புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பழமையான பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் பிராண்டை இங்கிலாந்தில் மறுஉயிர் பெற வைத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிஎஸ்ஏ பிராண்டில் இருந்து புதிய 650சிசி மோட்டார்சைக்கிளாக கோல்டு ஸ்டார் என்கிற பெயரில் மாடல் வெளியீடு செய்யப்பட்டது. இதன் உலகளாவிய அறிமுகம் இந்த 2022 மார்ச் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

அதாவது இந்த மார்ச் மாதத்தில் இருந்து யுகே உள்ளிட்ட சந்தைகளில் கோல்டு ஸ்டாருக்கான முன்பதிவுகள் துவங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்னமும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் எங்கும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம், பிஎஸ்ஏ டீலர்ஷிப் மையங்களை கட்டமைக்கும் பணியில் தற்சமயம் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

இந்த பணிகள் நிறைவு பெறுவதற்கு எப்படியிருந்தாலும் 2022 மே மாதமாகிவிடும் என கூறப்படுவதால், அதிகாரப்பூர்வ விலைகள் அறிவிக்கபட்டு வருகிற மே மாதத்தில் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டாரின் முன்பதிவுகள் துவங்கப்படலாம். அதனை தொடர்ந்து டெலிவிரிகளை 2022 ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த குறிப்பிட்ட மாதங்களில் முன்பதிவுகள் & டெலிவிரிகள் யுகே-வில்தான் முதலாவதாக துவங்கப்பட உள்ளன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

மற்றப்படி இந்திய சந்தைக்கு கோல்டு ஸ்டார் 650 பைக்கை கொண்டுவருவதற்கான எந்தவொரு திட்டத்திலும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தற்போதைக்கு இல்லை. ஆனால் வரும் ஆண்டுகளில் நிச்சயமாக கோல்டு ஸ்டார் 650 பைக் நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், கோல்டு ஸ்டார் 650 இந்தியாவில் உள்ள கிளாசிக் லெஜண்ட்ஸின் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட உள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

ஆனால் இவை எல்லாம் விரைவாக நடக்க வேண்டுமென்றால், இங்கிலாந்தில் இந்த பிஎஸ்ஏ பைக் திட்டமிட்டப்படி விரைவாக விற்பனைக்கு கொண்டுவரப்பட வேண்டும். அங்கு தாமதமாகினால், இந்திய வருகையும் தாமதமாகும். யுகே-வை தொடர்ந்து கோல்டு ஸ்டார் 650 பைக்கை அமெரிக்க நாடுகளில் அறிமுகப்படுத்த கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

ஆனால் உண்மையில், இந்த வளர்ந்த நாட்டு சந்தைகளை எல்லாம் பிஎஸ்ஏ-விற்கு முன்னதாகவே நமது ராயல் என்பீல்டு பிடித்துவிட்டது. இங்கிலாந்தில் (விரைவில் அமெரிக்காவிலும்) பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கிற்கு நேரடி போட்டி மாடலாக ராயல் என்பீல்டின் 650 இரட்டை (இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650) பைக்குகள் விளங்குகின்றன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

யுகே மற்றும் அமெரிக்க சந்தைகளில் போதுமான எண்ணிக்கையில் ஷோரூம்களை கட்டமைத்த பிறகே இந்திய சந்தையை பற்றி கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் யோசிக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு இந்திய அறிமுகம் தொடர்ந்து தாமதமாகி கொண்டே இருந்தாலும், கோல்டு ஸ்டார் 650 பைக்குகள் முதற்கட்டமாக முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டே யுகே-விற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

ஆனால் யுகே-வில் புதிய அசெம்பிள் தொழிற்சாலை நிறுவப்பட்டு வருவதால், கோல்டு ஸ்டாரின் தயாரிப்பு பணிகளை பின்னர் பாதி இந்தியாவிலும், மீதி யுகே-விலும் மேற்கொள்ள கிளாசிக் லெஜண்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்ஏ பிராண்டில் யுகே நாட்டு அரசாங்கம் சொந்தமாக எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்துவரும் தொழிற்சாலை உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய அசெம்பிள் தொழிற்சாலை வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் பிரிட்டிஷ் தொழில் நிறுவனமான ரெட்லைன் ஸ்டூடியோஸ்-ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சேசிஸை நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் பொறியியலாளரான ரிகார்டோ டிசைன் செய்துள்ளார். அதுவே, இந்த பைக்கின் ஒற்றை-சிலிண்டர் என்ஜின் ஆஸ்திரியன் பொறியியல் நிறுவனமான ரோடக்ஸ் மற்றும் க்ராஸ் தொழில் பல்கலைகழகத்தின் மூலமாக பெறப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் இந்திய வருகையில் மீண்டும் தாமதம்!! எல்லாவற்றிற்கும் இதுதான் காரணமா?

இதன்படி கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 652சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 45 எச்பி மற்றும் 55 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2022, 11:56 [IST]
English summary
Bsa gold star uk launch delayed expected launch may 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+