பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் இ-ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) அதன் இ1 (E1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி பிளிப்கார்ட் வர்த்தக தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவித்துள்ளது. முதற் கட்டமாகக் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் அது விற்பனைக்குக் கிடைக்கும். அவை எந்த மாநிலங்கள் என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity), அதன் புதுமுக மின்சார ஸ்கூட்டர் இனி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart)-ல் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1) இருக்கின்றது.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நிறுவனம் இன்று (ஜூலை 22) முதல் ஆன்லைன் வர்த்தக தளம் பிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புக் செய்யப்பட்ட 15 நாட்களுக்கு உள்ளாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி கொடுக்கப்படும் என்றும் பவுன்ஸ் அறிவித்துள்ளது.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

வீட்டு உபயோகப் பொருட்கள் தொடங்கி பல்வேறு அத்தியாவசிய பொருட்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தளமாக பிளிப்கார்ட் இருக்கின்றது. இந்த தளத்திலேயே மிக சுலபமாக வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிக் கொள்ளும் விதமாக பவுன்ஸ் இன்ஃபினிட்டி அதன் இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

ஆனால், நாட்டின் அனைத்து மாநில வாசிகளாலும் பிளிப்கார்ட் தளத்தை பயன்படுத்தி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியாது நிலை நிலவுகின்றது. ஏனெனில், நிறுவனம் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

புது தில்லி, குஜராத், கர்நாடகா, தெலங்கானா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களே அவை ஆகும். இந்த மாநில வாசிகளால் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிளிப்கார்ட்டை பயன்படுத்தி வாங்கிக் கொள்ள முடியும். இந்த மாநிலங்களில் மட்டுமே முதல் கட்டமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பேட்டரி இல்லாமலும், பேட்டரி கொண்ட தேர்வாகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பேட்டரி அல்லாத இ1 மின்சார ஸ்கூட்டர் ரூ. 56,099ஐ மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

இந்த ஆப்ஷனில் இ1 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அதன் பேட்டரியை வாடகை திட்டத்தின் வாயிலாக வழங்கும். மிக மிகக் குறைவான கட்டணத்தில், முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அப்பேட்டரிகளை ஸ்வாப்பபிள் மையங்கள் வழங்க வாயிலாக வழங்க இருக்கின்றது நிறுவனம்.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

அதேநேரத்தில் பேட்டரியுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ. 79,999 ஆகும். வாடகை முறையில் பன்முக தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 1, ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 2, ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 3, ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 4 என நான்கு வகையான ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 83 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய பிஎல்டிசி மின் மோட்டார் மற்றும் ஐபி67 தர 2 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது மட்டுமே இந்த உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெற முடியும்.

பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்த பவுன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... குறிப்பிட்ட மாநில வாசிகளால் மட்டுமே வாங்க முடியும்!

ஈகோ, பவர், ரிவர்ஸ் , க்ரூஸ் மற்றும் டிராக் என பன்முக ரைடிங் மோட்கள் இ1 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை அதன் ராஜஸ்தான் பிவாடி உற்பத்தி ஆலையில் வைத்தே மேற்கொண்டு வருகின்றது. இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட்டுகள் மின் வாகனங்களை தயாரிக்க முடியும். இது தவிர தென்னிந்தியாவிலும் ஓர் புதிய ஆலையை அமைக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2022, 14:07 [IST]
English summary
Bounce infinity e1 e scooters cames on sale through flipkart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+