பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் போல் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கும் பைக்குகள் லிஸ்ட்!

இந்தியாவின் மலிவு விலை ஏபிஎஸ் பைக்காக பஜாஜ் பிளாட்டினா 110 இருக்கின்றது. ஏபிஎஸ் அம்சத்தை பெறும் முதல் 110 சிசி பைக்கும் இதுவே ஆகும். இந்த பைக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னரே பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களுக்கும் பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பஜாஜால் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்பே இது ஆகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 72,224 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஏபிஎஸ் அல்லாத நிலையிலும் பிளாட்டினா 110 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைக் காட்டிலும் சற்று அதிக விலைக் கொண்டதாக ஏபிஎஸ் அம்சம் கொண்ட பிளாட்டினா 110 இருக்கின்றது. ஏபிஎஸ் அம்சம் இதில் வழங்கப்பட்டிருப்பதாலேயே அதன் விலை சற்று அதிகமாக உள்ளது. இதைவிட குறைவான விலையைக் கொண்ட பைக்குகளும் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மோட்டார்சைக்கிள்

பஜாஜ் சிடி 110 எக்ஸ்

பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிகக் குறைவான விலைக் கொண்ட பைக் மாடல்களில் சிடி 110 எக்ஸ்-ம் ஒன்று. ஏழை மற்றும் எளிய மக்களுக்கும் இருசக்கர வாகனம் சென்று சேர வேண்டும் என்பதன் அடிப்படையில் மலிவு விலையில் இந்த பைக்கை பஜாஜ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவே நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கஃபே ரேஸர் ரக பைக்காகும். இந்த பைக்கிற்கு முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கியிருக்கின்றது.

வட்ட வடிவ ஹெட்லைட், அடர் கருப்பு நிற சிறிய விண்ட்ஷீல்டு மற்றும் எஞ்ஜின் குவார்ட் உள்ளிட்டவை பைக்கின் தோற்றத்திற்கு முரட்டுத் தனமான லுக்கை வழங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் பெரும்பாலான பகுதிகளை கருப்பு நிறம் ஆட்சி செய்யும் வகையில் பல்வேறு பகுதிகளில் அந்நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 115 சிசி டிடிஎஸ்-ஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டிவிஎஸ் ஸ்போர்ட்:

பஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடலாக டிவிஎஸ் ஸ்போர்ட் இருக்கின்றது. இதன் விலை ரூ. 69,293 ஆகும். இந்த விலையிலேயே செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் போன்ற சிறப்பு வசதிகளை டிவிஎஸ் நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ஸ்போர்ட் பைக்கை 2007லேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது அதிகம் மைலேஜ் தரும் இருசக்கர வாகனம் ஆகும்.

லிட்டர் ஒன்றிற்கு 75 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த பைக்கை இரு விதமான தேர்வுகளில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கிக் ஸ்டார்டர் மற்றும் செல்ஃப் ஸ்டார்டர் என இரு விதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டும் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்கப்படுகின்றன. கிக் ஸ்டார்ட் 64 ஆயிரத்து 050 ரூபாய்க்கும், செல்ஃப் ஸ்டார்ட் 69 ஆயிரத்து 293 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகளே ஆகும்.

ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ்:

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெஸ்ட்டான கம்யூட்டர் ரக மோட்டார்சைக்கிள்களில் ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ்-ம் ஒன்று. இந்த பைக் நீடித்து உழைக்கும் தன்மை, குறைவான பராமரிப்பு செலவு மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றிற்கு பெயர்போனதாக உள்ளது. இதன் விலை ரூ. 70,315 ஆகும். இதுவே நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடலாகும். தினமும் அடிஅடி என அடித்தாலும் இந்த பைக்கை இயக்குவது போர் அடிக்காது. அதேவேலையில், கலைப்பான அனுபவமும் ஏற்படாது. இதனால்தான் பலரின் பிரியமான டூ-வீலராக இது இருக்கின்றது.

டிவிஎஸ் ரேடியான்:

டிவிஎஸ் நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடலாக ரேடியான் உள்ளது. ஏபிஎஸ் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் பஜாஜ் பிளாட்டினாவைக் காட்டிலும் இதன் விலை சற்று அதிகம். இதற்கு இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் கூடுதல் அம்சங்களே முக்கிய காரணமாக உள்ளது. டிஸ்க் பிரேக், டிஜிட்டல் திரை என எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் இதன் விலை பட்ஜெட்டுக்குள்ளேயே உள்ளது. ரூ. 74 ஆயிரம் இதன் விலை ஆகும். 110 சிசி மோட்டாரே ரேடியானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹீரோ பேஷன் ப்ரோ:

நீண்ட காலமாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடலாக ஹீரோ பேஷன் ப்ரோ இருக்கின்றது. இதன் விலை ரூ. 77,408 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக் செல்ஃப் ஸ்டார்ட், டிஸ்க், அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் 113 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் நீடித்து உழைக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2022, 18:37 [IST]
English summary
Budget price entry level commuter motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+