யப்பா இவ்ளோ அதிக விலையில பைக்கா! தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக புதிய பிஎம்டபிள்யூ பைக் அறிமுகம்!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட எஃப் 900 எக்ஸ்ஆர் (BMW F 900 XR) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad), அதன் புதுப்பிக்கப்பட்ட டூ-வீலர் மாடல் ஒன்றை நாட்டில் இன்று (ஏப்ரல் 14) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக நிறுவனம் எஃப் 900 எக்ஸ்ஆர் (F 900 XR) எனும் மாடலையே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இதற்கு அறிமுகமாக ரூ. 12.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் ஓர் மிடில் வெயிட் அட்வென்சர் (MiddleWeight ADV) ரக பைக்காகும். இந்த பைக்கை நிறுவனம் 2020 ஆண்டில்தான் முதல் முறையாக அது அறிமுகப்படுத்தியது.

தற்போது பன்முக அப்டேட்டுகளுடன் அது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. புதிய பிஎஸ்6 எஞ்ஜின், புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 2022 பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் சிபியூ வாயிலாகவே இந்தியாவில் விற்பனைக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால்தான் இதன் விலை பல மடங்கு அதிகமானதாக காட்சியளிக்கின்றது. இப்பைக்கின் டெலிவரி பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. ஜூன் 2022இல் அப்பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்டேட்ஸ் கணிசமாகவே செய்யப்பட்டுள்ளன. ஆகையால், அதன் ஸ்டைல் பெரியளவு மாற்றமின்றி அப்படியே இருக்கின்றது.

லைட் ஒயிட் மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் ரேசிங் ரெட் ஆகிய வண்ண தேர்வுகளில் இந்த பிஎம்டபிள்யூ பைக் விற்பனைக்குக் கிடைக்கும். ட்யூவல் ஹெட்லேம்ப், சிறிய விஷர் மற்றும் ஷார்பான முகம் உள்ளிட்டவற்றுடன் எஃப் 900 எக்ஸ்ஆர் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. இதன் எரிபொருள் தொட்டி செதுக்கியது போன்ற தோற்றத்திலும், கிரே பேனல்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 43 மிமீ கோல்டு நிற அப்சைடு டவுண் ஃபோர்க், 17 இன்ச் அளவுள்ள அலுமினியம் வீல்கள் உள்ளிட்டவையும் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 320 மிமீ அளவுள்ள ட்வின் டிஸ்க்குகளுடன் கூடிய 4 பிஸ்டன் ப்ரெம்போ ரேடியல் காலிபர்கள் முன் பக்க வீலிலும், பின் பக்க வீலில் 265 மிமி ஒற்றை டிஸ்க் சிங்கிள் பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபருடன் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, அனைத்து சாலைகளையும் சமாளிக்கின்ற விதமான 120/70 XR 17 அளவுள்ள டயர் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 180/55 ZR 17 அளவுள்ள டயரும் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறந்த எஞ்ஜின் திறனுக்காக பிஎஸ்6 தர 895 சிசி வாட்டர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்-லைன் 2 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் 103 பிஎச்பி பவரையும், 92 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க உச்சபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனையும் அது கொண்டுள்ளது. மேலும், 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் சூப்பரான பவரையும் இந்த மோட்டார் கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கில் 6.5 இன்ச் அளவுள்ள முழு வண்ண டிஃப்டி திரையை வழக்கமான அம்சமாக வழங்குகின்றது. இத்துடன், புதிய அம்சம் சேர்ப்பாக, சாவியே இல்லாமல் ரைடு செய்யும் வசதி, சென்டர் ஸ்டாண்டு, பகல்நேரத்திலும் எரியும் மின் விளக்கு, கியர் ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ உள்ளிட்ட வசதிகளை வழங்கியிருக்கின்றது. இதுதவிர, கூடுதல் சிறப்பு வசதியை வழங்கும் விதமாக சில பிரத்யேக பேக்கேஜ்களையும் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








