உலக சாதனை படைத்த இந்திய படை வீரர்கள்... ராயல் என்பீல்டு பைக் இல்லாம இத அவர்களால் செஞ்சிருக்கவே முடியாது!

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தி உலக சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 350 சிசி பைக்கை இருசக்கர வாகனமே சாகசத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்லையை பாதுகாக்கும் படை வீரர்கள் உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்து இருக்கின்றனர். தாங்கள் எல்லையை பாதுகாப்பதில் மட்டுமே கைதேர்ந்தவர்கள் அல்ல வாகன சாகசத்திலும் கை தேர்ந்தவர்கள் என்பதை விளக்கும் பொருட்டு அவர்கள் இருசக்கர வாகனங்கள் சார்ந்து உலக சாதனையைப் படைத்து உள்ளனர். இதற்காக அவர்கள் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தையே பயன்படுத்தி இருக்கின்றனர்.

சாதனை

இருசக்கர வாகனம் சார்ந்து உலக சாதனைப் படைத்திருக்கும் அனைத்து வீரர்களும் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். முதல் நபர் ராயல்என்பீல்டு பைக்கில் 12 அடி, 10 அங்குல ஏணியை நிறுத்தி வைத்து அதன் மீது நின்றவாறு இருசக்கர வாகனத்தை இயக்கினார். வேறு நபரின் உதவி இன்றி தனியாக இருசக்கர வாகனத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 மணி நேரம் 26 நிமிடங்கள் வரை அவர் இவ்வாறே பயணித்தார்.

ஒட்டுமொத்தமாக 174.1 கிமீ வரை இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருசக்கர வாகனத்தில் ஏணி அமைத்து வெகு நீண்ட நேரம் மற்றும் தூரம் தனி ஆளாக ஓர் நபர் இருசக்கர வாகனத்தை இயக்குவது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு அடுத்தபடியாக பெண் இன்ஸ்பெக்டர் ஆறு மணி நேரம் வரை இருசக்கர வாகனத்தின் நின்றவாறே பயணித்து சாதனைப் படைத்தார்.

சாதனை

178.06 கிலோ மீட்டர் தூரம் வரை அவர் இவ்வாறே இருசக்கர வாகனத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பயணம் 6 மணி நேரம் 03 செகண்ட் வரை மேற்கொள்ளப்பட்டது. இடையில் ஒரு முறைகூட அவர் பிரேக் பிடிக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு முன்னதாக இந்த அளவு நீண்ட தூரம் இதுபோன்று யாருமே இவ்வாறு இருசக்கர வாகனத்தை இயக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவேதான் படை வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் உலக சாதனையாக மாறி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது எல்லை படை வீரர் இருசக்கர வாகனத்தில் படுத்தபடியே சுமார் 2 மணி நேரம் இயக்கி உலக சாதனைப் படைத்தார். அவர் 70.2 கிலோ மீட்டர் வரை படுத்தபடியே பயணித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மூன்று சாதனைகளும் லிம்கா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளன.

சாதனை

இந்த அனைத்து சாதனைகளும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்கைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன. ஏணியின் மீது நின்றவாறு இருசக்கர வாகனத்தில் பயணித்து சாதனை படைத்த வீரர் அவதேஷ் குமார் சிங் ஆவார். இவர் இந்திய எல்லை படையின் ஜான்பஸ் டேர்டெவில் மோட்டார்சைக்கிள் டீமைச் சேர்ந்தவர் ஆவார். படுத்தபடியே சாதனைப் படைத்தவர் விஷ்வஜீத் பாட்டியா ஆவார். இவரும் ஜான்பஸ் டேர் டெவில் மோட்டார்சைக்கிள் டீமைச் சேர்ந்தவரே ஆவார்.

இருசக்கர வாகனத்தின்மீது நின்றவாறு பயணித்து சாதனை படைத்திருக்கும் பெண் படை வீரரின் பெயர் ஹிமன்ஷி சிரோஹி ஆகும். இவர் கேப்டைன் சீமா பாவனியின் குழுவைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய படை வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பின்போது இதுபோன்று சாகச ரைடு மேற்கொள்வது வழக்கம். ஆனால், இதனையே இப்போது எல்லை படை வீரர்கள் உலக சாதனைச் செய்து அனைத்து நாடுகளையும் இந்தியா பக்கம் திருப்பி இருக்கின்றனர்.

ஜான்பாஸ் குழு 1990 இல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. எல்லை பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட அனைத்துமே ராயல் என்பீல்டின் 350 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளையே பயன்படுத்தியே நான்கவதாக ஓர் படை வீரரும் உலக சாதனை படைத்திருக்கின்றார். அவர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது நீண்ட தூரம் நின்றவாறு பயணித்து சாதனைப் படைத்திருக்கின்றார். 1 மணி நேரம் 40 நிமிடங்கள் அவர் பெட்ரோல் டேங்க் மீது நின்றவாறு பயணித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 59.1 கிமீ தூரம் அவர் இந்த சாதனைப் படைத்தார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 26, 2022, 15:39 [IST]
English summary
Border security force creates world record
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+