இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), இந்தியர்களைப் பொறாமைப்பட வைக்கின்ற அளவிற்கு அதிக சிறப்பு வசதிகளுடன் அதன் லிமிடெட் எடிசன் ஆர்1250ஜிஎஸ் (Limited Edition R1250 GS) பைக்கை வெளிநாட்டு சந்தை ஒன்றிற்காக வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

பிரபல பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad), அதன் புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. லிமிடெட் எடிசன் பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் (Limited Edition R1250 GS) மோட்டார்சைக்கிளையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இந்த இருசக்கர வாகனம் பிரத்யேகமாக பிரெஞ்சு நாட்டு சந்தைக்கானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

ஸ்பிரிட் ஆஃப் ஜிஎஸ் எடிசன் எனும் பெயரிலேயே இவ்வாகனம் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த வாகனத்தை மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இதனை பிஎம்டபிள்யூ மோட்டாராட் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆமாங்க, 1250 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்காக நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் ஸ்பிரிட் ஆஃப் ஜிஎஸ் எடிசன் எனும் பிரத்யேக சின்னத்துடன் உடன் சேர்த்து இன்னும் பல அம்சங்கள் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பிரத்யேக ஆரஞ்சு மற்றும் கிரே நிற கிராஃப்பிக்குகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, மூன்று வகையான கருப்பு நிறங்களால் இந்த இருசக்கர வாகனம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

இதைத்தொடர்ந்து, ஆரஞ்சு நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்ட அலுமினியம் பிட்டுகள், ஹேண்டில் பார் கிளாம்ப் உள்ளிட்டவையும் இந்த சிறப்பு பதிப்பில் சிறப்பு அலங்காரமாக வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், பைக்கின் வீல் மற்றும் அலுமினியம் ஹேண்ட்குவார் ஆகியவற்றிலும் கவர்ச்சியான தோற்றத்தை சேர்க்கும் வகையில் சிறப்பான அலங்கார அணிகலன்களை பிஎம்டபிள்யூ சேர்த்திருக்கின்றது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

இதுமாதிரியான வேலைப்பாடுகளால் பைக் இன்னும் பல மடங்கு அழகானதாக மாறியிருக்கின்றது. இதன் அழகை மேலும் மெருகேற்றும் வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆர்1250 ஜிஎஸ் பைக்கில் எஞ்ஜின் கிராஷ் குவார்ட், சம்ப் குவார்ட் மணற்றும் ஸ்மோக்கட் விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மோட்டார்சைக்கிளை ப்ரோ ரக பைக்கை போல் காட்சியளிக்கச் செய்கின்றது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

இந்த சிறப்பு மாற்றங்களைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கவில்லை. அதாவது, வழக்கமான பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக்கில் என்ன மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதோ அந்த எஞ்ஜினே தற்போது பிரெஞ்சு நாட்டிற்காக வெளியீடு செய்யப்ப்டடிருக்கும் ஆர் 1250 ஜிஎஸ் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

1,250 சிசி திறன் கொண்ட மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் இருசக்கர வாகனத்திற்கு இந்திய சந்தையில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம் 50 இயர்ஸ் ஆஃப் ஜிஎஸ் எடிசன் இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்த வெகு விரைவில் இந்தியர்கள் வாங்கியே தீர்த்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் அண்மையில் இந்திய சந்தையில் 2022 ஜி 310 ஜிஎஸ் (G 310 GS) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் கொண்ட அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 3.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இது 2021 வெர்ஷனைக் காட்டிலும் ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

இந்த பிஎம்டபிள்யூ பைக்கில் நிறுவனம் 313 சிசி லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக இந்த பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முழு எல்இடி தர லைட்டுகள், அட்ஜெஸ்டபிள் லிவர்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியர்களையே பொறாமை பட வச்சிட்டாங்களே! தரமான பைக்கை பிரெஞ்சுக்காரர்களுக்காக அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

மேலும், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதில், மோனோஷாக் பின் பக்கத்திலும், யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை அடுத்து மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ஏபிஎஸ் அம்சத்துடன் கூடிய டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2022, 18:36 [IST]
English summary
Bmw motorrad unveiled limited edition r1250 gs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+