Bounce Infinity E1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் தொடக்கம்... டெலிவரி எப்போ கொடுக்க போறாங்க தெரியுமா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை பவுன்ஸ் இன்ஃபினிட்டி நிறுவனம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்க இருக்கும் தேதி பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

இந்திய மின் வாகன பிரியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த வாகனங்களில் இ1 (E1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஒன்று. இது, பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாகும். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

ஆனால், நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் வைத்தே நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளையும் உற்பத்தி செய்ய இருக்கின்றது. மேலும், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இ1 மின்சார ஸ்கூட்டரையும் இங்கேயே பவுன்ஸ் இன்ஃபினிட்டி உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் பவுன்ஸ் நிறுவனம் இ1 மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை தற்போது தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெருமளவில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனம் கூடுதல் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதாவது, பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 மின்சார ஸ்கூட்டர் எப்போது டெலிவரி கொடுக்கப்படும் என்பது பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. நிறுவனம் வரும் ஏப்ரல் 18ம் தேதி முதலில் இருந்தே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

பவுன்ஸ் நிறுவனம் ரூ. 499 என்ற மிகக் குறைந்தபட்ச முன் தொகையில் இ1 மின்சார ஸ்கூட்டருக்கு ப்ரீ புக்கிங்கை ஏற்று வருகின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். அதாவது, பேட்டரி அல்லாதது மற்றும் பேட்டரி கொண்டது என இரு விதமான தேர்வில் வாங்கிக்க முடியும்.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

பேட்டரி அல்லாத இ1 மின்சார ஸ்கூட்டர் மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, பேட்டரியுடன் வாங்கும்போது 79,999 ரூபாயையும், பேட்டரி மற்றும் வீட்டிற்கான சார்ஜர் வசதிகள் இல்லாத நிலையில் வாங்கும் போது ரூ. 56,099ஐ மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆப்ஷனில் இ1 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அதன் பேட்டரியை வாடகை வாயிலாக வழங்கும்.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

குறிப்பிட்ட கட்டணத்தின் அடிப்படையில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை நிறுவனத்தின் ஸ்வாப்பபிள் மையங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதனை, 'பேட்டரி ஓர் சேவை' (battery as a service) எனும் பெயரில் நிறுவனம் வழங்க இருக்கின்றது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

இதற்காக ரென்ட் பேட்டரி ஆப்ஷன்1, ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 2, ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 3, ரென்ட் பேட்டரி ஆப்ஷன் 4 என நான்கு வகையான ஆப்ஷன்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய சூப்பரான ஆப்ஷன்களில் கிடைக்கக் கூடிய இ1 மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளையே பவுன்ஸ் இன்ஃபினிட்டி தற்போது தொடங்கியிருக்கின்றது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

ராஜஸ்தான் பிவாடி உற்பத்தி ஆலை அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட்டுகள் மின் வாகனங்களை தயாரிக்க முடியும். அந்தளவிற்கு சூப்பரான திறன் வாய்ந்ததே அது. இத்துடன், சேர்த்து மற்றுமொரு உற்பத்தி ஆலையையும் நாட்டில் அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது தென்னிந்தியாவில் அமைய இருக்கின்றது. இந்த புதிய ஆலை ஆண்டிற்கு ஐந்து லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறனில் அமைக்கப்பட இருக்கின்றது.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 83 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய பிஎல்டிசி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் வெறும் எட்டே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ வேகம் ஆகும்.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

இத்துடன் அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கும் விதமாக ஐபி67 ரேட்டட் 2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 48வோல்ட், 39AH திறன் கொண்ட பேட்டரி பேக்காகும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு கிடந்தோம்... இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடக்கம்!

குறைந்த வேகத்தை வழங்கும் ஈகோ மோடில் வைத்து இயக்கும்போதே இந்த அதிகபட்ச பயண தூரத்தை பெற முடியும். இதுதவிர, பவர் மோட், ரிவர்ஸ் மோட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிராக் மோட் உள்ளிட்டவை இ1 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்போர்ட்டி சிவப்பு (Sporty Red), ஸ்பார்க்கிள் கருப்பு (Sparkle Black), பியர்ல் வெள்ளை (Pearl White), டெசாட் வெள்ளி (Desat Silver) மற்றும் காமெட் சாம்பல் (Comet Grey) ஆகிய ஐந்து விதமான நிற தேர்வுகளில் இ-ஸ்கூட்டரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 7, 2022, 15:20 [IST]
English summary
Bounce infinity starts production e1 deliveries begin from april 18
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+