தமிழ்நாட்ல டிரைவிங் லைசென்ஸ் இல்லாம புது பைக் வாங்க முடியாதா?.. உண்மை நிலை என்ன?
டிரைவிங் லைசென்ஸ் இல்லாம தமிழ்நாட்டுல புதிய இருசக்கர வாகனத்தை (பைக் மற்றும் ஸ்கூட்டரை) வாங்க முடியுமா?, இந்த கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால், நம்மால் இருசக்கர வாகனத்தை வாங்க முடியாது என அர்த்தம் கிடையாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமலே டூ-வீலரை வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் நம் தமிழகத்தில் நிலவுகின்றது. உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலைக் கொண்ட இருசக்கர வாகனத்தை வாங்க பான் அட்டை இருந்தால் போதும் என விதிகள் கூறுகின்றன. ஆம், டிரைவிங் லைசென்ஸ் இல்லாத நிலையில், பான் கார்டை வழங்கி புதிய டூ-வீலரை வாங்கிக் கொள்ள முடியும். இதேபோல், கற்றல் உரிமத்தை காண்பித்தும் புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பலவழிகளில் ஓட்டுநர் உரிமம் இல்லாமலே இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, உரிமையாளரின் பெயரில் இல்லாமல், வேறு ஒரு நபரின் பெயரிலும் கூட இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்துபவர்களும் மாநிலத்தில் உள்ளனர். இத்தகைய குளறுபடிகளே தற்போது இருசக்கர வாகன விஷயத்தில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதையே அரசு களையும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சரி, இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்றால் என்னென்ன ஆவணங்கள் நம் கையில் இருக்க வேண்டும்?
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- அட்டஸ்ட் செய்யப்பட்ட டிரைவிங் லைசென்ஸ் (அல்லது) பான் கார்டு, இரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் (இந்த நிலையே ஓட்டுநர் உரிமம் இல்லை என்றாலும் இருசக்கர வாகனம் விற்கப்படும் நிலைக்கு காரணமாக இருக்கின்றது).
- நிரந்தர முகவரிக்கான சான்று (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, எல்ஐசி அட்டை)
- மின்சார அட்டை (பில்)
- லேண்ட் லைன் தொலைபேசி பில்
- குடும்ப அட்டை
- வீட்டு வரி ரசீது
- இன்டெக்ஸ் II
- வாடகை வீட்டிற்கான ஒப்பந்த சான்று
- நில உரிமையாளரின் மின்சார பில்
- நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் பெறப்பட்ட சான்று
- உண்மையான அஃபிடேவிட் சான்று

மேலே பார்த்த ஆவணங்கள் இல்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களாவது குறைந்தபட்சம் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்கள் கட்டாயம் அட்டஸ்டட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு வேலை நீங்கள் வேறொரு ஊரைச்சேர்ந்தவர் தற்போது தொழில் அல்லது பிற காரணங்களுக்காக மற்றொரு நகரத்தில் வசிக்கிறீர்கள், அங்கு இருசக்கர வாகனம் வாங்க போகிறீர்கள் என்றால், அப்போது தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் இதோ:
உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றாலும் மேலே பார்த்த ஆவணங்களை வைத்து தமிழகத்தில் புதிய இருசக்கர வாகனத்தை சுலபமாக வாங்கிவிட முடியும்.

இருசக்கர வாகன விஷயத்தில் மட்டுமே இந்த சுலபமான சூழல் நிலவுகின்றது. இதுவே, பிற வாகனம் வாங்க செல்ல வேண்டியிருந்தால் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் சமர்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக நாம் ஓர் வணிக பயன்பாட்டிற்கான வாகனத்தை வாங்க முற்படுகின்றோம் எனில் பிரத்யேகமாக இதற்கான லைசென்ஸை நாம் சமர்பிக்க வேண்டும். தமிழகத்தில் பன்முக லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. வழக்கமான வெள்ளை பதிவெண் பிளேட்டுகள் கொண்ட வாகனத்தை இயக்குவதற்கான உரிமம் மற்றும் மஞ்சள் பதிவெண் பிளேட்டுகள் கொண்ட வர்த்தக வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் என வெவ்வேறு லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல், ஹெவி லைசென்ஸும் கனரக வாகனங்களை இயக்குவதற்காக வழங்கப்படுகின்றது. இந்த மாதிரியான வாகனங்களை வாங்க செல்கையில் கட்டாயம் அந்தந்த வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் இருந்தாக வேண்டும். ஆனால், இந்த கட்டாய லைசென்ஸ் விதி இருசக்கர வாகனத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பயிற்சி பெறுவதற்கான லைசென்ஸ் வைத்திருந்தாலே டூ-வீலரை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுகின்றது.

எனவே தமிழ்நாட்டில் இருசக்கர வாகனம் வாங்குவது மிகவும் சுலபமான செயல்முறையாகும். இதேபோல், டூ-வீலருக்கான லைசென்ஸ் பெறுவதும் தமிழகத்தில் மிக மிக சுலபம். நீங்கள் 18 வயதுடையவர் என்றால் எந்த தடையும் இன்றி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். இத்துடன், நாம் இருசக்கர வாகனத்தை இயக்க தகுதி உடையவரா, இல்லையா என்பதை ஆர்டிஓ அதிகாரி முன்பு செய்து காட்ட வேண்டும்.

இவை அனைத்தும் வெற்றிகரமாக செய்துக்காட்டும் பட்சத்தில் உங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும். இதைக்கூட சிலர் வாங்காமல் கற்றல் உரிமத்தை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த உரிமத்திற்கு 6 மாதங்கள் மட்டுமே வேலிடிட்டி ஆகும். இது காலாவதியான 30 நாட்களுக்குள் மீண்டும் புதுப்பிக்க முடியும். இதை புதுப்பிப்பது மிகவும் சுலபமானது.

அதேநேரத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர்களுக்கு வாகனத்தை டெலிவரி செய்யும் டீலர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற விதி தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. சிறைத்தண்டனை மட்டுமல்ல அபராதமும் இதற்கு விதிக்கப்படுகின்றன. இருப்பினும், ஒரு சிலர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தவிர்க்கும் விதமாக உரிமம் இல்லாத நபர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்வதை நிறுத்துமாறு டீலர்களுக்கு மாநில போக்குவரத்துத் துறை வலியுறுத்திய வண்ணம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








