளிலேயே பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த புதிய நிற தேர்வுகள் விற்பனைக்கு வந்திருப்பதால் முன்னதாக விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து நிறங்களும் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இன்றைய (ஜூலை 15) தினம் மற்றுமொரு பைக்கையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) பைக்கையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதன் அறிமுகப்படுத்தைத் தொடர்ந்தே பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜி 310 ஜிஎஸ் பைக்கையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கில் நிறுவனம் 313 சிசி லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலண்டர் மோட்டாரைப் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முழு எல்இடி தர லைட்டுகள், அட்ஜெஸ்டபிள் லிவர்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகிய அம்சங்கள் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பைக்கில் அட்வென்சர் பயணத்தை ரம்மியமானதாக மாற்றும் பொருட்டும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அவற்றில் முக்கியமானவைகளாக யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. இதில், மோனோஷாக் பைக்கின் பின் பக்கத்திலும், யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யுஎஸ்டி ஃபோர்க் கோல்டன் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ஏபிஎஸ் அம்சத்துடன் சேர்த்து வீலின் இரு முனைகளிலும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரேக்கிங் அம்சம் மிக சிறப்பான நிறுத்தத்தை வழங்கும். பிஎம்டபிள்யூவின் இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கேடிஎம் 250 அட்வென்சர், கேடிஎம் 390 அட்வென்சர், சுஸுகி வி ஸ்ட்ராம் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கைப் போலவே தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கும் சுஸுகி மற்றும் கேடிஎம்ம நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. நிறுவனத்தின் மலிவு விலை பைக்காக அது காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக்காகவும் அது காட்சியளிக்கின்றது.

அட்வென்சர் பைக் பிரியரா நீங்க? 2022 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ. 2.85 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும். இதனை பிஎம்டபிள்யூ நிறுவனம், டிவிஎஸ் நிறுவனத்துடனான கூட்டணியின்கீழ் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் (BMW G 310 RR) மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் ஸ்டைல் ஸ்போர்ட் (BMW G 310 RR Style Sport) ஆகிய இரு விதமான தேர்வுகளில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 15, 2022, 18:28 [IST]
English summary
Bmw motorrad launched 2022 g 310 gs adv bike in india at inr 3 10 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+